|
||||
|
184
பேருடன் மாறியது மு.கா: நல்லாட்சிக்காய் பாடுபடபோவதாக சூளுரை எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரரிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தில் தாம் வகித்த அமைச்சு, பிரதியமைச்சு பதவிகள் உள்ளிட்ட சகல பதவிகளிலிருந்தும் உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்ட மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தத் தீர்மானத்தை அறிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் தீர்மானத்தினை முடிவெடுத்து அறிவிக்கும் பொறுப்பு, கட்சியின் உயர் பீடத்தினால் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்லாமல், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஏகோபித்த கருத்துக்கிணங்க, கட்சியின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புரைகளுக்கு அமைவாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென முடிவெடுத்திருக்கிறோம். இத்தீர்மானத்தின் மூலம் கட்சியை பாதுகாக்கும் அதேவேளை, நாட்டில் இருக்கின்ற நிர்வாகச் சீர்கேடுகள், குறிப்பாக 17ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய சரத்துக்களை நீக்கி 18ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டமையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம். நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற ஒருவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற நல்லெண்ணத்தினாலேயே 18ஐ நாங்கள் ஆதரித்தோம். இருந்தபோதிலும் 17ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அனைத்து சரத்துக்களையும் நீக்குவதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. இருந்தபோதிலும், இறுதி நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக பாவத்துக்கு துணைபோயிருந்தோம். நாங்கள் விட்ட அந்த தவறுக்காக பல இடங்களில் நேரடியாகவே ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியிருந்தோம். அந்த அடிப்படையில், இந்த நாட்டில் ஜனநாயக நடைமுறைகளில், நல்லாட்சி சம்பந்தமான விடயங்களில் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகள், விளைவுகளுக்கு 17ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த பல சரத்துக்குள் 18இல் இல்லாதொழிக்கப்பட்டமையே பிரதான காரணமாக இருக்கிறது. அவற்றை மீளமைப்பதற்கான வாய்ப்பு, பொதுவேட்பாளரினை ஆதரிப்பதனூடாக நமக்கு ஏற்பட்டிருக்கிறது. பாவப் பிராயச்சித்தமாக நாங்கள் இதனைக் கருதுகிறோம். இவ்விடத்தில் ஆட்சியாளர்களை தாறுமாறாக விமர்சிப்பதை விடவும் நல்லாட்சிக்கான அம்சங்களை மீள அறிமுகப்படுத்துவதில் மீளெழுச்சி கொண்ட ஒரு பலமான இயக்கமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படும். 17ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப் படுத்துவதில் நாங்களும் பங்குதாரராக இருந்திருக்கிறோம். இருந்தபோதிலும் அதனை இல்லாதொழித்து 18ஐ உருவாக்குகின்ற பாவச் செயலுக்கு நாங்களும் துணை போயிருக்கிறோம். தெரியாமல் நிர்ப்பந்திக்கப்பட்டதனால் இந்த தவறான முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆகையினால், வேறெந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், எஞ்சியிருக்கும் 7 நாட்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - முழு மூச்சுடன் பிரசாரங்களை மேற்கொள்ளும் என்பதனைத் தெரிவித்துக் கொள்வதோடு, இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார் ஹக்கீம். இதனடிப்படையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் 163 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தமாக 184 உறுப்பினர்களின் ஆதரவு, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |