Contact us at: sooddram@gmail.com

 

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியானது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது.  டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள். இதில் உயர் வருவாய் பிரிவினரைக் கொண்ட தொகுதிகள் 10 உள்ளன. அதேபோல நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ள தொகுதிகள் 28 ஆகும். ஏழைகள், நலிவடைந்த மக்கள் அதிகம உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 32 ஆகும். இந்த மூன்றிலுமே முத்திரை பதித்துள்ளது ஆம் ஆத்மி. கட்சி, இது முதல் ஆச்சரியம். அதாவது உயர் வருவாய் பிரிவினரைக் கொண்ட 10 தொகுதிகளையும் இக்கட்சி அப்படியே அள்ளியுள்ளது. இங்கு பா.ஜ.கவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. இது பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாகும். நடுத்தர வர்க்கத்தினர் மிகுதி 28 தொகுதிகளில் 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி.. மீதமுள்ள 3 இடங்களை பா.ஜ.க வென்றுள்ளது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் ஆணித்தரமாக ஆம் ஆத்மி பின்னால் அணிவகுத்திருப்பதை உணர முடியும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர், ஏழைகள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முத்திரை பதித்துள்ளது. இங்குள்ள 32 தொகுதிகளில் 29 தொகுதிகளை அக்கட்சி தட்டிப் பறித்துள்ளது. இந்த தொகுதிகள்தான் ஆம் ஆத்மியின் முக்கியமான பலமாகவும் காணப்படுகிறது.

இன்னும் துல்லியமாக உற்றுப் பார்த்தோமானால் தலித் மக்கள், வர்த்தக சமூகத்தினர், முஸ்லிம்கள், உயர் ஜாதியினர், டெல்லியில் பலம் வாய்ந்த பஞ்சாபியர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என சகல தரப்பினரும் சரமாரியாக ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆதரவு கிடைத்துள்ளது ஆம் ஆத்மிக்கு. பாஜகவையும், காங்கிரஸையும் ஒட்டுமொத்த டெல்லியும் கைவிட்டு விட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் பெரும் வெற்றியைப் பெற்றது பா.ஜ.க. ஆனால் இந்த முறை நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. பா.ஜ.க. மோடி சுனாமி என்று கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அனைவரும் வர்ணித்தனர். ஆனால், அந்த மோடி சுனாமியை விட படு வேகமாக வந்து பா.ஜ.க.வை சுழற்றியடித்து விட்டது இந்த ஆம் ஆத்மி சுனாமி. கிட்டத்தட்ட மோடி ஸ்டைலில் டெல்லியில் வென்றுள்ளார் கெஜ்ரிவால்.

தமிழகத்தைப் போல கடந்த லோக்சபா தேர்தலில் இப்படித்தான் தமிழகத்தில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அது அனாயசமாக கைப்பற்றியது. அனைத்துத் தரப்பு மக்களும் அதிரடியாக அதிமுகவை ஆதரித்து வெற்றி பெற வைத்தனர். பாஜக கூட்டணிக்கு அந்தத் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதிலும் ஒரு இடம்தான் பாஜகவுக்குக் கிடைத்தது. இன்னொரு இடம் பாமகவுக்குக் கிடைத்தது. கிட்டத்தட்ட அதே போல இந்த முறையும் அனைத்துத் தரப்பினரின் பேராதரவுடன் ஆம் ஆத்மி டெல்லியைக் கைப்பற்றியுள்ளது.

டெல்லி சட்டசபைத் தேர்தல் பெரிய வரலாற்று சாதனையாக மாறியுள்ளது. ஓர் உலக அதிசயம் நடந்தது போலத் தெரிகிறது புள்ளி விவரங்களைப் பார்த்தால். பல கோணங்களிலும் டெல்லி தேர்தல் ஆச்சரியங்கள் நிரம்பிய ஒன்றாக உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸ§க்கும் மட்டுமல்லாமல் ஆம் ஆத்மிக்கும் கூட நிறைய பாடங்களை மக்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். (நன்றி: ஒன் இந்தியா தமிழ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com