Contact us at: sooddram@gmail.com

 

டமஸ்கஸ்ஸில் 5ஆவது நாளாகவும் மோதல், நகரெங்கும் புகைமூட்டம்

சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸின் பல பகுதிகளிலும் 5 ஆவது நாளாக நேற்றைய தினத்திலும் அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் மூன்று முக்கிய பிரமுகர்கள் குண்டு தாக்குதலில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட நிலையில் தலைநகரில் மோதல் நீடிக்கிறது. இதில் டமஸ்கஸ்ஸின் பல பகுதிகளில் இருந்தும் புகை மண்டலம் வெளியேறி வருகிறது. அரச படைகள் தலைநகரின் கபூன் மற்றும் பர்சா பகுதிகளில் நேற்றைய தினத்தில் எறிகணை தாக்குதல் நடத்தின. அதேபோன்று அல் மீதான், சாஹிர பகுதிகளில் கடும் மோதல் இடம்பெற்று வருவதோடு மஷ்ரூ டுமார் பகுதியில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக சிரியாவுக்கான இணைப்புக் குழு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சிரியாவில் மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பமான 16 மாத காலத்தில் அஸாத் அரசுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என கருதப்படுகிறது. இந்த குண்டு தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் தாவுத் ரஜா மற்றும் ஜனாதிபதி அஸாத்தின் சகோதரியை மணந்தவரும் அந்நாட்டின் துணை பாதுகாப்பு அமைச்சருமான அஸ்ஸாப் ஷசுகத் மற்றும் நெருக்கடி முகாமை அலுவலக பிரதித் தலைவர் ஜெனரல் ஹஸன் துர்கொமனி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இது தவிர இந்த குண்டு தாக்குதலில் சிரிய உள்துறை அமைச்சர் மொஹமட் இப்ராஹிம் அல்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் ஹிஷாம் இக்கியர் ஆகியோர் காயமடைந்தனர்.

எனினும் இந்த தாக்குதலை நடத்தியவர் யார் மற்றும் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல் வெளியிடப்பட வில்லை. இந்த குண்டு தாக்குதல் குறித்து அந்நாட்டு அரச ஊடகம் எந்த காட்சியையும் வெளியிடவில்லை.

அதேபோன்று ஜனாதிபதி அசாத்தும் இந்த குண்டு தாக்குதலை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று ராய்ட்டர் குறிப்பிட்டுள்ளது. ஆனால் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் பவாத் ஜெஸ்ஸிம் பராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகச் சேவையான சனா குறிப்பிட்டுள்ளது.

இந்த குண்டு தாக்குதலை நடத்தியதாக கிளர்ச்சியாளர்களின் சுயாதீன சிரிய இராணுவம் பொறுப்பேற்றுள்ளதோடு இஸ்லாமிய படை என்ற மற்றுமொரு குழுவும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இதில் டமஸ்கஸ்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எரிமலை இராணுவ நடவடிக்கையின் கீழ் இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சுயாதீன சிரிய படை கூறியுள்ளது. மேற்படி தேசிய பாதுகாப்பு தலைமையகத்தில் கூட்டம் இடம்பெறுவதற்கு முந்தைய தினமே அங்கு குண்டு வைக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது தற்கொலை தாக்குதல் என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இராணுவத்திலிருந்து பிரிந்தோர் மற்றும் ஆயுத மேந்திய சிவிலியன்களைக் கொண்ட அரசுக்கு எதிராக போராடி வரும் சுயாதீனப் படை டமஸ்கஸ்ஸில் விடுதலைக்கான பேராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரே இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பஷர் அல் அஸாத் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அரச எதிர்ப்பாளர்கள் மேலும் வலுப்பெற்று வருகிறார்கள். பஷர் அல் அஸாத் கட்டுப்பாட்டை இழந்து வருகிறார் என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் டொம்மி வைட்டர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிரிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாதுகாப்பு சபை தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் முன்னெடுக்கப் படவிருந்த வாக்கெடுப்பு ஒரு தினத்திற்கு பிற்போடப்பட்டது. சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா. கண்காணிப்பாளர்களின் கெடு இன்றுடன் முடிவடையவுள்ளது. இதனை நீடிப்பதற்கு மேற்கு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பே. பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களில் நாடுபூராவும் 200 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதாக லண்டனை மையமாக கொண்டு இயங்கு சிரியா தொடர்பிலான மனித உரிமைகள் காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இதில் 34 பேர் தலைநகர் டமஸ்கஸ்ஸில் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com