Contact us at: sooddram@gmail.com

 

விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள்  இரா. சம்பந்தன்

'நாங்கள் எமது செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவோ புலம்பெயர் சமூகத்திடமிருந்து நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்காகவோ அரசியல் நடத்­தவில்லை. நாங்கள் நிதானமாக, யதார்த்தமாக அரசிய லில் ஈடுபடுகின்றோம். எமது முக்கியமான நோக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதேயா கும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். புலி­களை தாமே அழித்­தோ­மென பலர் தம்பட்டம் அடித்து வரு­கி­றார்கள். ஆனால் உண்மைநிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் என்றே நான் கரு­து­கிறேன்"

இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி­ன­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் கூறினார். தமிழ் பேசும் மக்­களின் இன்­றைய அர­சியல் நெருக்­கடி குறித்து ஞாயிறு வீர­கே­ச­ரிக்கு அவர் அளித்த விசேட பேட்­டி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நான் நாடா­ளு­மன்­றத்தில் கடை­சி­யாக ஆற்­றிய உரையில் விடு­தலைப் புலிகள் வட,கிழக்கில் போராட்­டத்தை ஆரம்­பித்த போது அதற்கு நியாயம் இருந்­தது என்று பேசி­யி­ருந்தேன். அதை நியா­யப்­ப­டுத்­தி­யு­முள்ளேன். ஆனால் காலப்­போக்கில் விசே­ட­மாக சர்­வ­தேச சமூகம் விடு­த­லைப்­ பு­லி­களை வேறு வித­மாக நோக்கினார்கள். தவ­றாக கரு­தி­னார்கள். அவர்களை சர்­வ­தேச சமூகம் வேறு வித­மாக கருது­வ­தற்கு ஏற்­பட்ட கார­ணங்­க­ளையும் நான் தெளி­வாக எடுத்­துக்­கூ­றினேன். கூற வேண்­டிய தேவையும் உள்­ளது.

புலி­களை தாமே அழித்­தோ­மென பலர் தம்­பட்டம் அடித்து வரு­கி­றார்கள். ஆனால் உண்மை நிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் என்றே நான் கரு­து­கிறேன். சர்­வ­தேச சமூ­கத்தால் உலக நாடு­களால் விடு­த­லைப்­பு­லிகள் வேறு வித­மாக கரு­தப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால் நியா­யத்தின் அடிப்­ப­டையில் அவர்கள் போராட்டம் தொடர்ந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு இவ்­வி­த­மான நிலை ஏற்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்­லை­யென்றே தான் கூறி­யி­ருக்­கின்றேன்.
நாங்கள் ஒரு பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு அதன் உண்­மையை உணர்ந்து இந்த நாட்டில் வாழக்­கூ­டிய மக்­களும் ஆத­ரிக்­கக்­கூ­டிய அந்த மக்­க­ளையும் இணைத்து அவர்­களின் ஆத­ர­வு­க­ளையும் திரட்டி பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற வேண்டும்.
உண்­மையின் அடிப்­ப­டை­யிலும் நீதியின் அடிப்­ப­டை­யிலும் நியா­யத்தின் அடிப்­ப­டை­யிலும் போரா­டு­வோ­மானால் எதையும் சாதிக்க முடியும். ஆன­ப­டியால்
நான் பேசு­வது நியா­யத்தை, நீதியை, உண்­மையைக் கொண்டு வரக்­கூ­டிய விதத்தில் இருக்க வேண்­டு­மென்று விரும்­பு­கின்றேன்.

புலம்­பெயர் சமூகம் என் மீது குற்றம் சுமத்­து­வ­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. எமது மக்­க­ளையோ புலம்­பெ­யர்ந்த மக்­க­ளையோ தீவி­ர­மாக சிந்­திப்­ப­வர்­க­ளையோ திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக பேசும் பழக்கம் என்­னி­ட­மில்லை.

அர­சியல் தீர்­வின்றி நாங்கள் எதையும் செய்ய முடி­யாது இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு அத்­தி­யா­வ­சி­ய­மான தேவை­யல்­ல­வெ­னக் ­க­ரு­து­கி­றார்கள். அதற்கு அமை­வா­கவே தமது நிகழ்ச்சி நிரலை நிறை­வேற்றிக் கொண்டு போகின்­றார்கள். விசே­ட­மாக வட கிழக்கைப் பொறுத்­த­வரை இன விகி­தா­சா­ரத்தை மாற்­றி­ய­மைக்­கக்­கூ­டிய விதத்தில் தமிழ் பேசும் மக்­களின் அடை­யா­ளங்­களை இல்­லாமல் செய்­யக்­கூ­டிய வகை­யிலும் நிரந்­த­ர­மான பாதிப்­பொன்றை உண்டு பண்­ணக்­கூ­டிய விதத்­திலும் பல விட­யங்­களை அர­சாங்கம் செய்து கொண்டு போகின்­றது. இதன் ஒரு அங்­க­மா­கவே யாழ். குடா­நாட்டில் பூர்­வீக கிரா­மங்­களின் பெயர்­களை மாற்றும் நட­வ­டிக்­கைகள் அமைந்து காணப்­ப­டலாம்.

ஆன­ப­டியால் தான் அர­சியல் தீர்வுப் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­பதில் அரசு அக்­கறை காட்­ட­வில்லை. எங்­களைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு இல்­லாத தற்­போ­தைய நிலை தொட­ரு­மாக இருந்தால் எங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் பெரும் ஆபத்து ஏற்­ப­டக்­கூடும். இந்­நிலை தொடர அனு­ம­திக்க முடி­யாது.

சர்­வ­தேச சமூ­கமும் தன்னால் இயன்ற முயற்­சி­களை தீர்வு காண எடுத்து வரு­கின்­றது. இங்கு வாழும் அனைத்து மக்­களும் குறிப்­பாக பெரும்­பான்மை சமூகம் எமக்­கொரு தீர்வு வர ஒத்­து­ழைக்க வேண்டும். அதே வேளை எமது நிலைப்­பாட்டை வலி­யு­றுத்த சாத்­வீ­கப்­போ­ராட்டம் ஒன்றை எற்­ப­டுத்­து­வதன் மூலம் தான் அதை நாங்கள் முழு­மை­யாக வெளிக்­கொண்டு வர முடியும் எமது அபி­லா­ஷை­களை வெளிக்­காட்ட முடியும்.

இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூ­கத்­துக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் எமது நிலை­மையை தெளி­வாக எடுத்­துக்­காட்ட வேண்­டு­மானால் சாத்­வீ­கப்­போ­ராட்­டத்தில் தமிழ் பேசும் மக்கள் ஈடு­பட வேண்­டிய தேவை தற்­போது உரு­வாகி வரு­கி­றது. அப்­போ­ராட்­டத்தை நாங்கள் எவ்­வித வன்­மு­றை­யு­மின்றி ஒழுக்­க­மாகஇ அமை­தி­யாக சாத்­வீக போரை செய்ய வேண்­டிய காலம் நெருங்கி வரு­கி­றது. இது விட­ய­மாக நாம் எல்­லோ­ரு­டனும் கூடிக்­க­லந்து ஆலோ­சித்து முடிவு எடுக்க வேண்டும்.

தங்­க­ளு­டைய தென்­னா­பி­ரிக்க விஜயம் சம்­பந்­த­மாக என்ன பலனை எதிர்­பார்க்க முடி­யு­மென வின­விய போது
பயணம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு எதையும் எதிர்வு கூற முடி­யாது.
வெற்­றி­ய­ளிக்கும் அல்­லது தோல்வி அளிக்கும் அல்­லது என்­ன­வி­த­மாக முடி­வ­டை­யு­மென்று இப்­போ­தைக்கு கூற முடியா விட்­டாலும் தென்­னா­பி­ரிக்­காவில் நீண்ட கால­மாக இருந்து வந்த தேசி­யப்­பி­ரச்­சினை அங்­குள்ள பெரும்­பான்மை சமூ­க­மான கறுத்த இன மக்­களை சிறு­பான்மை வெள்­ளைச்­ச­மூகம் ஆண்டு வந்த நிலைக்கு ஜன­நா­யக ரீதி­யாக தீர்வு காணப்­பட்­டது. ஜன­நா­ய­கத்தின் அடிப்­ப­டையில் அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்­பட்­டது. எனவே அந்த நாட்டு அர­சியல் தலை­வர்கள் கூடிய அனு­பவம் கொண்­ட­வர்கள்.

