Contact us at: sooddram@gmail.com

 

கிழக்குவாழ் தமிழருக்கு இதுவரை எதையுமே செய்யாதவர்கள் இன்று எம் மக்களது அபிலாசைகள் பற்றி சிந்திக்கிறார்களாம்!

இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்காக குறிப்பாக கிழக்குவாழ் தமிழருக்காக எதனையுமே செய்யாத தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தற்போதுதான் கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து சிந்திக்கிறார்களாம். இதனைக் கேட்டால் குழந்தைப் பிள்ளைக்கும் சிரிப்பு வரும். ஏன் என்றால் தற்போது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப் பட உள்ள நிலையில், தங்களது கொள்கைகளுக்கும் அப்பால், அதா வது வடகிழக்கு இணைந்த தனித் தமிழ் ஈழமே எங்களது உயிர் மூச்சு என்று எழுபது ஆண்டுகாலம் வங்குரோத்து அரசியல் நடத்திய யாழ்மேலாதிக்க வாதிகளை முழுமையாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்ட மைப்பு கட்சியினர் தற்போது தங்க ளது கொள்கை கோத்திரங்கள் எல் லாம் தூக்கி எறிந்து விட்டு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிடப் போகின்றார்களாம்.

இவர்கள் இப்படித்தான் காலங்காலமாக தேர்தல் களுக்காக தங்களது கொள்கைகளை மாற்றி மாற்றி வாக்கு கேட்டு அரியாசனம் ஏறுவார்கள். பின்னர் மக்களுக்காக எதனையுமே செய்ய மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இனியும் ஏமாந்த நிலையில் தமிழ் மக்கள் வாக்களிக்கத்தான் வேண்டுமா? என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இருநாடுகள் இணைந்து சர்வதேச ரீதியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமையப் பெற்ற மாகாண சபை முறைமையானது, உண்மையிலே 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்கள் பட்டதுயர்களை எல்லாம் ஓர் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்ப்பதற்கான ஓர் முறைமையை கொண்டமைந்ததாகவே இம் மாகாண சபை முறைமை அமையப்பெற்றது.

மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டபோது அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றே இருக்க வேண்டும். காரணம் தமிழ் மக்களுக்கான ஓர் அதிகாரப் பகிர்வு விடயம் காலத்தின் கட்டாயம். அதன் ஆரம்பப் புள்ளிதான் மாகாண சபை.இதனை அப்போதைய விடுதலைப் புலிகள் ஏன் தமிழ் அரசியல் தலைவர்கள் கூட ஏற்க மறுத்தார்கள். ஆனால் 1988ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப்.

அமைப்பின் சார்பில் வடகிழக்கிணைந்த மாகாண சபையை வரதராஜபெருமாள் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற விடயம் வரவேற்கத்தக்கதொன்றாக இரு ந்தாலும் கூட, இடைநடுவே அதாவது சுமார் 18 மாதங்கள் மாத்திரமே ஆட்சி செலுத்தி விட்டு பின்னர் தமிbழத்தை பிரக டனஞ் செய்து விட்டு அவர் ஓடிவிட்டார்.

இவ்வாறாக முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கென்றே கொண்டுவரப்பட்ட இம் மாகாண சபையினை பின்னர் யாருமே ஏற்கத்தயாராக இருக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில்தான் 2008ம் ஆண்டு கிழக்கிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கிழக்கு மக்களுக்கான தனிக் கட்சி ஒன்று உதயமாகி அதனூடாக தேர்தல் இடம்பெற்று கிழக்கு மாகாண சபையினை நாங்கள் கைப்பற்றினோம்.

உண்மையில் ஜனநாயகம் சார்ந்த ஓர் அரசியல் கட்சியின் மக்கள் தலைவர்கள் என்றால் தான் சார்ந்த சமூகத்திற்கு தங்களது அரசியல் பின்புலத்தால் ஆகக் கூடியதாக எதை பெற்றுக் கொடுக்க முடியுமோ அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சுமார் 70 வருட கால தமிழர் அரசியல் வரலாற்றிலே இவைகள் நடந்ததாக சரித்திமே இல்லை.

ஆனால் நான் 4 வருடம் கிழக்கு மாகாண சபையை பொறுப்பேற்று சீராக ஓர் ஜனநாயக ஆட்சி முறையினை ஏற்படுத்தியதன் விளைவாக தற்போது அனைவருக்கும் முதலமைச்சர் பதிவியின் மேல் மோகம் ஏற்பட்டு விட்டது. அதாவது எது வேண்டாம் அது தங்களது கொள்கைக்கு முரணானது என சர்வதேச ரீதியில் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்களோ அதே மாகாண சபை முறைமையை ஏற்று இன்று தேர்தலிலே குதிக்க கங்கணம் கட்டுகிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

உண்மையில் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு தேர்தலிலே போட்டியிடுவதன் உள்நோக்கம் கிழக்கிலே தமிழ்மகன் அதுவும் இந்த சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராக வரக் கூடாது என்பதே அவர்களது இமாலய இலக்கும் கூட, அதனை எமது மக்கள் புரிந்து கொண்டு எமது கிழக்கை எம்மவரே ஆள நீங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் ஒவ்வொரு கிழக்கு தமிழ் மக்களின் கைகளிலே காலம் தந்திருக்கிறது. அதனை சரியாக எம் மக்கள் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com