|
||||
|
இஸ்ரேல் தூதரக அதிகாரியின்
கார் தாக்குதலுக்கு
ஈரானே காரணம்
இஸ்ரேல் கண்டனத்துக்கு
ஈரான் மறுப்பு டில்லியில்
பிரதமர் வீட்டருகே
இஸ்ரேலிய
தூதரக அதிகாரியின்
கார் வெடித்ததில்,
நான்கு பேர் காயமடைந்தனர். டில்லியில் ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமரின்
இல்லம் அமைந்துள்ளது.
இந்த சாலை அருகே இஸ்ரேல்
நாட்டு தூதரகம் அமைந்துள்ளது.
இஸ்ரேலிய தூதரகத்துக்கு
சொந்தமான
கார் அதனருகேயுள்ள
எரிபொருள்
நிரப்பு நிலையம் பக்கம் நேற்று முன்தினம்
திடீரென வெடித்து தீப்பற்றி
எரிந்தது.
இந்த சம்பவத்தில்
காரில் வந்த தூதரக
பெண் அதிகாரி
ஒருவர் உட்பட நான்கு
பேர் காயமடைந்தனர்.
கார் வெடித்ததில்
அருகே இருந்த நான்கு கார்களும்
சேதமடைந்தன.
வெடித்து
சேதமடைவதற்கு
முன் இந்த
டொயோட்டா
‘இன்னோவா’ காரை அவுரங்கசீப்
சாலையில்
இரண்டு இளைஞர்கள்
மோட்டார்
வாகனத்தில்
பின் தொடர்ந்து
வந்தனர். கார் சமிக்ஞையில்
நின்றபோது
அவர்கள் காரின் பின்பகுதியில்
வைத்த பொருள் தான் வெடித்து
சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக
சம்பவத்தை
பார்த்த மக்கள் தெரிவிக் கின்றனர். மேலும்
கார் சமிக்ஞையில்
நின்றபோது
வெடி பொருளை
வைத்த இளைஞர்கள்
உடனே அங்கிருந்து
சென்று விட்டனர். காரில் காஸ் நிரப்பும்
போது கார்
வெடித்ததாக
முதலில் கூறப்பட்டது.
ஆனால் இந்த கார் எரிவாயுவில்
இயங்கவில்லை
என பொலிசார்
தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாதிகள்
சதியா? முன்னாள்
சோவியத் யூனியனில்
இருந்த ஜார்ஜியாவின்
டிபிலிசி
நகர இஸ்ரேல்
தூதரகத்திலும்
நேற்று முன்தினம்
வெடி மருந்து
நிரப்பப்பட்ட
கார் வெடிக்க
இருந்தது. முன்கூட்டியே தெரிய வந்ததால் கார் குண்டு
வெடிப்பு
தவிர்க்கப்பட்டது.
இதேபோன்ற தாக்குதலை
டில்லியில்
உள்ள இஸ்ரேல்
தூதரகத்திலும்
பயங்கரவாதிகள்
நடத்த திட்டமிட்டிருக்கலாம்
என்ற கோணத்தில்
பொலிசார்
விசாரித்து
வருகின்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள்
சம்பவ இடத்திற்கு
சென்று ஆய்வு செய்து
வருகின்றனர்.
யூத நாடான இஸ்ரேலுக்கும்
அண்டை பகுதியில்
உள்ள பாலஸ்தீனம்
உள்ளிட்ட
நாடுகளுடன்
பகை நிலவி
வருகிறது.
இதனால், இஸ்ரேல்
மீது பயங்கரவாதிகள்
அடிக்கடி
தாக்குதல்
நடத்துவது
வழக்கம்.
தற்போது இஸ்ரேலில்
அதிகபட்ச
பாதுகாப்பு
நடவடிக்கை
மேற் கொள்ளப்பட்டுள்ளதால்,
வெளிநாடுகளில்
உள்ள அந்நாட்டின்
தூதரகங்களைத்
தகவிர்க்க
பயங்கரவாதிகள்
திட்ட மிட்டிருக்கலாம்
என கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின்
துணைத் தலைவர் கொல்லப்பட்ட
நான்காம்
ஆண்டு நினைவு தினம் நேற்று
முன்தினம்
அனுசரிக்கப்பட்டதால்
இதையொட்டி
இந்த சம்பவம்
நடந்திருக்கலாம்
என்ற கோணத்திலும்
பொலிஸார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
டில்லியில் நடந்த இந்த சம்பவத்தால்
மற்ற தூதரகங்களில்
பாதுகாப்பு
உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் கண்டனம் டிபிலிசி
மற்றும் டில்லியில்
நடந்த தாக்குதலுக்கு
ஈரான் நாடு தான்
காரணம் என இஸ்ரேலிய
பிரதமர் நெதன்யாகு
தெரிவித்துள்ளார். இது குறித்து
அவர் மேலும்
குறப்பிடுகையில்,
‘ஈரான் நாட்டு பாதுகாப்பு
அதிகாரிகள்
ஹிஸ்புல்லா
பயங்கரவாதிகளுக்கு
பயிற்சி அளித்து வருகின்றனர்.
இஸ்ரேல் மீதும்
அதன் தூதரகங்கள்
மீதும் முன்பு நடந்த தாக்குதல்
சம்பவங்களுக்கு
இவர்கள் தான் காரணமாக
அமைந் துள்ளனர்’ என்றார். இதனை நிராகரித்துள்ள
ஈரான், யூதர்களை மட்டுமே தனித்துவமாக
முன்வைக்கும்
ஜியோனிச சித்தாந்தத்தைக்
கடைப்பிடிக்கும்
இஸ்ரேல்தான்
ஈரானுக்கு
எதிராக உளவியல் போரை நிகழ்த்தி
வருகிறது
என்று பதிலளித்துள்ளது.
அண்மைக் காலமாக
ஈரானின் அணு விஞ்ஞானிகளை
அமெரிக்காவுடன்
இணைந்து இஸ்ரேல்தான்
படுகொலை செய்து வருவதாகவும்
ஈரான் கூறியுள்ளது.
பின்னணி
என்ன? அமெரிக்காவின்
மக்கள் தொகையிலும்
ஆட்சி அதிகாரத்திலும்
தீர்மானிக்கக்
கூடிய சக்திகளாக
இருப்பவர்கள்
இஸ்ரேலியர்கள். (யூத இனத்தவர்கள்தான்)
யூதர்களின்
நலனுக்குப்
பாதகமான எந்த ஒரு
செயல் திட்டத்தையும்
கொள்கையையும்
அமெரிக்கா
கடைப்பிடிப்பதில்லை.
சர்வதேச
விவகாரங்களில்
அமெரிக்காவின்
மென்மை முகமாக நோர்வேயும்
கோரமுகமாக
இஸ்ரேலும்
அறியப்பட்ட
ஒன்று. சமாதான பேச்சுக்களில்
நோர்வே களம் இறங்கும்
எனில் போர் போன்ற
விவகாரங்களில்
இஸ்ரேல் இறங்கும்.
அணு ஆயுத விவகாரத்தில்
அமெரிக்காவும்
இஸ்ரேலும்
கை கோர்த்து
ஈரான் மீது சர்வதேச
தடை விதித்துள்ள
நிலையில்
எந்த நேரத்திலும்
ஈரான் மீது இஸ்ரேல்
தாக்குதல்
நடத்தக் கூடும் என்ற நிலையும்
உள்ளது. இதேபோல்
இஸ்லாமிய
அடிப்படை
வாதத்துக்கும்
அமெரிக்காவுக்குமான
போரில் இஸ்ரேல் பிரிக்க முடியாத கூட்டாளி. இதனால்தான் மும்பையில்
2008 ஆம் ஆண்டு
நடத்தப்பட்ட
மிகப்பெரிய
தாக்குதலிலும்கூட
இஸ்ரேலியர்களே
குறிவைக்கப்பட்டனர்.
இஸ்ரேலியர்கள்
ஒன்றுகூடும்
இடத்தை குறிவைத்துதான்
தாக்குதல்
நடத்தப்பட்டது. இப்போதும் டில்லியில்
தாக்குதல்
நடத்தப்பட்டதும்
இஸ்ரேலியர்களை
குறிவைத்தே.
சர்வதேச
அக்கப்போரில்
அமெரிக்காவுடன்
மறைமுகமாக
கை கோர்த்துக்
கொண்டு எந்த ஒரு
நாட்டுக்கும்
நம்பிக்கைக்குரிய
நண்பராக இந்தியா இருப்பதில்லை. இதுவே சர்வதேச
நாடுகளுக்கு
இடை யேயான
போர்க்களமாக
இந்திய நகரங் கள்
மாறி வருகின்றன
என்கின்றனர்
அர சியல்
பார்வையாளர்கள்.
இதற்கிடையே, இஸ்ரேல்
தூதரக அதிகாரியின்
காரில் வைக்கப்பட்டது
ஸ்டிக்கர்
குண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |