|
||||
|
ஐ.ம.சு.முவின் வெற்றி
வாய்ப்பு
உறுதி
சகிக்க முடியாத தமிழ்க் கூட்டமைப்பு
அரசாங்கத்தின்
மீது சேறுபூச
முயற்சி
அரசாங்கம் வடபகுதியில்
முன்னெ டுத்துவரும்
பாரிய அபிவிருத்தித்
திட்டங்களின்
விளைவாகவே
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மற்றும் எதிர்க் கட்சிகளின்
அபேட்சகர்களும்,
முக்கியஸ்தர்களும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்
இணைகின்றனர்
என்று கமநல சேவைகள்,
வனவிலங்குகள்
அமைச்சர்
எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஐ.ம.சு.மு. எவரையும் பலாத்காரப்
படுத்தியோ,
வசதி வாய்ப்புக்களையும்,
வாக்குறுதிகளையும்
வழங்கியோ
தம் பக்கம்
சேர்த்துக்கொள்ள
வில்லை. மாறாக சகலரும்
சுயவிருப்பின்
பேரிலேயே
ஆளும் கட்சியுடன்
இணைவதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
ஓரிரு ஊடகங்களில்
வெளியாகியுள்ள
செய்திகளுக்குப்
பதிலளிக்கும்
வகையிலேயே
அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும்
குறிப்பிடுகையில்,
வடபகுதியில்
நடைபெறுகின்ற
உள்ளூராட்சி
சபைத் தேர்தலில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி
பெறப்போவதை
சகித்துக்
கொள்ள முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
உள்ளிட்ட
சில எதிரணிக்
கட்சிகள்
சில ஊடகங்களைப்
பயன்படுத்தி
ஐ.ம.சு.முன்னணி
மற்றும் அரசு மீது
சேறுபூசும்
நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளன.
அரசாங்கம் வடபகுதியில்
அபிவிருத்தி
வேலைத் திட்டங்கள்
எதனையும்
செய்யவில்லை. மாறாக
வெவ்வேறு
விதமான அழுத்தங்களையும்,
வசதி வாய்ப்புகளையும்
வழங்கி த.தே.கூட்டமைப்பு
உள்ளிட்ட
எதிர்க் கட்சிகளின்
அபேட்சகர்களையும்,
முக்கியஸ்தர்களையும்
ஆளும் ஐ.ம.சு. முன்னணி தம்பக்கம்
இழுத்துக்
கொள்வதாகவும்
கூறுகின்றனர்.
இக்கூற்றுக்களில் எதுவிதமான
உண்மையுமே
கிடையாது. அவை அப்பட்டமான
பொய்கள்.
பயங்கரவாதம் காரணமாக அழிவுற்ற வட பகுதியைத்
துரிதமாக
மீளக் கட்டியெழுப்பவென
பாரிய அபிவிருத்தித்
திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. இதன் பயனாக வடபகுதி
மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன்
கைகோர்த்துள்ளார்கள்.
நான் ஒரு மாதகாலத்திற்குள்
மூன்று தடவைகள் யாழ். குடாநாட்டுக்கு விஜயம்
செய்துள்ளேன்.
அங்கு 15 கமநல சேவை நிலையங்கள்
உள்ளன. இந்த நிலையங்களுக்கு
நேரில் விஜயம் செய்து விவசாய மக்களுடன்
அளவளாவினேன்.
அம்மக்கள் எம்மிடம்
நிலமிருக்கின்றன,
தண்ணீரையும்,
பசளையையும்
வழங்கும்படியே
எம்மிடம்
கோரினார்கள்.
இதற்கேற்ப பொருனாதார
அபிவிருத்தி
அமைச்சும்,
கமநல சேவைகள்
அமைச்சும்
இணைந்து வடபகுதியில்
69 குளங்களை
தற்போது புனரமைக்கின்றன. இவ்வருட முடிவுக்குள்
நூறு குளங்களையும்
புனரமைத்து
பூர்த்தி
செய்யவுள்ளோம்.
அரசாங்கம் நெற்செய்கையாளர்களுக்கு
ஐம்பது கிலோ எடைகொண்ட
ஒரு மூடை
பசளையை ரூபா 350.00 மானிய
விலைக்கு
வழங்கி வருகின்றது. இது வடபகுதி நெற் செய்கையாளர்களுக்கும்
வழங்கப்படுகின்றது.
அத்தோடு திராட்சை,
பப்பாசி, வாழை, உள்ளிட்ட
மரக்கறி செய்கையாளர்களுக்கும்
பழச் செய்கையாளர்களுக்கும்
பசளை மானிய
விலையில்
வழங்கப்படுகிறது.
யாழ். குடாநாட்டில் இப்போது
மலையகப் பிரதேசங்களில்
உற்பத்தி
செய்யப்படும்
கரட், பீட்ரூட்
மற்றும் லீஸ் போன்ற
மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன.
இவர்களுக்கும் பசளை மானிய விலையில்
வழங்கப்படுகின்றது.
பசளையை மானிய விலையில் எந்த இடத்திலும்
கொள்வனவு
செய்வதற்கு
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென விசேட அட்டை விவசாயிகளுக்கு
வழங்கப்படுகின்றது.
அந்த அட்டைக்கு
எந்த இடத்திலும்
பசளையைப்
பெற்றுக்கொள்ள
முடியும்.
யாழ். குடாநாட்டிலுள்ள சகல கமநல நிலையங்களிலும்
இந்த அட்டைகள்
வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுற்றதும்
அவை விவசாயிகளுக்கு
வழங்கப்படும்.
ஏ-9
நெடுஞ்சாலையை
காப்பட் முறையில் செப்பனிடும்
பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம்
ஏப்ரல் மாதம் இப்பணி
பூர்த்தி
செய்யப்படும்.
ஏ-39 நெடுஞ்சாலை
பூநகரி, மன்னார், புத்தளம் ஊடாக ஐந்து
மணித்தியாலங்களுக்குள்
கொழும்பைச்
சென்றடையக்
கூடிய வகையில் அபிவிருத்தி
செய்யப்படுகின்றது.
வடபகுதி விவசாயிகளுக்கு
தண்ணீர் வழங்குவதைப்
பிரதான நோக்காகக்
கொண்டு தான் மொரகஹகந்த
நீர்ப்பாசனத்
திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதிக்கான ரயில் சேவையை மீண்டும் துரிதகதியில்
ஆரம்பிப்பதற்கான
நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது ரயில் தண்டவாளப்
பாதை அமைப்புப்
பணிகள் ஓமந்தைக்கு
அப்பாலும்
சென்றுள்ளது.
இத்தண்டவாளப் பாதை ரயில்கள் வேகமாகப் பயணிக்கக்
கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன.
காங்கேசன் துறை துறைமுகம்
வடபகுதியில்
பாரிய துறைமுகமாக
அபிவிருத்தி
செய்யப்படுகின்றது.
வடபகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும்
மின் வசதியை
பெற்றுக்கொடுக்கும்
வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்படுகின்றது.
வடபகுதியிலுள்ள சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளும்
கோடிக்கணக்கான
ரூபாய் செலவில் அபிவிருத்தி
செய்யப்படுகின்றன.
உள் வீதிகளும்,
பாடசாலைக்
கட்டடங்களும்
புனரமைத்து
மேம்படுத்தப்படுகின்றன.
சகல அரச கட்டடங்களும்
புனரமைத்து
நவீனப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு வடபகுதியில்
இடம்பெறுகின்ற
பாரிய அபிவிருத்தி
வேலைத்திட்டங்களைக்
கண்டு சகித்துக்
கொள்ள முடியாத த.தே.கூட்டமைப்பும்,
ஏனைய சில
எதிரணி கட்சிகளுமே
ஐ.ம.சு.மு. மீதும் அரசு மீதும் சேறுபூசுகின்றன.
இராணுவத்தையும், பொலிஸாரையும்
இதற்குள்
இழுத்து விடுகின்றனர்.
அ.
அமிர்தலிங்கம்
உள்ளிட்ட
தமிழ் தலைவர்களைப்
படுகொலை செய்ததும்,
வடபகுதி தமிழ் மக்களின்
ஜனநாயக உரிமைகளைச்
சீரழித்ததும்
தேர்தல் ஏற்பாடுகளை
குழப்பியடித்ததும்
புலிகள் தான். மாணவர்களை பலவந்தமாக
ஆயுதப் போராட்டத்தில்
ஈடுபடுத்தி
அவர்களுக்கு
சயனைட் வில்லைகளை
வழங்கியதும்
புலிகள்தான்.
இதனால் வடபகுதியின்
கல்வித்துறை
பாரிய வீழ்ச்சி கண்டது. இலங்கைக்கு அதிக புத்திஜீவிகளை
வழங்கிய பிரதேசங்களில்
யாழ். குடாநாடும் ஒன்றாகும்.
அந்த நிலைமையைச்
சீரழித்தவர்களும்
புலிகள்தான்.
ஆகவேதான் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதியின்
கல்வித்துறையை
அபிவிருத்தி
செய்து புத்திஜீவிகளை
உருவாக்கும்
பிரதேசமாக
மீண்டும்
வடபகுதியைக்
கட்டியெழுப்புவதற்கு
நடவடிக்கை
எடுத்து வருகிறார்.
வடபகுதியில் அச்சம்,
பீதியில்லாத
ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்களை சுதந்திரமாக
நடத்தக் கூடிய நிலைமை
உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பு ஆயுதம்
ஏற்தியவர்கள்
இப்போது தேர்தலில்
போட்டியிடுகிறார்கள்.
எல்லா அரசியல்
கட்சிகளுடனும்
இளைஞர்கள்
இணைந்துள்ளார்கள்.
தேர்தல் பிரசாரங்களில்
ஈடுபடுகின்றார்கள்.
வடபகுதியில் ஜனநாயகத்தை
கட்டியெழுப்புவதில்
அரசாங்கம்
வெற்றி பெற்றுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலிலும்
நிச்சயம்
வெற்றி பெறும் என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |