|
||||
|
தமிழக அரசியல்
வானில் புதிய கூட்டணி?
விஜயகாந்த்
ஸ்டாலின்
- கார்த்தி
சிதம்பரம்
சந்திப்பு!
அ.தி.மு.க. அணியிலிருந்து
முற்றிலுமாக
தே.மு.தி.க.
விலகிவிட்ட
நிலையில்,
மதுரையிலிருந்து
ஞாயிற்றுக்கிழமை
சென்னை வந்த தனியார்
விமானம் ஒன்றில் சட்டப்பேரவை
எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தும்,
தி.மு.க. பொருளாளர்
மு.க. ஸ்டாலினும்,
மத்திய உள்துறை அமைச்சர் ப.
சிதம்பரத்தின்
மகன் கார்த்தி
சிதம்பரமும்
ஒன்றாகப்
பயணித்தது
அரசியல் வானில் புதிய கூட்டணி
ஒன்று உருவாவதற்கான
சாத்தியத்தை
ஏற்படுத்தி
இருக்கிறது.
எதிர்பாராத
விதமாக நிகழ்ந்த இந்த சந்திப்பும்,
விமானத்தில்
அவர்கள் மூவருக்கும்
இடையில் நடந்த கலந்தாலோசனையும்
எதிர்க் கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான
வாய்ப்பை
அதிகரித்திருப்பதாக
தே.மு.தி.க.
மற்றும் தி.மு.க. தரப்பு
முக்கியஸ்தர்கள்
தெரிவித்தனர்.
தே.மு.தி.க. கட்சி நிர்வாகி
ஒருவரின்
இல்லத் திருமணத்துக்காக
விஜயகாந்தும்,
இளைஞரணி உறுப்பினர்
சேர்க்கைக்காக
தி.மு.க. பொருளாளர்
மு.க. ஸ்டாலினும்
விருதுநகர்
சென்றிருந்தனர்.
மாலையில் தனியார்
விமானம் மூலம் சென்னைக்குத்
திரும்ப விஜயகாந்த்
மதுரை விமான நிலையத்தை
அடைந்த போது, ஏற்கனவே
ஸ்டாலின்
அங்கே பிரமுகர்களுக்கான
வி.ஐ.பி. லெளஞ்சில் இருந்தார்.
ஸ்டாலின்
இருப்பது
பற்றி தி.மு.க. மூத்த
நிர்வாகி
ஒருவர் விஜயகாந்திடம்
தெரிவித்த
போது, அவரும்
வி.ஐ.பி. லெளஞ்சிற்கு சென்று
ஸ்டாலினை
சந்தித்தார்.
விஜயகாந்தைக் ‘கேப்டன்’
என்று அழைத்து ஸ்டாலின் நட்புப் பாராட்டியதாகக்
கூறப்படுகிறது.
விஜயகாந்தும்,
ஸ்டாலினும்
அரை மணி
நேரத்துக்கும்
மேலாக அந்த வி.ஐ.பி. லெளஞ்சில்
தனியாகப்
பேசிக்கொண்டிருந்தார்கள்
என்றும், அவர்கள் பேசும் போது இரண்டு
கட்சியைச்
சேர்ந்த தலைவர்களும்
விலகி நின்று அவர்கள் தனிமைக்கு
வழிகோலினர்
என்றும் மதுரை விமான
நிலைய அதிகாரி ஒருவர் நமக்குத் தெரிவித்தார்.
விமானம்
புறப்படுவதற்கு
சில நிமிடங்கள்
இருக்கும்போது
கார்த்தி
சிதம்பரமும்
அதே விமானத்தில்
சென்னை திரும்புவதற்காக
வந்து சேர்ந்தார். விமானம் புறப்பட்டதிலிருந்து
சென்னை வந்திறங்குவது
வரை மூவரும்
அந்நியோன்னியமாக
அரசியல் சூழ்நிலையை
விவாதித்துக்
கொண்டிருந்ததாகவும்,
விமானத்தில்
இருந்து இறங்கும் போது அதிகாரபூர்வமற்ற
ஒரு கூட்டணி
ஏற்பட்டது
போன்ற நட்புடன் அவர்கள் பிரிந்தனர்
என்றும் உடன் பயணித்துக்
கொண்டிருந்த
சக பயணி
ஒருவர் நமக்குத் தெரிவித்தார்.
அண்மையில் நடந்த சட்டப்
பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க் கட்சித் தலைவரான விஜயகாந்த்
தற்காலிக
நீக்கம் செய்யப்பட்டிருக்கும்
நிலையில்,
இந்த சந்திப்பு
நடந்திருப்பது
அரசியல் சூழ்நிலையில்
மிகப்பெரிய
மாற்றங்களை
ஏற்படுத்தக்
கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்தின்
தற்காலிக
நீக்கத்தை
எதிர்க்கும்
விதமாக தே.மு.தி.க.வுக்கு
ஆதரவாக தி.மு.க. மற்றும்
இடதுசாரிக்
கட்சிகள்
பேரவையிலிருந்து
வெளிநடப்புச்
செய்திருக்கிறார்கள்.
தமிழ் நாடு காங்கிரஸ்
கமிட்டித்
தலைவரான ஞானதேசிகனும்
விஜயகாந்துக்கு
ஆதரவாகக்
கோரிக்கை
விடுத்திருக்கிறார்.
அ.தி.மு.க. - தே.மு.தி.க. உறவு முறிந்து
விட்டிருக்கும்
நிலையிலும்,
எதிர்க் கட்சிகள் தனித்தனியாக
செயல்பட்டுக்
கொண்டிருக்கும்
சூழ்நிலையிலும்,
ஸ்டாலினுடனான
தே.மு.தி.க.
தலைவர் விஜயகாந்தின்
சந்திப்பு
அரசியல் அணி மாற்றங்களுக்கு
வழிகோலக்
கூடும் என்று தி.மு.க.,
தே.மு.தி.க.
தரப்பினர்
எதிர்ப்பார்க்கிறார்கள்.
சங்கரன்
கோவில் இடைத் தேர்தலில்
அ.தி.மு.க. ஏற்கெனவே தனது வேட்பாளரை
அறிவித்துப்
பிரசாரத்தையும்
தொடங்கி விட்டிருக்கிறது. ம.தி.மு.க. தலைவர் வைகோவின் சொந்த ஊரான
கலிங்கப்பட்டியை
உள்ளடக்கிய
தொகுதி என்பதால் நிச்சயமாக
ம.தி.மு.க. தனது வேட்பாளரை
நிறுத்திப்
போட்டி போடுவது என்று முடிவு
செய்திருக்கிறது.
இந்த நிலையில்
தி.மு.க.வும்,
தே.மு.தி.கவும்
தனித்தனியாக
வேட்பாளர்களை
நிறுத்தப்
போகின்றனவா
அல்லது பொது வேட்பாளராக
ம.தி.மு.க. வேட்பாளரை
ஆதரிக்கப்
போகின்றனவா
என்பதைப்
பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |