|
||||
|
முரண்பாட்டுடனன்றி இணக்கப்பாட்டுடன்
தனித்துப்
போட்டி
தேர்தலின்
பின்னர் அரசாங்கத்துடன்
இணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டுள்ளது
கடைசி
நிமிடம் வரை அரசாங்கத்துடன்
இணைந்து போட்டியிடுவதற்கே
முஸ்லிம்
காங்கிரஸ்
முன்னுரிமை
வழங்கியது. வேட்புமனுத்
தாக்கலுக்கான
காலக்கெடு
முடிவடைய
24 மணி நேரம்
இருக்கும்
நிலை யிலே
தனித்துப்
போட் டியிட
முடிவு செய்யப் பட்டது என முஸ்லிம்
காங்கிரஸ்
தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.
முரண்பாட்டுடன் அன்றி அரசாங் கத்துடன் இணக்கப்பாட்டுடனே
மு.கா. கிழக்கில் தனித்துப்
போட்டி யிடுகிறது.
தேர்தலின் பின் அரசாங்கத்
துடன் இணைந்து செயற்பட வாய் மூலமான
இணக்கப்பாடு
எட்டப்பட்
டுள்ளது எனவும் அவர் கூறினார்.
கிழக்கு
மாகாண தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும்
ஊடகவியலாளர்
மாநாடு நேற்று மு.கா தலைமையகமான
தாருஸ்ஸலாமில்
நடைபெற்றது. இதில் பாராளுமன்ற
உறுப் பினர்களான
பைசல் காசிம், மொஹமட் அஸ்லம், மு.கா. பிரதித் தலைவரும்
மட்டு மாவட்ட முதன்மை வேட் பாளருமான
ஹாபிஸ் நkர் ஆகியோரும்
கலந்து கொண் டனர்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள் விகளுக்கு
பதிலளித்த
அமைச்சர்
மேலும் கூறியதாவது,
அரசாங்கத்தின்
கூட்டுக்கட்சி
என்ற வகையில்
அரசாங்கத்துடன்
இணைந்து போட்டியிடுவதற்கே
மு.கா. முன்னுரிமை அளித்தது.
இரண்டாவது மாற்று
வழியாகவே
தனித்துப்
போட்டியிடும்
விடயம் ஆராயப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
மற்றும் தரப்பினர்
முன்வைத்த
மாற்று வழிகள் தொடர்பில்
கூடுதல் முக்கியத்துவம்
வழங்கப் படவில்லை.
அரசாங்கத்துடன்
இணைந்து போட்டியிடுவது
தொடர்பில்
முக்கிய அமைச்சர்களுடன்
2 வாரங்கள்
பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டது. முதலமைச்சர் கோரிக்கை
தொடர்பில்
அரசுடனான
பேச்சு முறிந்ததாக
கூறப்படும்
குற்றச்சாட்டு
தவறானது.
பதவிக்காக நாம் அரசுடன் இணைந்து போட்டியிடும்
முடிவை மாற்றவில்லை.
முஸ்லிம்
காங்கிரஸ்
நம்பிக்கை
இழக்கச் செய்யும் எந்த நடவடிக்கையிலும்
ஈடுபட வில்லை. சில தரப்பினர்
மு.கா. தனித்துப் போட்டியிடுவது
குறித்து
கடுமையாக
விமர்சித்தாலும்
அரசாங்கத்தின்
இணக்கப்பாட்டுடனே
இந்த முடிவு
எட்டப்பட்டுள்ளது.
மனச்சாட்சிக்கு
இயைபாகவே
இந்தத் தீர்மானம்
எடுக்கப்பட்டது. பலத்த முயற்சியின்
பின் கடைசி
நேரத்திலே
நாம் இரண்டாவது
மாற்று வழியை தேர்ந்தெடுத்தோம்
என்பது ஜனாதிபதிக்கும்
முக்கிய அமைச்சர்களுக்கும்
தெரியும்.
நேற்று
முன்தினம்
காலை ஜனாதிபதியுடன்
பேசினேன். கட்சியின் தனித்துவத்திற்கு
குந்தகம்
ஏற்படாத வகையிலே அரசின் வேண்டுகோளை
நிறைவேற்ற
முடியும்.
அதற்கு மாறாக செயற்பட முடியாது என்ற எமது
நிலைப்பாட்டை
ஜனாதிபதிக்கு
விளக்கினேன்.
நாம்
அரசாங்கத்தில்
இருந்து விலகி கிழக்குத்
தேர்தலில்
தனித்துப்
போட்டியிடவில்லை. இ.தொ.கா., தேசிய
சுதந்திர
முன்னணி என்பன சில
மாவட்டங்களில்
தனித்துப்
போட்டியிடுவது
போன்றே நாமும் பங்காளிக்கட்சியாக
இருந்து கொண்டு தனித்துப்
போட்டியிடுகிறோம்.
கேகாலையில் அரசுடன்
இணைந்தே போட்டியிடுகிறோம்.
தேர்தலின்
பின்னர் அரசாங்கத்துடன்
இணைவது தொடர்பில்
எழுத்து மூலமான ஒப்பந்தம்
எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் வாய்மூலமான
உடன்பாடு
எட்டப்பட்டுள்ளது.
தேர்தலின்
பின் அரசாங்கத்துடன்
இணைந்து செயற்படுவோம். பதவி எதுவுமின்றி
இணைந்து செயற்படவும்
நாம் தயார்
ஏனென்றால்
பதவிகளில்
மட்டும் எமது கட்சி
தங்கியிருக்கவில்லை.
முஸ்லிம்
காங்கிரஸ்
தனது அடிப்படை
உரிமைகளை
விட்டுக்கொடுக்காது. முஸ்லிம்களது உரிமைகளை
வென்றெடுப்பதற்காக
தனது அனைத்து
அரசியல் பலத்தையும்
மு.கா. பிரயோகிக்கும். எதிர்க் கட்சியில்
இருந்து தீர்மானிக்கும்
சக்தியாகவும்
எமக்கு செயற்பட முடியும்.
கிழக்கு
தேர்தலில்
மு.கா.வும்
தீர்மானிக்கும்
சக்தியாக
இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பும்
தீர்மானிக்கும்
சக்தியாக
வர முடியும்.
தெரிவாகும் உறுப்பினர்
தொகை அதிகரிப்பதன்
மூலம் எமது பலத்தை
காண்பிக்க
முடியும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |