Contact us at: sooddram@gmail.com

 

நம்பினால் நம்புங்கள்...?

ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாதென அமெரிக்கா, பிரிட்டன் இஸ்ரேலுக்கு அழுத்தம்

ஈரானின் அண்மைய செயற்பாடுகளால் இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன எச்சரித்துள்ளன. எனினும் அவ்வாறான தாக்குதல்களை முன்னெடுக்கக் கூடாது என மேற்படி நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன. ஈரான் தனது யுத்த கப்பல்களை சூயெஸ்கால்வாயூடாக மத்தியதரை கடலுக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த யுத்தக் கப்பல்கள் தற்போது சிரியாவின் டார்டவ்ஸ் துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈரான் தனது அணுசக்தி செயற்பாடுகள் குறித்து அண்மையில் அறிவித்தன. இந்த நிலையில் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி மார்டின் டெப்சி ஊகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறான தாக்குதல் முழு பிராந்தியத்திலும் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளன. எனவே ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் இஸ்ரேல் அதற்கு வழிவிட வேண்டும் என இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.

ஈரான் மீதான தாக்குதல் முன் யோசனையற்ற செயல் என மார்டின் டெப்சி கூறியுள்ளதோடு அது சரியான செயலல்ல என வில்லியம் ஹக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி மார்டின் டெப்சி சி. என். என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திறன், இஸ்ரேலுக்கு இருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அது ஒரு சில ஆண்டுகளாகக் காத்து நிற்கின்றது என்றார்.

இதில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதற்கு எதிராக வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இலக்குகள் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த சூழ்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த முற்படுவது முன்யோசனை அற்ற செயல் என மார்டின் டெப்சி தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் உபாமாவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் டொம் டொனிலொன் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் எகுட் பராக் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் செய்தி வெளியாகவில்லை.

இவ்வாறான சந்திப்புகள் ஆசாதாரணமாக நிகழ்வது என கூறியுள்ள சர்வதேச ஊடகங்கள், ஈரான் மீதான தாக்குதல், முயற்சியை கைவிட, வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் அழுத்தம் கொடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளன.

இது தொடர்பில் பி. பி. சி. தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹக், ஈரான் விவகாரம் தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்பது மற்றும் ராஜதந்திர முயற்சியில் அணுகுவதே பிரிட்டன் அரசின் செயற்பாடாகும் என தெரிவித்துள்ளார்.

‘‘இந்த சந்தர்ப்பத்தில் இஸ்ரேல், ஈரான் மீது இராணுவ நடவடிக் கையை முன்னெடுப்பது சரியான செயலில்லை என நான் நினைக்கிறேன். இது தொடர்பில் இஸ்ரேல் சர்வதேசத்தின் செயற்பாடுகளுக்கு வழிவிட வேண்டும். இது தொடர்பில் ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்து அழுத்தம் கொடுக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளதுஎன்றார்.

ஈரான் மீதான பதற்றம் மேலும் அதிகரித்தது

இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து 156 கி. மீ. தென்மேற்கில் உள்ள கோம் நகரின் போர்டோ பகுதியில் இயங்கிவரும் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் நவீன ரக கருவிகளை நிறுவும் பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த சனிக்கிழமை பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு மத்திய கிழக்கில் ஆயுதப் போட்டியை உருவாக்கும் என்பதால், அந்நாட்டின் மீது சர்வதேச சமூகம் கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே ஐ. நா. அணு சக்தி கண்காணிப்பகத்தின் தூதுக்குழு நேற்று ஈரானை சென்றடைந்தது. ஐந்து பேர் கொண்ட இந்தக் குழு ஈரானின் அணு சக்தி செயற்பாடுகள் குறித்து அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தக் குழு கடந்த மாதம் ஈரானுக்கு சென்றிருந்த போது சில அணு சக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரான் இராணுவம் இரண்டு நாள் போர்ப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. மத்திய ஈரானின் யஸ்த் பகுதியில் கடந்த இரு தினங்கள் இந்தப் போர்ப் பயிற்சி இடம்பெற் றுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com