Contact us at: sooddram@gmail.com

 

காட்டிக் கொடுக்கும் புலி காஸ்ரோவின் கணணிகள்

புலிகளுடன் தொடர்பிலிருந்த புலம்பெயர் தமிழர்களின்  இரகசியங்கள் இலங்கையின் கையில்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுச் செயலகமாகவும், புலம்பெயாந்த தமிழர்களின் செயற்பாட்டுத் தளமாகவும் இயங்கிக் கொண்டிருந்தவெளிநாட்டுப் பிரிவுஅல்லதுகஸ்ரோ செயலகம்என அழைக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்பில் பேணப்பட்ட சகல ஆவணங்களும் முழுமையாக இராணுவத்தால் இறுதிப் போரில் கைப்பற்றப்பட்டதாக கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் இலங்கையின் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் போன்றோரும் வெளிநாடுகளில் கடன் கொடுத்தோர் பட்டியல் முதல் சொத்துக்கள் கொள்வனவு செய்தோர் பட்டியல் வரை கைப்பற்றப்பட்டதாக அங்கு சென்றுவரும் முக்கியஸ்தர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் ஆணித்தரமாகத் தெரிவித்து வந்தனர்.

இதன் ஒரு கட்டமாக இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்துகிறிஸ்ரீனாஎன அழைக்கப்படும் ஒரு பாரிய கப்பல் அடையாளம் காணப்பட்டதாக தனது இணையத்தளத்தில் கடந்த ஆண்டு போர் முடிந்த கையோடு அறிவித்த இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அதனை கடந்த ஆண்டு இறுதியில் கைப்பற்றியும் இருந்தது.

இந் நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.ரெஜி, மற்றும் ஆனந்தராஜா, பவிதரன், அச்சுதன் பிருந்தாபன், ரூபன், ரவிசங்கர் கனகராஜா, நரேந்திரன் இரத்தினசபாபதி போன்றவர்களின் விபரங்களை கடந்த ஆண்டு வன்னிப் போர் முடிந்த சில மாதங்களிலேயே வெளியிட்ட இலங்கை அரசு இதனை இன்ரபோல் என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தது.

இந் நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள சொத்துக்கள், நிறுவனங்கள், கட்டமைப்புக்கள் தொடர்பாக கஸ்ரோவின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கணனிகள், மற்றும் ஆவணங்களில் உள்ள விபரங்களை மொழி பெயர்க்கும் அல்லது உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு அதனை மேற்படி நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இந்நிலையில் தன்னைச் சந்தித்த மற்றும் தொடர்பு கொள்ளும் பிரமுகர்களுடன் கதைத்துள்ள கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனும் தான் கைதியாக இருக்கும் சூழ்நிலையில் இருந்து கொண்டு தன்னால் இயலக்கூடியதைத் தான் அங்குள்ள சிறைப்பட்டவர்களிற்கு செய்வதாகவும், தான் அரசியல் பேசவோ, அதிகாரம் பற்றிப் பேசவோ வரவில்லை என்று தெரிவித்ததோடு தான் காட்டிக் கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இவ்வாறு நேரடியாகப் பதிலிறுத்துள்ளார். காட்டிப் கொடுப்போர், துரோகி என்ற சொற்பதங்களை தாராளமாக என் மீது குற்றஞ்சாட்டுவோர் கூறட்டும். ஆனால் உண்மை யாதெனில் எனக்கே தெரியாத பல விடயங்களை அவர்கள் கஸ்ரோவின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மூலமே எனக்குத் தெரிய வருகிறது. அந்த அவ்வளவுக்கு முழுமையாக போராட்டத்தைப் பற்றிய இரகசியங்களை அழிக்காமல் இலங்கைப் படைகளிடம் ஒப்படைத்து சென்றிருக்கிறர்கள் அந்த அலுவலத்தில் இருந்தவர்கள்என கே.பி. தெரிவித்துள்ளார்.

இதனை நிரூபிப்பது போலவே இந்த வார சண்டே ஒப்சேவர் வார இதழும் இலங்கைப் புலனாய்வுப் படை கஸ்ரோவின் அலுவலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து பல புதிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருப்பதான விலாவாரியான கட்டுரையொன்றைப் பிரசுரித்துள்ளதோடு 2003ம் ஆண்டிற்கு பிறகான விடயங்கள் பலவும் இவற்றில் கிடைத்துள்ளதாக சிலாகித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com