|
||||
|
இலங்கையின்
நல்லிணக்கத்துக்கு
மும்மொழி
கொள்கை சிறந்த அடித்தளம்
-
அப்துல் கலாம்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தலைமையிலான
அரசாங்கம்
கடைப்பிடித்து
வரும் மும்மொழிக்
கொள்கை இலங்கை வாழ் மக்கள்
மத்தியில்
ஒற்றுமையையும்
ஐக்கியத்தையும்
நல்லிணக்கப்பாட்டையும்
ஏற்படுத்துவதற்கு
வலுவான அடித்தளமாக
அமைந்திருக்கிறது.
இதன் மூலம்
நாடு பொருளாதாரம்
உட்பட சகல துறைகளிலும்
வளம்பெற முடியுமென்று
தாம் அசையாத
நம்பிக்கை
கொண்டிருப்பதாக
இந்தியாவின்
முன்னாள்
ஜனாதிபதி
கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்தார்.
ஊடகங்களின் சிரேஷ்ட
ஆசிரியர்
களுடன் நேற்று நடத்திய கலந்துரை யாடலின் போதே அப்துல்
கலாம் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் இதன்
போது கருத்துத்
தெரிவித்த
கலாம்: இந்தியாவில்
உள்ள 6 இலட்சம்
கிராமங்களுக்கும்
நான் சென்று
பார்த்ததன்
மூலம் கற்றுக் கொண்ட அனுபவங்களை
அடிப்படையாக
வைத்து இலங்கையில்
உள்ள கிராமங்களையும்
அபிவிருத்தி
செய்வதற்கான
சில நல்
வழிகளை இலங்கையில்
சந்தித்த
கிராமத்தவர்களுக்கு
எடுத்துக்
கூறியுள்ளேன்.
ஒரு நாட்டின் கிராமங்கள்
முன்னேற்றம்
அடைந்தால்
தான் அந்நாடு
முன்னேற்றம்
அடையும். நகரங்களைப் போன்று
கிராமங்களிலும்
வாழும் மக்களுக்கு
சகல விதமான
நவீன உட்கட்டமைப்பு
வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய மும்மொழிக்
கொள்கையை
அமுலாக்கும்
நிகழ்வில்
கலந்து கொள்ளுமாறு
விடுத்த கோரிக்கையை
மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டேன். அங்கு
தமிழ் பிள்ளைகள்
சிங்களத்திலும்,
சிங்களப்
பிள்ளைகள்
தமிழிலும்
பேசுவதைக்
கண்டு தாம் புழகாங்கிதம்
அடைந்தேன்.
இந்த வைபவத்தில்
கலந்து கொண்ட ஒரு
முஸ்லிம்
மாணவி, தமிழிலும்,
சிங்களத்திலும்
சிறப்பாக
உரையாற்றி
எல்லோருடைய
பாராட்டுதலையும்
பெற்றார்.
இலங்கையின் சனத்தொகை 20
மில்லியனாகும். இதில்
10 மில்லியன்
இளைஞர்களும்,
யுவதிகளும்
இருக்கிறார்கள்.
இவர்களிடையே தன்னம்பிக்கையை
வளர்ப்பதன்
மூலமே நாட்டை கட்டியெழுப்ப
முடியும்.
இந்த உண்மையை
எனது இலங்கை
விஜயத்தின்
போது பல
இடங்களில்
கூறியுள்ளேன்.
யாழ்ப்பாணத்தில் 153வருடங்கள்
கல்வித்துறையில்
சாதனைப்படைத்த
யாழ். இந்துக்
கல்லூரியில்
தாம் உரையாற்றிய
போது, தன்னை
சந்தித்த
ஒரு சிறுமி,
தான் ஒரு
நல்ல பிரஜையாக
இருந்து நாட்டுக்கு
சேவை செய்வதற்கு
உங்கள் யோசனைகளை கூறுங்கள்
என்று என்னிடம் கேட்டபோது
நான் உண்மையிலேயே
மகிழ்ச்சி
அடைந்தேன்.
நாட்டுப் பற்றுடன் நன்நெறிக்
கொள்கைகளை
கடைப்பிடித்து,
தன் நம்பிக்கையுடன்
சர்வோதயத்
தலைவர் டாக்டர் ஏ.ரி. ஆரியரட்ன
காட்டும்
வழியில் உங்கள் வாழ்க்கையை
நாட்டுப்
பற்றுடன்
இட்டுச் சென்றால், நீங்கள் இலங்கையின்
ஒரு பெருமைக்குரிய
பிரஜையாகிவிட
முடியுமென்று
அந்த சிறுமிக்கு
நான் அறிவுறுத்தினேன்
என்றார்.
இதன் போது இந்தியா
இன்று விஞ்ஞானத்துறையிலும்,
தகவல் தொழில்நுட்பத்துறையில்
நல்ல முன்னேற்றம்
அடைந்துள்ளது.
இலங்கையிலும் இத்தகைய
முன்னேற்றங்களை
ஏற்படுத்துவதற்கு
இந்தியா எத்தகைய பங்களிப்பை
வழங்கும்
என்று ஒரு தமிழ்
பத்திரிகையின்
பிரதம ஆசிரியர் கேட்ட கேள்விக்கு
பதிலளித்த
கலாநிதி அப்துல் கலாம்; இந்திய
வெளிவிவகார
அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா அண்மையில்
இலங்கைக்கு
வந்து, பல புரிந்துணர்வு
ஒப்பந்தங்களில்
கைச்சாத்திட்டிருக்கிறார்.
அதனடிப்படையில் இலங்கைக்கு
பல்வேறு துறைகளில்
இந்தியாவின்
உதவியும்
பங்களிப்பும்
கிடைக்கும்
என்று கூறினார்.
நன்நெறியை எவ்விதம்
ஒருவர் தனது வாழ்க்கையில்
கடைப்பிடிக்க
முடியுமென்று
ஒரு பத்திரிகை
ஆசிரியர்
கேட்டதற்கு
பதிலளித்த
அப்துல் கலாம், நான்
ஒரு கூட்டுக்குடும்பத்தில்
பிறந்து வாழ்ந்தவன்.
பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு
நல் ஆசான்களாக
விளங்க முடியும். பெற்றோர் பத்திரிகைகளை
படிக்க வேண்டும்.
நூல்களை கற்றறிய
வேண்டும்.
அப்போதுதான் பிள்ளைகளும்
பெற்றோரின்
நல் வழியில்
நற்குண சீலர்களாக
வளர்ந்து
நல்ல பிரஜைகளாக
உருவாகுவார்கள்.
ஒரு குடும்பமே
ஒரு பிள்ளை
நல் வழியில்
வளர்ந்து
உயர் நிலை
அடைவதற்கு
பிரதான அடித்தளமாகும். எனவே, பெற்றோர் இது விடயத்தில்
கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் ஒரு கேள்விக்கு
பதிலளித்த
கலாநிதி அப்துல் கலாம், இந்தியா
பெரிய நாடு, இலங்கை
சிறிய நாடு என்ற
பேச்சுக்கே
இடமில்லை.
ஒருவரின் மனதில் இருந்துதான்
யார் பெரியவர்,
யார் சிறியவர்
என்ற உணர்வு
தோன்றும். இதனால் தான் புத்த பெருமானின்
நற்போதனைகளை
அசோக சக்கரவர்த்தி
தன்னுடைய
மகனையும்,
மகளையும்
சமயத்தூதுவர்களாக
இலங்கைக்கு
அனுப்பி வைத்தார்.
அவ்விதம் அன்றிலிருந்து
தோன்றிய எங்கள் இரு நாடுகளுக்கிடையிலான
தொடர்பு மேலும் தழைத்தோங்குமென்று
கூறினார்.
டெய்லி நியுஸ் பத்திரிகையின்
பிரதம ஆசிரியர், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு
நிரந்தர தீர்வு காண்பதற்கு
உங்கள் யோசனை என்ன? என்று
கேட்டார்.
அதற்கு பதிலளித்த
கலாநிதி அப்துல் கலாம்; இதுவொரு
பெரும் பிரச்சினையே
அல்ல.
எங்கெங்கு மீன் இருக்கிறதோ
அந்ததந்த
இடங்களை மீனவர்கள்
தேடிச் செல்வார்கள். அப்போது அவர்கள்
கடல் எல்லைகளைப்
பற்றி சிந்திக்கவே
மாட்டார்கள்.
எனவே, அவர்களுடைய
பிரச்சினைகளை
நாம் மனிதாபிமான
முறையில்
அணுகவேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு
சுமுகத்தீர்வை
ஏற்படுத்த
வேண்டுமானால்
இரு தேச
அரசாங்கங்களும்
7 நாட்களில்
ஒரு நாளை
விடுமுறை
தினமாக கடற்றொழிலாளர்களுக்கு
கொடுத்துவிட்டு,
மூன்று, மூன்று வெவ்வேறு நாட்களை இந்திய கடற்றொழிலாளர்களுக்கும்,
இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும்
மீன்பிடிப்பதற்கு
பிரித்துக்
கொடுக்க வேண்டும். அவ்விதம் செய்தால்
கடற்றொழிலாளர்களின்
பிரச்சினையை
சமரசமாக தீர்த்து வைக்கலாம்
என்று கலாநிதி அப்துல் கலாம் கூறினார்.
இலங்கையில் உள்ள
இந்திய வம்சாவளி தமிழ் மக்களின்
பிரச்சினையை
தீர்த்து
வைக்க உங்கள் யோசனை என்னவென்று
கேட்கப்பட்ட
கேள்விக்கு,
நல்லிணக்க
அறிக்கையின்
அடிப்படையில்
இலங்கை அரசாங்கம்
இந்தப் பிரச்சினையையும்
தீர்க்கும்
1}சி
அசையாத நம்பிக்கை
இருக்கிறதென்று
சொன்னார்.
தினகரன் பத்திரிகையின்
பிரதம ஆசிரியர் மதிப்பிற்குரிய
கலாநிதி அப்துல் கலாம் அவர்களே,
ஒரு கல்விமான்
என்ற முறையில்
எங்கள் நாட்டில் பல்வேறு வன்முறைகளுக்கு
அடித்தளமாக
அமைந்திருக்கும்
பல்கலைக்கழகங்களின்
பகிடி வதையை நிறுத்துவதற்கு
எமது பல்கலைக்கழக
மாணவ, மாணவியருக்கு
நீங்கள் கூறும் அறிவுரை என்னவென்று
கேட்டார்.
அதற்கு பதிலளித்த
கலாநிதி அப்துல் கலாம், இதனை
மாணவர்கள்
தான் தீர்த்துவைக்க
வேண்டும். அவர்கள் தங்களுக்குள்
வலுவான அமைப்புகளை
ஏற்படுத்தி
பகிடிவதைகள்
நடைபெறாத
வகையில் மாணவர்கள்
மத்தியில்
விழிப்புணர்வை
ஏற்படுத்தி
அவர்களை நல்வழிப்படுத்த
வேண்டும்.
அதன் மூலமே பல்கலைக்கழகங்களில்
பகிடிவதைகளை
அடியோடு நிறுத்தி மாணவ, மாணவியரை
தங்கள் கல்வியில்
தீவிர கவனம் செலுத்துவதற்கு
உதவ முடியுமென்று
கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |