|
||||
|
நோர்வே தாக்குதலில்
கைதான நபர் தம்
மீதான குற்றச்சாட்டுக்கு
ஒப்புதல்
நோர்வே குண்டு தாக்குதல்
மற்றும் இளைஞர் முகாம் மீது நடத்தப்பட்ட
துப்பாக்கிச்
சூடு ஆகிய
குற்றச்சாட்டில்
கைதான 32 வயதான நபர்
தம் மீதான
குற்றச்சாட்டை
ஒப்புக் கொண்டுள்ளதாக
அவரது வழக்கறிஞர்
குறிப்பிட்டுள்ளார்.
வலதுசாரி
கிறிஸ்தவ
தீவிரவாத
அமைப்பைச்
சேர்ந்தவர்
என்று கருதப்படும்
மேற்படி அன்டர்ஸ் பெஹ்ரின் பிரைவிக் என்ற நபர்,
இந்த கொலை
கொடூரமானது
எனவும், ஆனால் கட்டாயம்
நடத்தப்பட
வேண்டிய தாக்குதல்
எனவும் தனது வழக்கறிஞரிடம்
கூறியுள்ளார்.
பெர்விக் மீது இன்று நீதிமன்ற
விசாரணை நடைபெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஒஸ்லோ குண்டுத் தாக்குதல்
மற்றும் துப்பாக்கிச்
சூட்டு சம்பவங்களால்
கொல்லப்பட்டோரின்
எண்ணிக்கை
92 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாம்
உலகப் போருக்குப்
பின்னர் நோர்வேயில்
மிகக் கொடூரமான தாக்குதல்
நடத்தப்பட்டிருப்பது
இதுவே முதல் முறையாகும். விடுமுறையைக் கொண்டாடுவதற்காக
இங்குள்ள
இடிலிக் உடோயா தீவில்
பெருமளவிலான
இளைஞர்கள்
திரண்டிருந்தனர்.
அவர்களை நோக்கி
பொலிஸ் உடையணிந்த
பயங்கரவாதி
துப்பாக்கியால்
சுட்டதில்
உயிரிழந்தோர்
எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.
இந்த வன்முறைச்
சம்பவம் நாட்டின் பாது காப்பை
மேலும் அதிகரிக்க
வேண்டிய அவசியத்தை
உணர்த்தியுள்ளது
என்று பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்
செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
கடந்த
சனிக்கிழமை
காலை செய்தியாளர்களைச்
சந்தித்த
அவர் மிக
துயரமான சம்பவத்துக்குக்
காரணமானவர்களை
பொலிஸார்
தீவிரமாக
தேடி வருவதாகக்
கூறினார். சம்பவ இடத்தில்
மீட்புப்
பணிகள் தொடர்ந்து
நடைபெறுகின்றன.
மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம்
என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம்
தொடர் பில் கைது
செய்யப்பட்ட
நபரின் விபரம் இதுவரை கிடைக்கவில்லை.
இருப்பினும் அவர் தன்னை ஆண்டர்ஸ்
பெஹ்ரிங்
பிரெவிக்
என அடையாளப்படுத்திக்
கொண்டதாக
உள்ளூர் பத்திரிகைகள்
சுட்டிக்காட்டியுள்ளன.
தாக்குதல்
நடத்திய இளைஞருக்கு
32 வயது இருக்கும்
என பொலிஸார்
அடையாளம்
கண்டுள்ளனர். இவர் முஸ்லிம்
எதிர்ப்பு
கோஷங்களை
இணையத்தளத்தில்
வெளியிட்டுள்ளார்
என்று பொலிஸ் ஆணையாளர் ஸ்வைனங் ஸ்போனிம் தெரிவித்தார்.
இது
தொடர்பாக
கைது செய்யப்பட்ட
ஒருவருக்கு
வலதுசாரி
தீவிரவாத
இயக்கத்துடன்
தொடர்பிருக்கலாம்
என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் நோர்வேயிலிருந்து
வெளியாகும்
சில செய்திப்
பத்திரிகைகளில்
பேஸ்புக்
பக்கத்தில்
பழைமைவாத,
கிறிஸ்தவ,
கணனி விளையாட்டுக்களில்
உலகப் போர் சார்ந்த
நவீன போர்
விளையாட்டுகள்
பிடிக்கும்
என அந்த
இளைஞன் குறிப்பிட்டிருந்ததாக
செய்திகள்
வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில்
8 பேர் குண்டு
வெடிப்பில்
சிக்கி உயிரிழந்தனர். அரசு கட்டடம்,
பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சக
அலுவலகம்
ஆகியவற்றில்
நிகழ்ந்த
குண்டு வெடிப்பில்
இவர்கள் உயிரிழந்தவர்களாவர்.
முதலில் அரசு கட்டடங்களுக்கு
குண்டு வைத்து விட்டு பொலிஸ் உடையணிந்து
உடோயா தீவுக்குச்
சென்று அங்கு துப்பாக்கியால்
கண்மூடித்தனமாக
சுட்டிருக்கலாம்
என கருதப்படுகிறது.
இத்தீவில்
நடைபெற்ற
முகாமில்
சுமார் 560 இளைஞர்கள்
மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்த இளைஞர்
முகாமுக்கு
ஆளும் தொழிலாளர்
கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
துப்பாக்கி
குண்டிலிருந்து
தப்பிக்க
விரைந்து
ஓடி தண்ணீரில்
மூழ்கி சிலர் இறந்துள்ளனர். நாஜிக்கள்
படங்களில்
வருவதைப்
போல தாக்குதல்
நடத்தப்பட்டதாக
குண்டுக்
காயத்துடன்
தப்பி, மருத்துவமனையில்
சிகிச்சை
பெறும் அட்ரியன் பிரகான் என்பவர் தொலைக்காட்சி
பேட்டியில்
தெரிவித்துள்ளார்.
மிகவும்
நெருக்கமாக
நின்று துப்பாக்கியால்
சுட்டதால்
உயிரிழந்தோர்
எண்ணிக்கை
அதிகமாக இருந்தது என்று அவர்
மேலும் தெரிவித்தார். முதலில் அருகிலிருந்தவர்களை
சுட்ட பின்னர் தண்ணீரில்
விளையாடிக்
கொண்டிருந்தவர்களை
நோக்கி சுட ஆரம்பித்தார்.
அந்த இளைஞனின்
கையில் “எம் 16” ரக
துப்பாக்கி
இருந்தது.
அது தானியங்கி
துப்பாக்கியாகும்.
அவரிடமிருந்து
தப்பிக்க
உயிரிழந்தவரைப்
போல தரையில்
விழுந்து
தப்பித்தேன்
என்றும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களை
காலால் உதைத்து அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா
என்று பார்த்துச்
சென்றதாகவும்
தான் 2 மீற்றர்
தூரத்தில்
படுத்திருந்ததால்
தன்னிடம்
வரவில்லை
என்றும் அவர் கூறினார்.
இந்தத்
தீவில் வெடிகுண்டுகள்
வைக்கப்பட்டிருக்கலாம்
என்ற சந்தேகத்தில்
பொலிஸார்
தீவு முழுவதிலும்
சோதனை மேற்கொண்டுள்ளனர். உடோயா தீவுக்கு
1974 ம் ஆண்டிலிருந்து
ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும்
வருவதாகக்
குறிப்பிட்ட
அவர் இந்தத்
தீவில் மகிழ்ச்சிக்கு
ஒருபோதும்
குறைவிருக்காது.
அதே சமயம் பாதுகாப்பானதும்
கூட ஆனால்
இப்போது வன்முறைக்
களமாகிவிட்டது
என்று பிரதமர் ஸ்டோல்டென்பெர்க்
வருத்தத்துடன்
குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில்
மிகவும் அமைதியான நாடாக நார்வே
திகழ்ந்து
வந்தது. இந் நிலையை
சீர்குலைக்க
அனுமதிக்க
மாட்டோம்
என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்குக் காரணமானவர்களுக்கு
உரிய தண்டனை
அளிக்கப்படும்
என்று அவர் கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |