Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலக நான்கு கட்சிகள் உத்தேசம்?

ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் மாத்திரம் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன. இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.

"தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவை மேற்கொள்வது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு கட்சிகளின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.

ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்" என்றும் அவர் கூறினார்.

"அரசாங்கம் இன்று சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் போர்க்குற்றம் உட்பட பல பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கு காரணம் புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்களது போராட்டங்களும் தமிழகத்தில் உள்ள எமது உறவுகளின் போராட்டமும் அதற்கு அப்பால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் போராட்டம் என்பனவாகும்.

இவையே இன்று தமிழ் மக்கள் மீது சர்வதேசம் திரும்பி பார்க்க வைப்பதற்கும் காரணமாகியுள்ளது. இந்த அரசாங்கம் இன்று நடுங்கிக்கொண்டிருப்பதற்கு காரணம் சர்வதேசம் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதனாலேயே ஆகும். எனவே தமிழ் மக்களது அகிம்சை வழி போராட்டங்கள் எமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வுக்கோ அல்லது விடுதலைக்கோ வழிவகுக்கும்" என்றும் வினோ எம்.பி குறிப்பிட்டார்.

"நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்கின்றபோது தான் எமது போராட்டங்களை இன்னும் கீழ் மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்கி கொண்டு செல்வது இலகுவாக இருக்கும். எனவே தான் நாம் பதிவு விடயத்தை முன்னிலைப்படுத்துகின்றோம்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று கூட்டணியாக அக்கட்சியின் பெயரை தேர்தலுக்காக பயன்படுத்துகின்றோமே தவிர தனித்தனிக் கட்சிகளாகவே இருக்கின்றோம். சில விடயங்களில் கூட்டமைப்பாக இயங்குகின்றோமே தவிர பெரும்பாலான விடயங்களில் தனித்தனியாக கட்சியின் நலன் சார்ந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே கிராம மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்குவதானது எமது அரசியல் ரீதியிலாக மக்களின் அபிப்பராயங்களை கேட்பதற்கும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதற்குமான திட்டங்ககையும் கொள்கைகளையும் வகுப்பதற்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பதிவு செய்யப்பட்டதன் பின்னர் எமக்குள் இருக்கும் வேறுபாடுகள் களையப்பட்டு அல்லது ஒவ்வொரு கட்சியும் பிரிந்து இருப்பதால் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு ஒரே குரலாக ஒரே நிலையில் இருந்து பேசக்கூடியதாக இருக்கும்" என்றும் வினோ எம்.பி சுட்டிக்காட்டினார்.

"இது விடயமாக நாம் கடந்த காலத்தில் பேசி வருகின்றோம். 5 கட்சிகளும் கூடி பதிவு செய்தல், அதி உயர்பீடம், நிதிக்குழு, தேர்தல் தொடர்பான குழு மற்றும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆராந்திருக்கின்றோம். ஆனால் தமிழரசுக் கட்சி எமக்கு நிபந்தனைகளை விதிப்பதும் காலம் தாழ்த்துவதுமான நடவடிக்கையை எடுக்கின்றது.

அவர்கள் இதில் விருப்பமில்லாத நிலையில் இருப்பதும் அல்லது சாக்குபோக்கு சொல்வதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ள நிலையில் நாம் தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் பதிவு விடயம் சாத்தியமற்று போகாதிருப்பதற்காக வேறு வழியின்றி நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு இதனை முன்னகர்த்தி செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.

ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்" என்றார்.


இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் எந்த பிளவுகளுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் கொழும்பில் கூடி பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்ற முக்கிய தீர்மானமும் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பில் அங்கத்துவ கட்சிகளின் ஆலோசனைகளை மார்ச் 20ஆம் திகதி முன்னர் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா குறிப்பிட்டார்.

இதற்கு மேலாக கட்சியின் நடவடிக்கைகளையும் விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைப்பதென்றும் முடிவு காணப்பட்டுள்ளது. இதற்காக
ஒவ்வொரு கட்சியிலிருந்து தலா மூவர் இணைக்கப்படும் வகையில் உயர் பீடம் அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com