|
||||
|
மீண்டும்
தமிழீழ குத்துக்கரணம்
ஜெயலலிதா, சீமான்,
வைகோ போன்றவர்களுக்கு
பிழைப்பை
ஏற்படுத்திய
கருணாநிதி
டெசோ மாநாட்டில்
தனி ஈழம்
குறித்த தீர்மானம்
நிறைவேற்ற
உத்தேசமில்லை,''
என, தி.மு.க., தலைவர்
கருணாநிதி
நேற்று திடீரென அறிவித்தார்.
மேலும், ""ஆயுதப்
போராட்டத்தையும்
விரும்பவில்லை,''
என்றும் திட்டவட்டமாக
தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு
தனி ஈழம்
அமைத்துத்
தருவதற்காக,
"தமிழ் ஈழ ஆதரவாளர்
அமைப்பை' கருணாநிதி
மீண்டும்
துவங்கினார்.
இந்த அமைப்பின்
மாநாடு, ஆகஸ்ட் 12ம்
தேதி சென்னையில்
நடத்தவும்
திட்டமிட்டு,
அதற்கான பணிகளை தி.மு.க., முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில்,
விடுதலைப்புலிகள்
மீதான தடையை மத்திய
அரசு நீட்டித்ததோடு,
புலிகள் ஆதரவு சக்திகள்
தமிழகத்தில்
பலம் பெற்று
வருவது கவலையளிப்பதாகவும்
தெரிவித்தது.தி.மு.க.,
நடத்தும்,
"டெசோ' மாநாட்டிற்கு,
பல்வேறு தரப்பில் எதிர் கருத்துகள்
எழுந்தன. இந்நிலையில்,
நேற்று தி.மு.க., தலைவர்
கருணாநிதி
தன் நீண்ட
பேட்டியில்,
"தனி ஈழ
ஆதரவு இல்லை' என்பதை
தெளிவுபடுத்தினார். சென்னையில் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்
டெசோ மாநாட்டில்
தனி ஈழம்
பற்றி கருத்து இருக்கிறதே
தவிர, அதை
இப்போது அழுத்தந் திருத்தமாகச்
சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை
நடத்துவதாக
உத்தேசமில்லை.
ஏனென்றால், அங்கே நடந்த ஆயுதப்
போராட்டத்திற்கு
பின், ஆயுதப்
போராளிகளை
சிங்கள ராணுவம் அழித்து ஒழித்துள்ளது.
இந்த நேரத்தில்
எஞ்சியுள்ள
இலங்கைத்
தமிழர்களைப்
பாதுகாப்பது,
அவர்களின்
வாழ்வாதாரங்களை
வளப்படுத்துவது,
அவர்களுக்கு
போரினால்
ஏற்பட்ட இன்னல்களைக்
களைவது, இவற்றில் எப்படியெல்லாம்
நடவடிக்கை
எடுக்கலாம்
என்பதற்காகத்
தான் இந்த
மாநாடு கூட்டப்படுகிறது. அறவழி போராட்டம் அதில் கலந்து கொள்கிறவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாக் கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில் அறவழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான் இந்த மாநாட்டைநடத்துகிற எங்களுடைய திட்டம்.விடுதலைப்புலிகள் மீதான தடையை அவர்களுக்கு மட்டுமான தடை என, கருத முடியாது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், பயங்கரவாதம், ஆயுதப் போராட்டங்கள் நடைபெறக் கூடாது என்பதில் நானும் அழுத்தந் திருத்தமான கருத்து கொண்டவன்.விடுதலைப்புலிகள் மீதான தடை தேவை தானா என்பது குறித்து தமிழக அரசு தான் கவலைப்பட வேண்டும்; இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மாநில அரசினர் தான்.போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து கிடையாது.என்னைப் பொருத்தவரை ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை. போராளிகளுடைய ஆயுதங்கள், சிங்களராணுவத்திலே உள்ள ஆயுதங்கள், இந்த இரண்டு பலத்தையும் வைத்துப் பார்த்தால் போராளிகளால் வெல்ல முடியாது. நெருக்கடி இல்லை மாநாட்டிற்கு மத்திய அரசின் நெருக்கடி எதுவும் இல்லை. டெசோவிற்கு காங்கிரஸ் ஆதரவில்லை என, ஞானதேசிகன் அவசரப்பட்டு கருத்து சொல்லியிருக்கிறார். ஏன் இந்த மாநாட்டை நடத்துகிறோம் என்பதைப் பற்றி கூட அவர் அறிந்து கொள்ள விரும்பாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது துரதிருஷ்டம் தான்.சிதம்பரத்துடன் டெசோ பற்றி பேசவில்லை. நிறைவேறாத ஆசை
என்னுடைய
நிறைவேறாத
ஆசை, தமிழ்
ஈழம் தான்
என்று எப்போதும்
சொல்வேன்.
தனி ஈழத்துக்காக
போராட்டமோ,
கிளர்ச்சிகளோ
எதுவும் இப்போது இல்லை. தனி ஈழம் கிடைத்தால்,
யாரும் வேண்டாமென
சொல்ல மாட்டார்கள்.
தனி ஈழம் என்பதை மாற்ற, எந்த
நெருக்கடி
கொடுத்தாலும்
பயப்பட மாட்டேன்.தனித்
தமிழ் ஈழம் என்னுடைய
குறிக்கோள்
என்று சொல்வதில்
நான் தயங்கவில்லை.
தனி ஈழம் ஒரு காலத்தில்
அமையலாம்.
டெசோ மாநாட்டிற்கு
மறுநாளே தனி ஈழம்
அமைந்து விடும் என்று நான்
எதிர்பார்க்க
வில்லை. எதற்கும் ஒரு கால அவகாசம்
வேண்டும்.
தற்போது நடக்கவுள்ள
டெசோ மாநாட்டின்
தலைப்பு,
"ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு
மாநாடு!'இவ்வாறு
கருணாநிதி
கூறினார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |