|
||||
|
உங்கள் முன்
ஒன்றாக நிற்கிறோம். இந்த ஒற்றுமையை
வலுப்படுத்துங்கள் - புளொட் தலைவர் த.சித்தார்த்தன்
வவுனியா நகரசபை
மண்டபத்தில்
கடந்த 18ஆம்
திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கும்
கட்சிகளின்
தலைவர்களும்
கூட்டமைப்பின்
பாராளுமன்ற
உறுப்பினர்களும்
ஒன்றிணைந்து
மக்கள் சந்திப்பொன்றை
நடத்தியிருந்தனர்.
கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்
சிவசக்தி
ஆனந்தன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
மாவை சேனாதிராஜா,
சுரேஸ் பிரேமச்சந்திரன்,
செல்வம் அடைக்கலநாதன்,
வினோநோகராதலிங்கம்,
சிவசக்தி
ஆனந்தன், சுமந்திரன்,
சிறீதரன்,
சரவணபவன்,
புளொட் தலைவர் தர்மலிங்கம்
சித்தார்த்தன்,
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
செயலாளர்
நாயகம் வீ.ஆனந்தசங்கரி,
வவுனியா நகரசபைத் தலைவர் கனகையா, நகரசபை உறுப்பினர்கள்,
உள்ளுராட்சிசபைத்
தலைவர்கள்,
உறுப்பினர்கள்,
சமூகப் பிரதிநிதிகள்
மற்றும் பெருமளவு பொதுமக்கள்
கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய
புளொட் தலைவர் சித்தார்த்தன்,
ஒற்றுமையைப்
பற்றிப் பேசப்படுகின்ற
இக் காலக்கட்டத்தில்
கடந்த காலத்தையும்
மீட்டிப்பார்ப்பது
நல்லதென்று
நான் நினைக்கின்றேன்.
தமிழ்க் கட்சிகளைப்
பொறுத்தவரையில்
1972இல் மூன்று
கட்சிகள்
இணைந்து தமிழர் விடுதலைக்
கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.
அந்த மூன்று
கட்சிகளும்
மிதவாதக்
கட்சிகள்
என்றும் சொல்லலாம்
அல்லது ஆயுதப்போராட்டத்தில்
இல்லாமல்
சாத்வீகப்
போராட்டத்தை
முன்னெடுக்க
வேண்டும்
என்ற கருத்தைக்
கொண்டவர்களாக
இருக்கலாம்.
அந்தக் கூட்டணியில்
தமிழரசுக்
கட்சி, தமிழ்க் காங்கிரஸ்
கட்சி, ஐயா தொண்டமான்
தலைமையிலான
இலங்கைத்
தொழிலாளர்
காங்கிரஸ்
என்ற கட்சிகள்
இடம்பெற்றன.
அப்போதுகூட மக்கள்
அந்தக் கூட்டமைப்பிற்கு
அமோக ஆதரவினை
வழங்கியிருந்தார்கள்.
பின்னர் இளைஞர்கள்
மத்தியில்
தோன்றிய ஒரு எழுச்சியானது
இந்த சாத்வீகப்
போரட்டத்தால்
எங்களது விடுதலையைப்
பெற்றுவிட
முடியாது
என்ற காரணத்தினால்
அன்றிருந்த
இளைஞர்கள்
அவர்கள் பிரபாகரனாக
இருக்கலாம்,
சிறிசபாரத்தினமாக
இருக்கலாம்
எனது தலைவர்
உமாமகேஸ்வரனாக
இருக்கலாம்
அல்லது பத்மநாபாவாக
இருக்கலாம்
இவர்கள் களமிறங்கி
ஆயுதப் போராட்டத்திற்கு
முன்னோடிகளாகத்
திகழ்ந்தார்கள்.
1984-85இல் நான்கு
இயக்கங்கள்
ஒற்றுமையாக
ஈழத் தேசிய
விடுதலை முன்னணியை
ஆரம்பித்தார்கள்.
ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை
வைத்த நான்கு இயக்கங்கள்
அங்கு ஒற்றுமையாக
இருந்தன.
இன்று ஆயுதப் போராட்டத்தில்
நம்பிக்கை
வைத்தவர்களும்,
சாத்வீகப்
போராட்டத்தில்
நம்பிக்கை
வைத்தவர்களும்
ஒன்றாக உங்கள் முன்னால் நிற்கின்றோம். ஆயுதப் போராட்டத்தைச்
சேர்ந்தவர்கள்
அது செல்வமாக
இருக்கலாம்
அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரனாக
இருக்கலாம்.
அல்லது சிவசக்தி
ஆனந்தனாக
இருக்கலாம்.
வினோவாகா இருக்கலாம்
ஏன் நானாகக்கூட
இருக்கலாம்.
ஆயுதப் போராட்டத்தில்
எங்களை இணைத்துக்
கொண்டபோது
எந்தச் சந்தர்ப்பத்திலும்
பாராளுமன்றத்தில்
அமர்வோம்
என்றோ தேர்தலில்
நிற்போம்
என்றோ கனவிலும் நினைக்கவில்லை.
செல்வம் போன்றவர்கள்
அப்பொழுது
க.பொ.த. சாதாரண
தரத்தில்
படித்துக்கொண்டிருந்திருப்பார்
என்று நான் நினைக்கின்றேன்.
தமிழ் மக்களின்
விடுதலைக்காக
தமது கல்வியைக்
கைவிட்டு
தங்களை முழுமையாக
அர்ப்பணிப்பதற்குத்
தயாராக ஆயுதப் போராட்டத்தில்
தங்களை இணைத்துக்
கொண்டார்கள்.
சேனாதி அண்ணன் 1960களிலேயே மிகமிக இளைஞனாக கல்வியைத் துறந்து இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவரை நாம் மிதவாதி என்றும் எடுக்க இயலாது ஆயுதப்போராளி என்றும் எடுக்க இயலாது. அவர் இரண்;டு பக்கத்திற்கும் சேர்ந்தவர். அதைப் போன்றே சங்கரி அண்ணன் அவர்கள் ஏறக்குறைய நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மக்களின் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சம்பந்தர் அண்ணன் 1961 சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு மறியலுக்குச் சென்றவர். கோமாகமவில் தடுப்புக்காவலில் இருந்தவர்கள். ஆகவே அவர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் உயிரைக் கொடுப்பதற்குத் தயாராகவே வந்தார்கள். அவர்களும் சமாதானப் பாதையிலே சாதவீகப் போராட்டங்களிலே தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ஆகியோரின் அடியொற்றி; சாத்வீகமான முறையில் போராட்டங்களை நடத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று வந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றாகக் கூடியிருக்கின்றோம். ஆனந்தன் கூறியதைப்போன்று நான் இங்கு மீண்டும் கூறுகின்றேன் நாங்கள் ஒன்றுபட்டிருக்கின்றோம். மக்களாகிய நீங்களும் ஒன்றுபட்டிருக்கின்றீர்கள். இந்த ஐக்கியம் மேலும் வலுப்பெற வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல எம்மை ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளியில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆயுதபலத்தை முற்றுமுழுதாக இழந்துவிட்ட எமக்கு எமது ஒற்றுமைதான் சிறந்த பலமாகும். இதனை நாம் கட்டிக்காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வு வலுப்படுகின்றதோ தெரியாது. ஆனால் ஒற்றுமைப்பட்ட? இவர்களின் வாழ்வு மட்டும் வழப்படப்போகின்றது என்னவோ உண்மைதான் பொறுத்திருந்து பாருங்கள். 60 வருடங்களாக தமிழ் ஏக தலமைகள் செய்வதையே இவர்களும் செய்ய முண்டியடிக்கின்றனர் என்பது என்னவோ உண்மைதான். நாற்காலிக்கான ஒற்றுமையே இது? - சாகரன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |