|
||||
|
சனல் - 4
விவகாரம்
இலங்கை நிபுணர்குழு
புதிய ஆய்வு; பிரிட்டிஷ்
தொலைத் தொடர்பு நிறுவனமும்
களத்தில்
சனல் -4 போலி
வீடியோ ஆவணம் தொடர்பாக
பாதுகாப்பு
அமைச்சும்
நிபுணர்கள்
குழுவும்
இணைந்து புதிய ஆய்வொன்றினை
ஆரம்பித்திருப்பதாக
இராணுவப்
பேச்சாளர்
மேஜர் ஜெனரல் உபய மெதவள
நேற்று தெரிவித்தார்.
பாதுகாப்பு
அமைச்சுக்கு
கிடைக்கப்
பெற்றிருக்கும்
மேற்படி சனல்-4
வீடியோ ஆவணம் போலியாக
சித்தரிக்கப்பட்டதென்பதற்கு
தகுந்த ஆதாரங்கள்
கிடைத்துள்ளனவென்றும்
அவர் கூறினார்.
திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத
உண்மையான
வீடியோ ஆவணத்தில்
தோன்றும்
நபர்களின்
பேச்சுவார்த்தை
தமிழிலேயே
உள்ளது. இருப்பினும் அதற்குபதிலாக
சிங்கள உரையாடல்களை
மேற்படி வீடியோ காட்சிக்கு
பதிவு செய்துள்ளனர்.
வீடியோ காட்சியில்
எல்.ரி.ரி.ஈ.
உறுப்பினர்களே
தோன்றுகின்றனர். இவர்கள் இராணுவத்தினரின்
சீருடையில்
காட்சியளிக்கின்றனர்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்.ரி.ரி.ஈயினர்
தோற்கடிக்கப்பட்டமையை
அடுத்து புலிகளுக்கு
ஆதரவான குழுவினர்
நாட்டுக்கு
அபகீர்த்தியை
ஏற்படுத்தும்
வகையில் சனல்-4
போலி விடியோ
ஆவணங்களை
தயாரிப்பதன்
மூலம் வீணான முயற்சியில்
ஈடுபட்டு
வருகின்றனர்
எனவும் இராணுவப் பேச்சாளர்
சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை
ஒலிபரப்புக்
கூட்டுத்
தாபனத்தில்
நேற்று முன்தினம்
உரையாற்றிய
ஐ.நாவின் இலங்கைக்கான
தூதுவரும்
பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உரையாற்றுகையில்,
சனல்-4 ஆவணத்தில்
வெளியாகும்
சிங்கள உரையாடல் ஆவணம் சித்தரிக்கப்பட்டிருக்கும்
சூழ்நிலைக்கு
சிறிதும்
பொருத்தமில்லையெனவும்
கூறினார்.
மேற்படி ஆவணத்தில்
தனிப்பட்ட
நபர்கள் இராணுவ சீருடையில்
காணப்படுவதனை
சுட்டிக்காட்டிய
மேஜர் ஜெனரல் சில்வா, இதற்கு முன்னதாக புலிகள் ஸ்ரீ மகாபோதி
வளவிலுள்ள
அப்பாவி பக்தர்களை
கொலை செய்யும்
போதும் கட்டுநாயக்க
விமானநிலைய
தாக்குதலின்
போதும் இராணுவ சீருடையில்
தோன்றியிருந்ததை
நினைவு கூர்ந்தார். மேலும், சனல்-4
ஆவணமானது
எல்.ரி.ரி.ஈ.
ஆதரவாளர்களினால்
சர்வதேச சமூகத்தை திசை திருப்புவதற்காகத்
தயாரிக்கப்பட்ட
தொன்றாகும்
என்றும் அவர் கூறினார்.
இந்த நாட்டை
தீவிரவாதிகளிடமிருந்து
மீட்டெடுத்த
இராணுவ வீரர்களுக்கு
அபகீர்த்தியை
ஏற்படுத்தும்
வகையிலேயே
சனல்-4 வீடியோ
ஆவணம் வெளிவிடப்பட்டிருப்பதாக
பொருளாதார
அபிவிருத்தி
அமைச்சர்
பசில் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை
அழுத்தமாக
கூறியிருந்தார்.
அத்துடன்,
இலங்கை அதிகாரிகளுக்கு
கிடைக்கப்பெற்றிருக்கும்
உண்மையான
வீடியோ காட்சி மற்றும் அதன் உண்மையான
ஒளிபரப்பு
ஆகியவற்றுடன்
ஒப்பீட்டுப்
பார்க்கையில்
வெளியாகியிருக்கும்
சனல்- 4 வீடியோ
ஆவணமானது
இயற்கையாகவே
மரணிக்கிறதெனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின்
கொலைக்களங்கள்
என்ற தலைப்பில்
அண்மையில்
பிரிட்டனின்
சனல்-4 தொலைக்
காட்சியில்
ஒளிபரப்பப்பட்ட
ஆவணப்படம்
தவறான எண்ணத்தை தோற்றுவிப்பதாகவும்
உரிய முறையில்
பிரதிநிதித்துவப்
படுத்தப்படவில்லை
என்றும் முறைப்பாடுகள்
கிடைக்க பெற்றதையடுத்து
பிரிட்டிஷ்
அரசாங்கத்தின்
தொலைத் தொடர்புக்கான
அலுவலகம்
அந்த ஆவணப்படத்தின்
உண்மைத்தன்மையை
பற்றி விசாரிக்கவுள்ளது.
பிரிட்டன் டி.வி. பிக்ஸி என்ற வெப்தளத்தில்
அலக்ஸ் கெஸ்ட் என்றவர் பதிவு செய்த
அறிக்கையை
எடுத்தே மேற்படி அலுவலகம் இந்த விசாரணையை
மேற்கொள்கிறது.
கிடைத்த முறைப்பாடுகளைப்
பற்றி ஆராய்ந்து
குறிப்பிட்ட
அமைப்பு (சனல்-4)
ஒளிபரப்பிய
ஆவணப்படம்
பிரிட்டிஷ்
ஒளிபரப்புக்
கோவைக்கு
ஏற்ப உள்ளதா? அது தொடர்பாக மேலதிக விசாரணை அல்லது நடவடிக்கை
தேவையா என்பதை (ஜீணீழசீ) அலுவலகம் முடிவு செய்யும்.
ஒளிபரப்பு கோவை மீறப்பட்டதாக
கருதப்பட்டால்
அந்த ஆவணப்படத்தை
ஒளிபரப்பியவருக்கு
அபராதம் விதிக்க அந்த அலுவலகத்துக்கு
அதிகாரம்
உண்டு.
மேற்படி ஆவணப்படத்தில்
சனல்-4 மேலதிகமாக
சேர்ந்திருந்த
பகுதி செம்மைப்படுத்தப்பட்ட
வகையில் திரிபு படுத்தப்பட்டிருந்தால்
பொதுமக்களுக்கு
தவறான எண்ணத்தை தோற்றுவிக்க
முயன்றதாக
சனல் -4 மீது
நடவடிக்கை
எடுக்கும்
அதிகாரத்தை
அந்த அமைப்பு
கொண்டிருக்கிறது.
கடந்த 14 ஆம் திகதி
சனல்-4 மேற்படி
ஆவணப்படத்தை
ஒளிபரப்பியதையடுத்து
நூற்றுக்கணக்கான
முறைப்பாடுகள்
கிடைத்திருந்தன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |