Contact us at: sooddram@gmail.com

 

வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பதை வடகிழக்கை தளமாக கொண்டு செயற்படும் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளுமே தீர்மானிக்கவேண்டும்.
-மனோ கணேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என நான் தெரிவித்ததாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தியை தமிழ் ஊடகங்கள் மறு பிரசுரம் செய்துள்ளன. இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள எமது கட்சியின் கருத்து சரியான அடிப்படையில் புரிந்துகொள்ளப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் உடன்பிறப்புக்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கக்கூடிய உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கூட்டமைப்பு பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தது.

இன்று புலிகள் இல்லாத நிலையில் வடகிழக்கின் அரசியல் தலைமை பாத்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வகிக்கின்றது என்பதுவே ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகும். எனவே கூட்டமைப்பின் அரசியல் பாத்திரம் தொடர்பில் எமக்கு முரண்பாடு கிடையாது. அதேவேளையில் வடக்கு, கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் பெருந்தொகையான தமிழ் மக்கள் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இம்மக்கள் எதிர்நோக்கும் அரசியல், கலாசார, சமூக - பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான சவால்கள் உதாசினப்படுத்தப்படவோ அல்லது குறைத்து மதிப்பிடப்படவோ முடியாதவையாகும். இந்த அடிப்படை யதார்த்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கை தளமாக கொண்டு செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளும் புரிந்துகொண்டுள்ளன என நாம் நம்புகின்றோம்.

வடக்கு, கிழக்கு வாழ் சகோதரர்கள் உட்பட நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமது கட்சி பாரிய தலையீடுகளை செய்து தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முன்னெடுப்பதை வடகிழக்கு தமிழ் மக்கள் தெளிவாக அறிவார்கள். ஆனால் வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பதை வடகிழக்கை தளமாக கொண்டு செயற்படும் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளுமே தீர்மானிக்கவேண்டும்.

இதில் நாம் தலையிட மாட்டோம். அதேபோல் தென்னிலங்கையில் மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிடமோ அல்லது வடகிழக்கு தமிழ் கட்சிகளிடமோ ஒப்படைத்துவிட்டு தென்னிலங்கை தமிழ் கட்சிகள் காத்திருக்க முடியாது. இன்று அரசியலமைப்பு திருத்தங்கள், தேர்தல் முறை மாற்றம், மலையகத்தின் பிரதேச செயலக எல்லைகளை தீர்மானிப்பது, மலையகத்தின் சகித்துகொள்ள முடியாத வறுமை மற்றும் கொழும்பிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு ஆகியவை உட்பட பெருந்தொகையான பிரச்சினைகளை தென்னிலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி தமிழ் மக்களும், வடகிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து தெற்கில் நிரந்தரமாக வாழும் தமிழர்களும் எதிர்நோக்குகின்றார்கள்.

அரசாங்கத்திடமும், சர்வதேச சமூகத்திடமும், இந்திய அரசிடமும் வடகிழக்கு பிரச்சினைகளை பேசுகின்ற வேளையிலேயே, எமது பிரச்சினைகளையும் கலந்துரையாடி எங்களுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் என நாம் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இருக்க முடியாது. இப்பிரச்சினைகளை தென்னிலங்கையை தளமாக கொண்டு செயற்படும் கட்சிகள் தாமே எதிர்கொண்டு தீர்வுகாணவேண்டும்.

இல்லாவிட்டால் எமது கட்சிகளின் செயற்பாட்டிற்கு அர்த்தம் இருக்க முடியாது. இந்த அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையில் இலங்கை முழுக்க வாழும் அனைத்து தமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு கட்சியும் ஏகபோக பிரதிநிதித்துவ உரிமையை கொண்டிருக்கவில்லை. இதுவே ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுதியான நிலைப்பாடாகும். இதை
தமிழ் மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் புத்திஜீவிகளும், புலம் பெயர்ந்த தமிழர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் புலிகளின் பிரசன்ன காலத்தில் மனோ கணேசன் போன்றவர்கள் புலிகளையே முழுத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்று கருத்துக்கள் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று ஐதே கட்சிசியினால் ஏமாற்றப்பட்டு பதவியற்ற நிலையில் சுடலை ஞானம் பிறந்திருப்பது கடந்த காலங்களில் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைகளில் நாங்கள் பங்குதாரர் அல்ல என்று நிலைநாட்ட எடுக்கும் முயற்சியே என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com