Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைக்கெதிரான செயற்பாடுகளை தடுப்பதில் நாம் வெற்றி பெறுவோம் - டியூ குணசேகர

மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் மூன்று இலட்சம் மக்களைப் பாதுகாப்பதில் நாம் வெற்றி கண்டது போல் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் அழுத்தங்களுடன் முன்னெடுக்கப்படும் இலங்கைக்கெதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி வெற்றிபெறுவது உறுதியென அமைச்சர் டியூ குணசேகர நம்பிக்கை தெரிவித்தார். தமிழ் மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் எடுத்துவரும் முன்னேற்றகரமான நடவடிக்கையைப் போன்றே மனிதாபிமான யுத்தத்தின் போது படையினரால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கென விசேட ஆணைக் குழு வொன்றை நியமித்து செயற்படுத்தியுள்ள துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை ஏற்று நடைமுறைப் படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. இத்தகைய நிலையில் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் வேறு எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். இம்மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளோ அமைப்புகளோ மேற்கொள்ளும் எத்தகைய எதிர்ப்புகளையும் அரசாங்கம் வெற்றிகரமாக முறியடிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 19வது அமர்வு எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாவதுடன் இம்முறை அமர்வில் இலங்கைக்கு எதிரான குற் றச்சாட்டுக்களை முன்வைப்பதில் அமெரி க்கா உட்பட பல சர்வதேச நாடுகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் டியூ குணசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

ருவண்டா போன்ற ஏனைய யுத்தம் நடைபெற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை யுத்தம் என்ற சொல்லுக்குக் கூட பொருத்தமில்லாத மனிதாபிமான நடவடிக்கையையே மேற்கொண்டுள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைகள் இடம் பெற்ற காலத்தில் ஐ.நா. தமது படைகளை அதற்குள் உட்படுத்தவோ அல்லது அதன் விருப்பதிற்குச் செயற்பட இலங்கை இடமளிக்காததன் எதிரொலியாகவே தற்போது நெருக்கடிகளை கொண்டு வரமுனைகிறது.

அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதிலும் அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்ப திலும்அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டுள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து மூன்று இலட்சம் மக்களைப் பாது காப்பதென்பது எளிதான விடயமல்ல. மனிதாபிமான நடவடிக்கைகளில் பாரிய ஆயுதங்கள் எதனையும் உபயோகப்படுத்தக் கூடாதென்று அரசாங்கம் கண்டிப்பான அறிவுறுத்தலைப் படையினருக்கு வழங்கி யிருந்தது. அதனையே படையினருக்கும் கடைப்பிடித்துள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com