அவர்­களைப் பொறுத்­த­வரை இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் நேர்­மை­யா­கவும் விசு­வா­ச­மா­கவும் நடந்து கொள்ள முனை­கி­றார்கள். இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண வேண்­டு­மென்ற நல்­நோக்­கத்­துடன் எங்­களை அழைத்­துள்­ளனர்.

இலங்­கை­ய­ர­சாங்­கத்தின் குழு­வினர் தென்­னா­பி­ரிக்­கா­வுக்குச் சென்று வந்­துள்­ள னர். நாங்கள் அவர்­களால் அழைக்­கப்­ப­டு­கின் றோம். அங்கு செல்­வதன் மூலம் இலங்­கை­ ய­ரசின் நிலையை அறிய வாய்ப்பு எமக்­குண்டு.

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக தமிழ்த்­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு இலங்கை அர­சாங்­கத்­துடன் விசு­வா­ச­மாக பேசி வந்­துள்­ளது. அர­சியல் தீர்வு காண நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த கடும் முயற்சி மேற்­கொண்டு வந்­துள்ளோம் எமது முயற்சி கைகூ­ட­வில்லை நாம் எதிர்­பார்த்­தது நடக்­க­வில்லை. இலங்­கை­ய­ரசு இந்த முயற்­சியில் எந்­த­ள­வுக்கு விசு­வா­ச­மாகஇ நேர்­மை­யாக நடந்து கொள்­கி­றது என்­பது பற்றி கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய எங்­க­ளுக்கு பொது­வாக தமிழ் மக்­க­ளுக்கு சந்­தே­கங்கள் உண்டு. இருந்த போதிலும் தென்­னா­பி­ரிக்­காவின் முயற்­சியை நாங்கள் வர­வேற்­கின்றோம். அவர்கள் நல்­நோக்­கத்­துடன் இந்த முயற்­சியில் இறங்­கி­யுள்­ளனர்.

இருந்த போதிலும் நாங்கள் இலங்கை அர­சைப் ­பொ­றுத்­த­வரை அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். இலங்கை அர­சாங்­க­மா­னது தென்­னா­பி­ரிக்­காவின் நல் முயற்­சியை தங்­க­ளுக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்தி விடு­வார்கள் எனப் ­ப­யப்­ப­டு­கின்றோம். நாங்கள் விசு­வா­ச­மாக தீர்வு காண முய­லு ­கின்றோம் என்ற நிலைப்­பாட்டை உரு­வாக்­கக்­கூ­டிய வகையில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவின் முயற்­சியும் அமைய வேண்டும். இது­பற்றி தென்­னா­பி­ரிக்க அர­சுக்கு நாங்கள் தெளி­வாக எடுத்­துக் ­கூ­றி­யி­ருக்­கின்றோம். அவர்­களும் அதை அறி­வார்கள். இந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எனது தலை­மையில் அடுத்த வாரம் செல்ல இருக்­கின்றோம்.

எமது பயணம் உட­ன­டி­யாக ஒரு நல்ல முடிவைத் தேடித்­த­ரு­மென்றோ சாத­க­மாக அமை­யு­மென்றோ சொல்ல முடி­யா­விட்­டா லும் தாம­த­மில்­லாமல் ஏதா­வது நன்மை நடை­பெ­றக்­கூ­டிய சாதக நிலை காணப்­ப­டு­மானால் அதை நடை­மு­றைப்­ப­டுத்த எம் மால் இயன்ற முயற்­சி­களை எடுப்போம்.

