Contact us at: sooddram@gmail.com

 

வந்தேன், கண்டேன், வென்றேன்

யாழில் தேன்மாரி பொழிந்த அப்துல் கலாம்

பறக்கும் பல்கலைக்கழகம் பற்றி கேள்விப்பட்டிருக்கின் aர்கள் தானே? அப்படியான ஒரு கப்பலில் பறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது! சர்வ கலைகளையும் கற்று சர்வதேச புகழை தன் சொந்தமாக் கிக் கொண்டு சர்வதேச கீர்த்தி திறமையை முழுமையாக தன் வசப்படுத்திக்கொண்டுள்ள முன்னாள் இந்திய ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் ஒரு தனியான பல்கலைக்கழகமாகத் திகழ்கிறார். அவர் பிரயாணம் செய்கின்ற ஒவ்வொரு வாகனமும் - அது தரை வாகனமாக இருந்தாலென்ன வானூர்தியாக இருந்தாலென்ன, அத்தனை இருப்பிடங்களிலும் ஒரு பூரண அறிவுப் பெட்டகமாக அவர் விளங்குகிறார். எனவே தான், அறிவுக் கலசத்தை அப்படியே ஏந்திச் செல்லும் அவரது பிரயாண வாகனமும் ஒரு பல்கலைக் கழகத்தை ஒத்தது என்பேன்.

அணு விஞ்ஞானியோடு விமானத்தில்....

23.01.2012 இந்த அபூர்வ அனுப வத்தை எனக்குத் தந்த நாள் இது.

இந்த AIR FORCE  விமானத்தில் எமது விஞ்ஞானி ஏறுகிறார். தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் ஏறினார். அவருடன், என்றும் புன்னகை பூக்கும் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா அவர்களும் வந்தார். வெளிநாட்டலு வல்கள் அமைச்சின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பெரியசாமிபிள்ளை செல்வராஜ் அவர்களும் அரச மட்ட பணிகளைக் கவனிக்கவென உடன் வந்தார். ஏனையோர் இலங்கை, இந்திய மெய்ப்பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது. ஏறியவுடன் இந்த விஞ்ஞான மேதை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமராது நேராக விமான ஓட்டி ஷிqனீr பெர்னாண்டோவை நோக்கி எஞ்சின் பக்கமாகச் சென்றார்.

‘இது எந்த நாட்டு விமானம்’ என்று கேட்டார், ஆய்வின் தந்தை ஆவுல்பக்கீர் அபுல் கலாம்.

விமானமோட்டி (Pilot)  பதிலளித்தார்.  Body made in China, engine is from America.

பக்கத்தில் நின்ற நான் முணுமுணுத்தேன்: ‘தலை அமெரிக்காவினுடையது. உடல் சீனாவினுடையது....’

‘அது சரிதாணுங்க...’ என் காதருகில் அணுகிச் சொன்னார் இந்த அணு விஞ்ஞானி, இரத்மலானையிலிருந்து எழுந்து பறக்கும் கப்பல் பலாலி விமான நிலையத்தைத் தொட சரியாக ஒரு மணித்தியாலமும் இருபது நிமிடமும் பிடித்தது.

யாழ். குடாநாட்டு விண்வெளியில் நுழைந்தபொழுது பல தீவுகள் (அது தீவுப்பகுதி) அப்துல் கலாமின் கண்ணில் பட்டது. எதனையும் விசாரித்து அறியாமல் விடமாட்டார். அவர் ஆய்வின் தந்தையல்லவா! ‘இந்த தீவுகள் என்ன’ என்று கேட்டார்.

நெடுந்தீவு, நயினா தீவு, புங்குடு தீவு, மண்டைதீவு, கேர தீவு, அனலை தீவு, காரைதீவு போன்ற தீவுகள் பற்றிய விளக்கங்களைச் சொன்னோம். தூரத்தே கச்சதீவும் உண்டு என்றோம். ஆனால், அது டாக்டர் கலாமின் கண்ணில் படும் தூரத்தில் இருக்கவில்லை.

அந்த நேர அவகாசத்திலும் தன் பிரீஃப்கேசிலிருந்து பல தஸ்தாவேஜுகளைப் புரட்டிப் பார்த்தவண்ணம் பிரயாணம் செய்ததை நான் கண் கொட்டாமல் பார்த்திருந்தேன்.

சீப்பையும் கண்ணாடியையும் கொண்டுசெல்ல மறக்காதவர்.

யாழ்ப்பாணம் சம்பந்தமான குறிப்புகளை மூளையில் செருகிக் கொண்டார். விமானம் தரையிறங்க சற்று முன் தனது சர்வாணி பக்கட்டிலிருந்து (Pocket) ஒரு சீப்பையும் கண்ணாடியையும் வெளியே எடுத்து அடர்ந்த முடியை சீராக்கிக் கொண்டார்.

நெற்றி மீது பிறை வட்டம்

உலகத்தில் இவருக்கு மட்டுந்தான் நெற்றி மீது பிறை வட்டமாக இரு தலைமுடி வளைவு காணப்படுகிறது. கண்ணாடியில் முகம்பார்த்து அந்த இளம்பிறை வடிவிலான முடியை இரண்டாக வளைத்து சீவிக்கொண்ட பாணி மிக அலாதியான ஒரு காட்சியாக நான் பார்த்து ரசித்தேன்.

தமிழ் மரபுப்படி வரவேற்பு

இந்த உலக அதிசய மனிதரை வரவேற்க பலாலி விமானத்துறைக்கு அரச அதிபர் இமெல்டா சுகுமார், இந்தியாவின் யாழ்ப்பாணத்திற்கான கவுன்சல் ஜெனரல் (Counsel General) திரு. வீ. மகாதேவன் ஆகியோருடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி உள்ளிட்ட பலர் வருகை தந்து தமிழ் மரபுப்படி அவரை வரவேற்றனர்.

யாழின் வளமான செம்மண்

பலாலியிலிருந்து யாழ் நகர் செல்லும் வழியில் இரு மருங்குகளிலும் செம்மண் பூமியைக் கண்டார் டாக்டர் கலாம். அம்மண்ணின் வளம் குறித்து விசாரித்தார். இலங்கையில் எங்கும் காணமுடியாத அதியுயர்ந்த விளைச்சலைத் தரக்கூடிய வளம்கொண்டது இம்மண் என்று அவருக்கு விளக்கம் சொல்லப்பட்டது.

கறுத்தகொழும்பான் மாம்பழமும், நெல்லிச்சாறும்

மலைநாட்டுக் குளிரில் விளையும் அத்தனை மரக்கறி வகைகளும் இம்மண்ணில் வெற்றிகரமாகப் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் கறுத்தக் கொழும்பான் போன்ற இனிய மாம்பழம் நாட்டில் வேறு எங்கும் விளைவதில்லை. இரு உதடுகளையும் தட்டிக் கொண்டார் இம்மாமனிதர் மாம்பழ ருசியை நினைத்து

தோலகட்டி பண்ணை (Farm) நெல்லிச்சாறுக்குப் பெயர் போனது. அதை சென்று பார்த்து நெல்லிச்சாறை பருகும் ஆசையை வெளியிட்டார். எனினும், நிகழ்ச்சி நிரலில் அது அடக்கம் பெற்றிருக்கவில்லை.

பெண்மணிகள் மூவருக்கு டாக்டர் கலாம் ஆசி

மாட்டார் பவனி நேராக ஆளுநர் வாசஸ்தலத்தைச் சென்றடைந்தது. அங்கே வாயிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரை வரவேற்றார். அங்கு வேறு பெண்மணிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அது அரச அதிபர் இமெல்டா சுகுமார், மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, மாகாண நிர்வாக செயலர் ரமேஸ் விஜயலட்சுமி... ‘ஓ! இங்கு ஆட்சிபீட தலைமைத்துவத்தை அலங்கரிக்கும் மூவரும் பெண்கள்’ என்று வியந்த அபுல் கலாம் ‘நன்று... நன்று... நல்ல கெட்டித்தனத்தோடு நிர்வாகம் புரிய வேண்டும் என்று மும்மணிகளுக்கும் ஆசி வழங்கினார் இந்த பாரத ரத்தினம்.

மேலும் இருவர் வடக்கின் இரு பிரதேசங்களுக்கு அரச நிர்வாகத்தை நடாத்துகின்றனர் என்ற செய்தியும் அவரிடம் சொல்லப்பட்டது. கிளிநொச்சி, வவுனியா பிரதேசங்களில் அவர்கள் கடமை புரிகின்றனர். (திருமதி ரூபவதி கேதீஸ்வரன் - கிளிநொச்சி, திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் - வவுனியா)

இவர்களுடைய பணி என்ன என்பதை டாக்டர் கலாம் வினவினார்.

‘எமது நாட்டில் - கலெக்டர் களைப் போலவே இவர்களின் கடமை ‘Duty’ என இந்தியத் துணைத் தூதுவர் விளக்கினார்.

இங்கு, மீனவர் சங்க உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் குறைகளையும் மிக அவதானமாகக் கேட்டறிந்தார்.

‘இந்திய மீனவர்கள் ‘ரோலர்’ படகிலும் இயந்திரப் படகிலும் (Mechanical Boat) வந்து எமது கடலை அப்படியே சூறையாடுகின்றனர், ஐயா! இந்த ரோலர் படகுகள் கடலின் ஆழத்திலுள்ள அத்தனை வளங்களையும் அழித்து விடுகின்றன. அதனால் அவ்விடங்களில் ஒரு வருட காலத்திற்கு எந்தவிதமான மீன்களும் உற்பத்தியாவதில்லை. இது எமக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்துகிறது. எமது அரசாங்கமோ இவ்வித படகுகளைத் தடை செய்துள்ளது.’ மன் இருந்தால் மீனவர் இருப்பர், மீனவர் இருந்தால் மீன் பிடிப்பர்.

குறைகேள் அதிகாரி போன்று மீனவர்கள் சொன்னதை மிக அவதானமாகச் செவிமடுத்த பிறகு உரிய இடங்களுக்கு அக்குறைகளைச் சமர்ப்பிப்பதாகக் கூறினார் விஞ்ஞானி அபுல் கலாம்.

இன்னொன்றையும் அழகாகச் சொன்னார்.

‘கடல் இருந்தால் மீன் இருக்கும். மீன் இருந்தால் மீனவர்கள் அதனைப் போய்ப் பிடிப்பர். மீனுக்கு எல்லையில்லை. மீனவர்களுக்கும் எல்லையில்லை. அவர்கள் போடர் (border) எல்லைகளைப் புரிந்துகொள்வதுமில்லை. அரசுகள் பிரகடனப்படுத்தும் பூகோள எல்லைகளை மதிப்பிட மீனவர்களுக்குப் புரியாது’ என்று கூறிய ராமேஸ்வர மீனவக் கிராமத்தில் பிறந்த அபுல் கலாம், இப்படி யோசனை சொன்னார் :-

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு சொன்னார் கலாம்

‘மூன்று நாட்களுக்கு இலங்கை மீனவர்களும் மற்றும் மூன்று நாட்களுக்கு இந்திய மீனவர்களும் கடலுக்குச் செல்லட்டும். ஒரு நாளைக்கு ஓய்வெடுத்துக் கொள்ளட்டும். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் கூறும் யோசனை இதுதான்...’

யாழில் தேன்

இந்த அணு விஞ்ஞானப் பேரறிஞர் யாழ். பல்கலைக்கழகத் திற்குச் சென்றபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டு அசந்து போனேன்.

ஈசல் மொச்சுவது போன்று பல்கலைக்கழக மாணவர்கள் இவரை மொய்த்துக்கொண்டனர். அந்தளவு வரலாறு காணாத வரவேற்பது! துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் அதிதிகளை அழைத்துச் செல்வதில் பட்ட சிரமம் எம்மட்டென்று வர்ணிக்க முடியாது. ஒரு குண்டூசி விழக்கூடிய இடைவெளிகூட அங்கு காணமுடியவில்லை. ஆழ்கடலில் துளைத்துச் செல்கின்ற Sub marine  நீர் மூழ்கிக் கப்பல் இயந்திரத்தைப் போன்று டாக்டர் கலாமை சூழ அலைமோதி நின்று மாணவர்கள் மத்தியில் மிகச் சிரமப்பட்டு சென்று கைலாசபதி அரங்கை அடைய முடிந்தது அவரால்.

மண்டபத்தினுள் ஆயிரம் பேர் என்றால் சுற்றுப்புற வெளியில் பல்லாயிரக் கணக்கான பட்டதாரி மாணவர்கள் உள்நுழைய பட்டபாடு பார்த்திருந்த எமக்குத் தான் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழின் இனிமையை நன்கறிந்திருந்த டாக்டர் கலாம் யாழில் தேன் வார்த்தார். தனதுரையை தமிழில் நிகழ்த்தினார்! (இடையிடையே வியத்தகு விஞ்ஞானத்தை உணர்த்துவதற்கு லாவகமாக ஆங்கில சொற்களையும் கையாண்டார்.)

உரையின் இறுதியில் கேள்விகள் கேட்குமாறு மாணவர்களை வேண்டி நின்றார்.

குறிப்பாக, ஒரு மாணவன் கேட்டான் : ‘இவ்வளவு தமிழ் தெரிந்த நீங்கள் ஏன் இன்றுவரை எமது யாழ்ப்பாணம் வரவில்லை....?’

டாக்டர் கலாம் உடன் பதிலளித்தார்.

மறுகரை ராமேஸ்வரத்தில் இருந்துதான் தினமும் உங்கள் ஊரை பார்த்தவண்ணம் இருக்கிறேன். அதுமட்டுமல்ல, எனக்கு ஆரம்பக் கல்வியைப் புகட்டியவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தர ஐயர் என்பவர்தான். அவர் எனக்கு கணிதம் கற்றுத்தந்தார். அந்த ஆரம்பப் பாடங்கள்தான் கணித - அணு பட்டங்களைப் பிற்காலத்தில் என்மீது சூட்டியது.

பிறகு யாழ்ப்பாண இந்துக் கல்லூரியிலும் அதேவித வரவேற்பு. மாணவர்களின் கட்டுக்கடங்காத ஆர்வத்தைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர் மிகக் கூடிய கவனம் செலுத்தி கஷ்டப்பட வேண்டியிருந்தது.

‘இது புனிதமிக்க தலம். ஒரு சாதாரண பாடசாலை மட்டுமல்ல:

19 ஆம் நூற்றாண்டின் சுவாமி விவேகானந்தர் இப்பாடசாலையைத் தரிசித்தார்.

20 ஆம் நூற்றாண்டில் மகாத்மா காந்தி இங்கு வந்தார்.

21 ஆம் நூற்றாண்டில் இங்கு வர நான் என்ன தவம் செய்தேனோ’ என்று வரலாற்றோடு இணைந்த காவியத்தை இங்கு விரித்துக் காட்டினார் டாக்டர் அப்துல் கலாம்.

பகற்போசன விருந்து டில்கோட் ஹோட்டலில் (Tilcourt City Hotel)  இடம்பெற்றது. இங்கேதான் பலதரப்பட்ட பிரமுகர்களைச் சந்திக்க அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரம் தானசம்பா தேசிய சரமாச்சாரிய சுவாமிகள் அவருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். உளம்நெகிழ இரு கைகளையும் பற்றிக்கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த மேதையுடன் மனம்விட்டு கதைத்தனர்.

முஸ்லிம்கள் சார்பாக எம். ஏ. k. முபீன் அவர்கள் தலைமையில் தூதுக் குழு வட பகுதி முஸ்லிம்கள் சம்பந்தமான குறிப்புகள் அடங்கிய ஒரு மகஜரையும் மேதையிடம் கையளித்தார்.

ஒரு வட்டமேசை மாநாடு போன்று அமைந்திருந்த யாழ். பத்திரிகையாளர்களின் உரையாடல். முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. முன்னாள் ‘சுடர் ஒளி’ ஆசிரியர் அன்பர் எஸ். வித்தியாதரன் அங்கு அணு விஞ்ஞானியை அணுகி நின்று மிக நுணுக்கமான கேள்விகளை கேட்டதை நான் அவதானித்தேன்.

நல்ல முடிவு இனிய முடிவென்பார்கள்!

டாக்டர் அப்துல் கலாமின் யாழ் விஜய முடிவு இனிதாய் - இனிப்பாய் - அமைந்திருந்தது.

யாழ் வரலாற்றில் ஒரு மங்காப் புது யுகத்தை அவர் தோற்றுவித்தார்.

உரோம சக்கரவர்த்தி ஜுலியஸ் சீஸர் நாடுகளை வெற்றி கொண்ட பின் வானோக்கிச் சொன்னான்;

Veni Vidi Vici!
விண் அணு மேதை அப்துல் கலாம் யாழை வெற்றி கொண்டபின் வாய் திறந்து சொன்னார் : ‘வந்தேன், கண்டேன், வென்றேன்!’

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com