|
||||
|
தேர்தல் திருத்த
சட்ட மூலம்
எந்தவொரு
சமூகத்திற்கும்
அநீதி ஏற்படாத வகையில் அமைய வேண்டும்
- நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்
தேர்தல் திருத்த சட்ட மூலம்
எந்தவொரு
சமூகத்திற்கும்
கட்சிக்கும்
அநீதி ஏற்படாத வகையில் அமைய வேண்டும்
என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகுமென
நீதியமைச்சர்
ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
எப்போதும்
இரண்டுங்கொட்டான்
நிலையிலிருந்து
செயற்படும்
ஐக்கிய தேசியக் கட்சி இது
விடயத்தில்
முழங்காலுக்கும்
மொட்டைத்தலைக்கும்
முடிச்சுப்
போட்டு சந்தர்ப்பவாத
அரசியல் செய்ய முனைகிறது
எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உள்ளூராட்சி
சபைகள் தேர்தல் திருத்தச்
சட்டமூலம்
மீதான விவாதத்தில்
உரையாற்றிய
அமைச்சர்
தமதுரையில்
மேலும் தெரிவிக்கையில்,
அரச தரப்பில்
புதிதாக இணைந்து கொண்ட கட்சி
என்ற வகையில்
ஸ்ரீல.மு. காங்கிரஸ¤க்கு இந்த சட்டமூலத்தின்
பின் விளைவுகள்
சம்பந்தமாக
ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.
தேர்தலை ஒத்திவைப்பதென்பது
அவ்வளவு சிறந்ததல்ல.
உள்ளூராட்சி
சபை தேர்தல்
உரிய காலத்தில்
நடத்தப்பட்டு
உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட
வேண்டும்.
இந்தப் புதிய திருத்தச்
சட்ட மூலம்
நடைமுறைக்கு
வர காலம்
எடுக்கும்
என்பதால்
காலம் தாழ்த் தாது உள்ளூராட்சித்
தேர்தல் நடத் தப்பட
வேண்டும்.
எல்லை மீள் நிர்ணயக்குழு
எல்லைகளை
வரையறை செய்து பிரதேசங்களுக்கேற்ப
வட்டாரத்திற்கேற்ப
தேவைப்படின்
இரட்டை வட்டார சபையை ஏற்படுத்தவும்
நடவடிக்கை
எடுக்கும். கடந்த கால
எல்லை மீள் நிர்ணயக்குழுவில்
இன ரீதியான
பிரதிநிதித்துவம்
இடம்பெறவில்லை
என்பதால்
தேசிய எல்லை நிர்ணய
குழுவுக்கு
இன ரீதியான
பிரதிநிதிகளை
நியமிக்க
நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஜனாதிபதி
அவர்களுக்கு
நன்றி தெரிவிக்கின்றோம்.
எல்லை மீள் நிர்ணயக் குழுவின் செற்பாடுகளுக்கு
மேலும் ஆறு மாதங்களாவது
தேவைப்படுகிறது. ஏப்ரலுக்கிடையில் தேர்தல்
நடத்த வேண்டிய தேவையும் உள்ளது. இந்தநிலையில் தேர்தல்
திருத்த சட்ட மூலத்தை
இன்று நிறைவேற்ற
வேண்டும்
என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுவது
விந்தையாக
உள்ளது.
இது முழு நாட்டுக்கும்
தேவையான சட்டமூலம்,
எந்த சமூகத்திற்கும்
அநீதி ஏற்படாத வகையில் இந்த சட்ட
மூலம் அமைய வேண்டும். அதற்கான சாதக பாதகங்களில்
அழுத்தம்
கொடுப்பது
எமது பொறுப்பாகும்.
இப்போதிருக்கும் தேர்தல்
முறையில்
வெல்ல முடியாது என நினைக்கும்
ஐக்கிய தேசியக் கட்சி அவசரமாக
இந்த திருத்த
சட்ட மூலத்தை
நிறைவேற்ற
நினைக்கிறது. அக்கட்சி தமது சந்தர்ப்பவாத
அரசியலுக்கு
இவ்விவாதத்தைப்
பயன்படுத்துகிறது
எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கரு ஜயசூரிய:
(ஐ.தே.க. எம்.பி)
கடந்த ஒன்பது
வருட காலம்
தேர்தல் முறை மாற்றம்
தொடர்பாக
நாம் கலந்துரையாடியுள்ளோம்.
நாட்டு மக்கள்
தமது பிரதிநிதிகளை
எந்தவித சிக்கலுமின்றி
தேர்ந்தெடுக்கும்
வகையிலேயே
தேர்தல் திருத்தச்
சட்டமூலம்
ஏற்படுத்தப்பட்டது.
விருப்பு வாக்கு
முறை மாற்றம்
தொடர்ச்சியாக
மக்களால்
எதிர்ப்பார்க்கப்பட்ட
ஒன்றாகும். புதிய அரசியல்
கலாசாரம்
ஒன்றை மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.
அதனால் தாமதியாது
இந்த தேர்தல்கள்
திருத்த சட்டமூலம்
நிறைவேற்றப்பட்டு
நடைமுறைப்படுத்தப்பட
வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழு
தொடர்பிலும்
நாம் பெரும்
எதிர்பார்ப்புடன்
உள்ளோம்.
ஆர். யோகராஜன்:
(ஐ.தே.க. எம்.பி)
மலையகப் பகுதிகளில்
எல்லை மீள் நிர்ணயத்தின்
போது முக்கிய
கவனம் செலுத்தப்பட
வேண்டும். பல பிரதேசங்களில்
மக்கள் சனத்தொகை அதிகரித்து
காணப்படுகிறது.
அம்பேகமுவ பிரதேச
சபைப் பகுதியில்
3 இலட்சத்துக்கு
மேற்பட்டவர்கள்
வாழ்கின்றனர். இங்கு எல்லை மீள் நிர்ணயம்
முக்கியத்துவம்
பெறுகிறது.
பெருந்தோட்டப்புற மக்களின்
வீடுகள் காணிகள் பிரதேச சபைகளின் அதிகாரத்தின்
கீழ் கொண்டு
வரப்படவேண்டும். அப்போதுதான் தோட்ட நிர்வாகங்களின்
பிடியிலிருந்து
அவர்கள் மீள முடியும்.
அதேவேளை, தோட்டப்புற
மக்க ளுக்கு
அரசாங்கத்தின்
நம்மைகள்
கிடைக்க வேண்டுமானால்
அதன் நிர்வாகம்
பிரதேச சபைக்குக்
கீழ் வருவது
அவசியம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |