Contact us at: sooddram@gmail.com

 

பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

பத்மநாபசாமி கோவில் பாதாள அறையில் நேற்று 6-வது நாளாக தோண்ட தோண்ட தங்க நகைக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பழமையான கோவில்
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பழமையான அனந்த பத்மநாபசாமி கோவில் உள்ளது.
இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது. இந்த கோவில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
6 பாதாள அறைகள்
பிரசித்திபெற்ற இந்த கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள் உள்ளன.
அவை நீண்டகாலமாக பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கோவிலின் நகை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலின் பாதாள அறைகளை திறந்து அங்குள்ள நகைகளை கணக்கெடுத்து பட்டியலிட்டு அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்காக கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழுவினர் கடந்த திங்கட்கிழமை முதல் பாதாள அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகை குவியல்கள்
முதலில் திறக்கப்பட்ட 2 அறைகளில் தங்க குடங்கள், பொற்காசுகள் போன்றவை இருந்ததை கண்டு குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர்.
அதன் பின்னர் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த தங்கம், வெள்ளி, வைரம், வைடூரிய நகைகள் மதிப்பீட்டு குழுவினரை வியப்பில் திக்குமுக் காட வைத்து விட்டது. கலைநயம் மிகுந்த பல பொருட்கள் விலை மதிப்பிட முடியாத அளவுக்கு இருந்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் திறக்கப்பட்ட முதல் இரண்டு அறைகளில் கண்ணை பறிக்கும் நகைகள் மூட்டை, மூட்டையாக கட்டி வைத்து இருந்தன. முதல் அறையில் 18 அடி நீளம் உள்ள தங்க மாலைகள் உள்பட ஏராளமான நவரத்தின நகைகள் குவியல் குவியலாக இருந்தன. இவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
1000 கிலோ தங்க நாணயங்கள்
இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி காலத்துக்கு முற்பட்ட 17 கிலோ தங்க நாணயங்கள், நெப்போலின் மன்னர் கால 18 நாணயங்கள், பட்டுத்துணியால் போர்த்தப்பட்ட அபூர்வ வைரக்கற்கள், அத்துடன் 1000 கிலோ தங்க நாணயங்கள், தங்கத்தினால் ஆன சிறிய அணிகலன்கள், சிறிய தங்க யானை சிலைகளும் இருந்தன.
1772-ம் ஆண்டு முத்திரையுடன் கூடிய பொற்காசுகள், மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மாவின் ஆட்சிக்காலத்தை குறிப்பிடுவதாக அமைந் துள்ளது. பெல்ஜியம் ரத்தின கற்கள், 2 ஆயிரம் மாணிக்க கற்கள், ராணிகள் அணியும் தங்க ஒட்டியாணங்கள், மன்னரின் கிரீடங்கள், தங்க வாள்கள் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க சால்வைகள், தங்கத்தால் பொதியப்பட்ட உத்திராட்ச மாலைகளும் கிடைத்துள்ளன.
ரூ.1 லட்சம் கோடி
நேற்று 6-வது நாளாக கணக்கெடுப்பு பணி நீடித்தது.
நேற்றும் தோண்ட தோண்ட தங்கம், வைரம், வைடூரியம் என நவரத்தினங்கள் அடங்கிய நகைகள் ஏராளமாக கிடைத்தன. மேலும் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க வைர கிரீடங்கள் உள்பட பல வகையான நகைகளும் குவியல் குவியலாக உள்ளன.
இந்த நகைகளை வெளியே எடுத்து வந்து கணக்கிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விலைமதிக்க முடியாத, கலைநயம் மிக்க அரிய நகைகளாக அவை உள்ளன. இதனால் மொத்த நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியில் இருந்து 1 லட்சம் கோடியை தாண்டும் என்று கருதப்படுகிறது.
திருப்பதியை மிஞ்சுகிறது
உலகத்திலேயே பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் இதுவரை இருந்து வருகிறது.
தற்போது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள நகைகள் திருப்பதி கோவில் நகைகள் மற்றும் சொத்துக்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் ஆட்சி காலத்தில், அரண்மனைகளை விட கோவில் ரகசிய அறைகளில் நகைகள் வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என கருதி இதுபோல் நகைகளை சேர்த்து வைத்துள்ளனர். இவற்றில் சிலவற்றை சாமிக்கு சார்த்தவும், வீதியுலாவின்போது அணிவிக்கவும் பயன்படுத்தி உள்ளனர்.
பக்தர்கள் அதிகரிப்பு
திருவனந்தபுரம் கோவில் நகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாவதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த கோவிலின் மீது பார்வை விழுந்துள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மெட்டர் டிடெக்டர், கண்காணிப்பு கேமரா, ஸ்கேனர் வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.
3 அடுக்கு பாதுகாப்பு
இதற்கிடையே கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி.
ஜேக்கப் புன்னூஸ் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை நேற்று கூட்டினார். உடனடியாக 2 பிரிவு விசேஷ அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள் என்று திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபிரகாம் அறிவித்தார். கொள்ளை முயற்சியை தடுப்பதற்காக கோவிலுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து இரவு பகலாக 24 மணி நேர தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நகைகள் கணக்கெடுக்க எதிர்ப்பு
நகைகள் கணக்கெடுப்பு தொடர்ந்த நிலையில், "கோவிலில் சோதனை நடத்தக்கூடாது.
அதனால் வெளியாகும் தகவலால் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளைபோக வாய்ப்பு உள்ளது'' என்று கூறி ஒரு குழுவினர் கோவிலின் மேற்கு நடை முன் திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், ஆய்வுக்குழுவினர் கோவிலுக்கு வெளியே வந்தபோது தடுத்து நிறுத்தி விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. நிதிக்குவியல் பற்றி விரிவான செய்திகள் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்ட படங்களை வெளியிடுவது கோவில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறினர்.
கோஷம்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந்தரராஜன்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி அவருக்கும் எதிராக கோஷம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் சி.எஸ்.ராஜன், எம்.என்.கிருஷ்ணன், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந்தரராஜன் ஆகியோர் கோவில் நிர்வாக அதிகாரியின் அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஏராளமாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் பி.பி. ஜோஸ் தலைமையில் போலீசார் அவர்கள் 3 பேரையும் தக்க பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த நிதிக்குவியல் பற்றிய அறிக்கை அடுத்த மாதத்துக்கு (ஆகஸ்டு) முன்பு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். நூற்றாண்டுகளாக, விலை உயர்ந்த பொருட்களை பாதுகாத்து வந்ததால் பொதுமக்கள் மத்தியில் மன்னர் குடும்பத்தினரின் மதிப்பு அதிகரித்துள்ளது.
ரகசிய அறை கதவில் பாம்பு படம் இருந்ததால் அதிர்ச்சி
பத்மநாபசாமி கோவில் ரகசிய பாதாள அறைகளில் உள்ள நகைகள் விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியின்போது மதிப்பீட்டு குழுவினர் ஒரு அறையை திறக்க முயன்றபோது அதன் கதவில் பாம்பு படம் வரையப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த அறையில் ஆபத்து எதுவும் இருக்கலாம் என்று கருதி, அதை திறக்காமல் விட்டு விட்டனர். பின்னர்
உரிய பாதுகாப்புடன் அந்த அறையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com