இந்­திய அரசின் இன்­றைய நிலைப்­பாடு எவ்­வாறு இருக்­கின்­றது என அவ­ரிடம் வின­விய போது
நாங்கள் இந்­தி­யாவின் நிலை பற்றி அதி கம் பேசக்­கூ­டாது.
அண்­மையில் நாம் இந்­தியா சென்­றி­ருந்த போது இந்­தி­யப்­ பி­ர­தமர் ஏனைய அமைச்­சர்கள் அர­சியல் தலை­வர் கள் ஆகி­யோரைச் சந்­தித்­தி­ருக்­கின்றோம். அவர்­க­ளிடம் நாங்கள் கூற வேண்­டிய விட­யங்­க­ளையும் அவர்­க­ளிடம் கூறி­யுள்ளோம். கடந்த வருடம் மார்ச் மாதம் ஜெனீ­வாவில் நடை­பெற்ற மனித உரி­மைப்­பே­ர­வைக்­ கூட்­டத்தில் பல பேர் எதிர்­பார்த்­த­தற்கு மாறாக சாத­க­மாக வாக்­க­ளித்­தார்கள் இது எதிர்­பா­ராத மாற்­ற­மாக இருந்­தது.
இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தை தீர்த்து வைப்­ப­தற்கு மேலும் அக்­க­றை­யாக செயல்­பட முயல வேண்­டு­மென்று நம்­பு­கின்றோம். நாங்கள் இந்­தி­யா­விடம் கேட்­டி­ருக்­கின்றோம். சொல்­லி­யி­ருக்­கிறோம். அந்த முயற்சி தொடர வேண்டும்.
இந்­தி­யாவை விமர்­சிப்­பதால் எதையும் அடை­ய­லா­மென்று நான் நினைக்­க­வில்லை. எமது பிரச்­சி­னைக்கு தீர்வு காண இந்­தியா ஒரு காலகட்­டத்தில் தன்னால் இயன்ற அதிக முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது. ஆனால் அது கைகூ­ட­வில்லை. அது கைகூ­டாமல் போன­தற்கு ஒரு வகையில் நாங்­களும் பொறுப்­பா­ன­வர்கள் என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

இது பற்றிச் சிந்­திக்­கி­ற­வர்கள் இந்த உண்­மையை மறுக்க முடி­யாது. எனவே எமது கரு­மங்­களை கவ­ன­மாக கையாள வேண்டும் பகி­ரங்­க­மாக இந்­தி­யாவை பேசு­வதன் மூலம் விமர்­சிப்­பதன் மூலம் அந்த நாட்டை எமக்கு சாத­க­மாக செயற்பட வைக்க முடியாது.

எமது கருத்தை இந்தியாவுக்கு சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய முறையில் சொல்லியுள்ளோம். அவ்வாறு சொல்வதன் மூலமே எமது நோக்கை நிலையை நிறைவேற்ற முடியும்.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைப்பேரவையினால் ஆராயப்பட்டு வருகின்றது. மனித உரிமைப் பேரவையினர் இலங்கைக்கு வருகை தந்து பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் எம்மையும் சந்தித்துப் பேசினார்கள். ஜெனீவாவின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் ஐ.நா.சபை அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்திச் சென்றுள்ளனர். எல்லோரையும் நாம் சந்தி த்து உரையாடியுள்ளோம். ஜெனீவாவின் மனித உரிமைப் பேர வைக் கூட்டம் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ளது. அக்கூட்டம் நடை பெறுவதற்கு முன்பாகவும் இன்னும் பலர் வரவிருக்கின்றார்கள்.

இவ்வாரமும் பலர் இலங்கைக்கு வரவிரு க்கின்றார்கள். அவர்கள் உண்மையை அறிந்து நியாயத்தின் அடிப்படையில் நடந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம் என சம்பந்தன் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com