Contact us at: sooddram@gmail.com

 

முஸ்லிம்களிடம் இருந்து ஐரோப்பாவை காப்பதற்கே தாக்குதல் நடத்தினேன்

ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் குடியேறுவதைத் தடுத்து நிறுத்தவும், மக்களுக்கு இதன் மூலம் உறுதியான செய்தி விடுக்கவும் தான் நான் தாக்குதல் நடத்தினேன்என்று நோர்வே இரட்டை தாக்குதல் குற்றாவளி ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக், நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கூறினார். இதையடுத்து அவரை எட்டு வாரங்கள் தனிமைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நோர்வேயில் சமீபத்தில் நடந்த பிரதமர் அலுவலக குண்டு வெடிப்பு மற்றும் உடோயா தீவு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உலகையே குலுக்கின. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் நேற்று முன்தினம் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆஜராவதற்கு முன் அவர் தன் வழக்கறிஞர் மூலம் நீதிபதிக்கு சில வேண்டுகோள்கள் விடுத்திருந்தார். அதன்படி பொலிஸ் உடையில் மக்கள் முன்னிலையில் தோன்றி தான் குண்டு வெடிப்பு நடத்தியது எதற்காக என்று விளக்கப் போவதாகவும், அதற்கு அனுமதி அளிக்கும்படியும் கோரியிருந்தார்.

மேலும் ஐரோப்பாவை காப்பாற்றும் இந்தப் பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தும் பிரசார முயற்சியாக இதைப் பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் இச்சம்பவங்களில் தான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால் அங்கு என்ன சொல்ல வேண்டும் என்பதையும் அவர் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளார்.

ப்ரீவிக்கின் கோரிக்கைகளை நிராகரித்த நீதிபதி, முதல் விசாரணை நீதிமன்றத்தின் மூடிய அறைக்குள் நடக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் நோர்வே நேரப்படி நண்பகல் 12 மணியளவில் ப்ரீவிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை 35 நிமிடங்கள் நடந்தது.

விசாரணையில் ப்ரீ விக் கூறுகையில்குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு இரண்டையும் நான் தான் நடத்தினேன். ஆனால் அது குற்றச் செயல் அல்ல. சட்டப்படி இது குற்றமும் அல்ல. முஸ்லிம்கள் ஐரோப்பாவில் தொடர்ந்து குடியேறி வருகின்றனர். அதனால் அவர்களிடம் இருந்து ஐரோப்பாவைக் காப்பாற்றத்தான் நான் இப்படி செய்தேன். இதன் மூலம் மக்களுக்கு உறுதியான செய்தி அளிக்க முடிவெடுத்தேன்என்றார்.

விசாரணை முடிவில் அவருக்கு எட்டு வார தனிமை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 21 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.

இந்நிலையில் உடோயா தீவில், தண்ணீரில் மூழ்கி இறந்தோரை தேடும் பணி தொடர்கிறது. நோர்வே இளவரசரின் உறவினரான ஓர் இளைஞரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

எனினும் இந்த இரு தாக்குதல்களிலும் மொத்தம் 76 பேரே கொல்லப்பட்டதாக நோர்வே பொலிஸார் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். முன்னதாக இத்தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில், கொரானல் என்ற இடத்தில் உள்ள ப்ரீவிக்கின் தந்தை வீட்டில் நேற்று பிரான்ஸ் பொலிஸார் சோதனை நடத்தினர். ஆனால் ப்ரீ விக்கின் தந்தை ஜென்ஸ் ப்ரீவிக் பல ஆண்டுகளாக தன் மகனுடன் தொடர்பில்லாமல் இருந்துள்ளார் என பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

நோர்வேயின் ‘டிவி2’ தொலைக்காட்சிக்கு ப்ரீவிக்கின் தந்தை அளித்த பேட்டியில், தனது மகனை கடைசியாக அவனது 17 வயதில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வளவு பேரை கொல்வதை விட அவன் தற்கொலை செய்து கொண்டிருந்தால் நான்றாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக ப்ரீவிக் லண்டன் முகவரியிட்ட 1,500 பக்க அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது தலைவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட், இஸ்லாத்தை பொறுத்துக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளை கவிழ்ப்பதற்காக என்னை போன்று 80 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதாகதி டெலிகிராப்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து லண்டனுக்கு ப்ரீவிக் எப்போது வந்து சென்றார் என்பது பற்றி ஸ்கொட்லான்ட் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதேவேளை நோர்வே இரட்டைத் தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கொல்லப்பட்டோருக்காக இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் பேசிய நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டெல்டன்பேர்க், இந்த கொடூர சம்பவத்தால் நோர்வே வீழ்ச்சியடையப் போவதில்லை. பயங்கரவாதிகளால் மனிதர்களையே கொல்ல முடியும், முழு நாட்டையும் வீழ்த்த முடியாது.

2011 ஜுலை 22 க்கு பின்னரான நோர்வேயில் ஜனநாயகம், கருத்துக்கூறும் உரிமை என்பவற்றை வலுப்படுத்த உறுதி பூணுவோம் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com