Contact us at: sooddram@gmail.com

 

81 யாழ் நூலக எரிப்புடன்உதயன்பத்திரிகை உரிமையாளர் சரவணபவானின் தந்தையும் தொடர்புபட்டவர !

ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் அம்பலமாகிய அதிர்ச்சிச் செய்தி !

- நமது யாழ் நிருபர்

1981ம் ஆண்டு யாழ் பொதுசன நூல்நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தில்உதயன’; பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் திரு சரவணபவானின் தந்தை ஈஸ்வரபாதமும் தொடர்புபட்டிருந்த செய்தி இன்று சாவகச்சேரியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண ஆகியோர் கலந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்ட மேடையில் அம்பலத்திற்குவந்து பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த திரு சரவணபவான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2010 தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்திருந்தார். இதன் பின்னர் தனதுஉதயன்பத்திரிகை ஊடாக கட்டம் கட்டமாக சில தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உட்பட பல கூட்டமைப்பு தலைவர்களை திட்டமிட்டு ஓரங்கட்டத்தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களினாலேயே இச் செய்தி முதலில் கசியவிடப்பட்டிருந்தது. பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு கட்சிகளுக்கிடையில் முறுகல் நிலை அதிகரித்து வந்ததைத் தொடர்ந்தும், கூட்;டமைப்பிலிருந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களையும், யாழ் மாநகர சபையில் எதிர்கட்சியிலிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற  ‘உதயன்பத்திரிகையூடாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களாலேயே இந்தச் செய்தி மேலும் பரவலாகப் பகிரங்கப் படுத்தப்பட்டிருந்தது. தற்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தச் செய்தியைப் பகிரங்கப்படுத்தி அங்கு குழுமியிருந்த பல  அரசியல்வாதிகளையும், தென்னிலங்கை ஊடகவியலாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆனால் இந்தச் செய்தி அரசியல் வட்டாரங்களில் அண்மைக்காலங்களில் பேசப்பட்டு வந்திருந்தபடியினால் இது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம்பற்றி கூட்டமைப்பு பிரமுகர்கள் ஊடாக ஏற்கனவே தெரியவந்திருந்த விபரங்களாவன, திரு சரவணபவானின் தந்தையார் திரு ஈஸ்வரபாதம் பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றியிருந்த ஒருவரெனவும், ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரெனவும், யாழ் நூலகத்தை எரியூட்டிய பொலிஸ் குழுவில் ஒருவரெனவும், எரியூட்டலுக்கு திட்டமிட்ட இரவு அவர்களுக்கு யாழ்ரெஸ்ட் ஹவுஸ்’ல் மதுபான விருந்தளித்து உபசரித்தவரெனவும் அறியப்பட்டிருந்தது. தற்போது ஜனாதிபதி முன்னிலையில் இச் சம்பவத்தை மேலும் அம்பலப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திரு சரவணபவானின் தந்தை திரு ஈஸ்வரபாதம் ஒரு பொலிஸ் அதிகாரி எனவும், யாழ் பொதுசன நூல் நிலையம் 1981ல் எரியூட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும், நூல் நிலையத்தை எரியூட்டிய குழுவினரை தனது வீட்டில் வைத்தே உபசரித்திருந்தார் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தாரெனினும், நூலகத்தை எரியூட்ட திரு ஈஸ்வரபாதமும் நேரடியாகச் சென்றிருந்தாரா என்ற விடயத்தை தெரிவிக்கவில்லை.

சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள வட மாகாண உள்ஊராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தோல்வியடையலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயப்படத்தொடங்கியுள்ளபடியினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் பகிரங்கமாக இனவெறியூட்டும் பிரச்சாரங்களை  ுன்னெடுத்து வரும் நிலையில், இச் செய்தி பகிரங்கமாகியது அவர்களுக்குப் பேரிடியாக அமையுமென்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. இது தவிர தற்போது இந்தச் சம்பவம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே அரசின் பிரச்சார வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை இது மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தெரிந்திருந்தும், ஏன் இந்த விடயம் பற்றி இதுவரையில் பாராமுகமாக இருந்தார்கள் எனவும், தூய தமிழ் தேசியவாதிகளின் கட்சியான தமிழரசுக் கட்சியில் போட்டியிட திரு சரவணபவனிற்கு ஏன் இடமளிக்கப்பட்டது எனவும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடமிருந்துவரும் கேள்விகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்கள் எனவும் விடயமறிந்த வட்டாரங்களில் வினாவப்படுகிறது.

(நன்றி: தேனி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com