Contact us at: sooddram@gmail.com

 

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண தெரிவுக்குழுவே சிறந்த பொறிமுறை

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவே சிறந்த பொறிமுறையாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் எத்தகைய தீர்வுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என தெரிவித்த ஜனாதிபதி; சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கு சகல கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தீர்மானமே சிறந்த தீர்வாக அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

1948ம் ஆண்டு நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபோதிலும் அன்றிலிருந்து மக்கள் அனுபவித்த சுதந்திரம்- சுபீட்சத்தை விட அதிகமாக பயங்கரவாதத்தை ஒழித்த பின்னரான இந்த குறுகிய காலத்தில் மக்கள் அனுபவித்து வருகின்றனர். அதற்கான சூழ்நிலையை நம் நாட்டில் உருவாக்கியுள் ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையின் 64வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி; பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சகலரும் இணைந்து செயற்பட்டது போல நாட்டைப் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பு வதிலும் ஒன்றிணைய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இலங்கையின் 64 வது சுதந்திர தின விழா நேற்று அநுராதபுரம் நகரில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் நன்மையில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் டி. எம். ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜ பக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், ராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்;

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட குறுகிய காலத்திற்குள் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரங்களைப் பயன் படுத்தி அரசாங்கத்தை அமைக்கவும் வீழ்த்தவும் செயற்பட்டயுகம் ஒன்றிலிருந்தது நாம் ஜனநாயகத்தை மதிக்கின்றோம். அதற்கிணங்கவே பாராளுமன்றம், நீதி மன்றம் ஆகியவற்றினூடாக நல்லாட்சியை வழங்குகின்றோம். மக்களுக்கான உரிமை களை வழங்குவதிலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும் நாம் ஆசியாவில் சிற ந்த நாடாகத் திகழ்கிறோம். நிறைவேற்று அதிகாரத்தை மக்களுக்கு எதிராகப் பயன் படுத்த முடியாது. நல்லிணக்க ஆணைக்குழு வின் அறிக்கை கடந்த டிசம்பர் 17ம் திகதியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நாம் அதில் உரிய கவனம் செலுத்தியுள் ளோம். குறு கிய 6 வார காலத்தில் அதனை நடை முறைப்பத்துவதில் முக்கியமான நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளோம்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் யுத்தத்தைக் காரணங்காட்டி மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியவைகள் அற்றுப்போனது. தற்போது மக்களுக்கு சகலதும் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. தொழில் வாய்ப்பற்ற நிலையிலிருந்து தொழில் வாய்ப்புக்கும் இருளிலிருந்து சுபீட்சத்துக்கும் மக்கள் பயணிக்கின்றனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட் டதையடுத்து மின்சாரம், நீர், பாதைகள் போன்ற பொதுவசதிகள் கல்வி, உயர்கல்வி, சுகாதாரம் என சகல வசதிகளையும் மக்கள் அனுபவிக்கின்றனர். கிராமிய புறங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை கள் முன்னெடுக்கப்படுகின்றன. கிராமிய மக்களும் அபிவிருத்தியின் பலன்களை அனுபவிக்க வேண்டும். அதற்கான சவாலை நாம் ஏற்றுச் செயற்படுகின்றோம்.

இலவசக் கல்வியை கன்னங்கர ஆரம் பித்து வைத்தார். அதற்கு ஆதரவு வழங்கிய வர்களில் டீ. ஏ. ராஜபக்ஷவும் ஒருவர். அன்றுபோல் இன்றும் இலவசக் கல்வியை வழங்குவதில் அரசு முன்னிற்கிறது. அந்த உரிமையைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இல வசக் கல்வியில் கைவைக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

உலகின் வேறு சில நாடுகளில் இடம் பெறுவதைப் போன்று இலங்கையிலும் செயற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் முயற்சிகளே இவை. இதற்கான விமர் சனங்கள், பிரசாரங்கள் முன்னெடுக்கப்படு கின்றன. மக்கள் இது விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டு இனங்களுக்கிடையில் ஐக்கியம் கட்டி யெழுப்பப்பட்டுள்ளது. இது தனியே ஒரு நபருக்கு கட்சிக்கு உரித்தானதல்ல. அனைவருக்கும் உரித்தானது.

அதேபோன்று நாட்டின் எந்தவொரு பிரதேசமும் வெவ்வேறானவர்களுக்கு சொந்தமானதல்ல. முழு நாடும் அனைவ ருக்கும் சொந்தமானதெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com