Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் - தயான்

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால்இ இலங்கை மீதான அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் ஜயதிலக்க கூறினார்.

இறுதிக்கட்டப் போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்த டுவிட்டர் குறுஞ்செய்திஇ 'நடுநிலையற்றது' என்றும் 'விசாரணை எதுவும் இல்லாத முன்கூட்டிய அனுமானம்' என்றும் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

'சாதாரண ராஜதந்திர முறைப்படியான வழக்கங்களைவிட வேறுபட்ட விதத்தில் தான் அமெரிக்கா அதிகாரபூர்வமாக நடந்துகொண்டிருக்கிறது' என்று கூறிய தயான் ஜயதிலக்கஇ நட்பு நாடொன்றிடமிருந்து இவ்வாறான வழக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்.

'இந்த டுவிட்டர் குறுஞ்செய்தியைப் போலஇ சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையும் ஒருபோதும் சுயாதீனமாக இருக்க வாய்ப்பில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக தயான் ஜயதிலக்க பணியாற்றிவந்தார்.

பிற்காலத்தில் அரசாங்கத்தின் பிரான்ஸ் தூதுவராகவும் பணியாற்றிய தயான், பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேறிய பின்னர் அண்மைக் காலங்களாக அரசாங்கத்தின் வெளியுறவுச் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி கொண்டவராகவும் கருத்துக்களை வெளியிட்டுவந்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தவறான வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளே தற்போதைய கடுமையான சர்வதேச அழுத்தத்துக்குக் காரணம் என்ற போதிலும் இலங்கை மீதான அழுத்தங்கள் நியாயமானவை என்று கூறமுடியாது என்றும் தயான்  ாதிட்டார்.

'2009-ம் ஆண்டிலேயே இவ்வாறான விசாரணைக்கான முயற்சியொன்றை அமெரிக்கா எடுத்திருந்தது. ஆனால் அப்போது அது முடியாமல் போய்விட்டது. ஜெனீவாவில் எங்களின் பிரதிநிதித்துவத்தினால் அப்போது கிடைத்த வெற்றி காரணமாக அவர்களின் முயற்சி தோல்வி கண்டது' என்றார் தயான்.

'அப்போது இருந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திர நகர்வுகள் இன்று இல்லாதபடியால் தான் இலங்கைக்கு கடுமையான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன' என்றும் அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் இராஜதந்திரியிடம்இ சர்வதேச விசாரணையை நோக்கிய அமெரிக்காவின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் எந்தவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டபோதுஇ 'அதன் பிரதிவிளைவுகள் மிகப் பயங்கரமாக இருக்கும்' என்று பதிலளித்தார் இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி.

'சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்று உருவாகுமானால் இரண்டு வழிகளில் அது ஏற்படலாம். அதாவது- ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவர் நியமிக்கப்படலாம் அல்லது சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று உருவாகலாம்' என்றார் தயான் ஜயதிலக்க.

'
சர்வதேச தடைகள் வரலாம்'

அந்த விசாரணையின் தீர்ப்புகளுடன் இலங்கை ஒத்துழைத்துச் செயற்படாதபட்சத்தில்இ 'அமெரிக்காஇ பிரித்தானியா போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களால் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியான பொருளாதாரஇ வணிக மற்றும் நிதித் தடைகள் கொண்டுவரப்பட்டு- இலங்கையின் பொருளாதார குரல்வளை நசுக்கப்படலாம்' என்றும் ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

'அதற்கும் முன்னதாகஇ எதிர்வரும் மார்ச் மாதத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை மோசமாக தோல்விகண்டால் அது நேரடியாக இலங்கையின் பங்குச் சந்தைகளைப் பாதிக்கும்' என்றும் அவர் கூறினார்.

அதேபோல இலங்கை இராணுவ அதிகாரிகள் மட்டுமன்றி மற்றைய அதிகாரிகளுக்கும் சர்வதேச பயணங்களை மேற்கொள்ள முடியாதபடி புலம்பெயர் தமிழர்களால் வழக்குகள் போடப்படலாம் என்றும் தயான் கூறினார்.

அமெரிக்கா போன்ற நாடுகளின் இவ்வாறான கடுமையான நிலைப்பாடுகள் இலங்கைக்குள்ளும் இனரீதியான சமூக இடைவெளியை இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் பிபிசியிடம் கூறினார் இறுதிக்கட்டப் போரின்போது ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் ஐநாவுக்கான தூதுவராக பணியாற்றிய தயான் ஜயதிலக்க.(பிபிசி
)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com