Contact us at: sooddram@gmail.com

 

பள்ளிப்பேருந்துகளின் பாதுகாப்பு  ுதிய விதிகளை வகுக்க   உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிப் பேருந்துகளின் பாது காப்பு பற்றிய புதிய விதிகளை ஒரு வார காலத்திற்குள் வகுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிகள் அமலாவது குறித்து கண்காணித்துக்கொண்டே இருப் போம் என்று அரசுக்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகு தியைச் சேர்ந்த சிறுமி ஸ்ருதி தான் பயிலும் தனியார் பள்ளியான சேலை யூர் சீயோன் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந் தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலை யில் ஏறி மிகக் கொடூரமான முறையில் ஸ்ருதி உயிரிழந்தாள். இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதனன்று நடந் திருக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட் டனர். இந்த நிலையில் இந்த விவகா ரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வியாழனன்று முதல் வழக்காக எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இந்த விவ காரத்தைக் கையில் எடுத்தது.

அப்போது அரசு தலைமை வழக் கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜ ரானார். அவர் கூறுகையில், இந்த விவ காரம் தொடர்பாக அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலு வலகத்தில் எப்.சி. கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப் பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந் துக்கு எப்படி எப்.சி. அளித்தார்கள்? யார் இதைக் கொடுத்தது? இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

அதன்படி வெள்ளியன்று காலை இந்த வழக்கு முதலில் எடுத்துக் கொள் ளப்பட்டது. அப்போது பள்ளிக்கல் வித்துறை செயலாளர் சபீதா, மெட் ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி, போக்குவரத்துத் துறை ஆணையர் பிரபாகர், ஜியோன் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆஜரா கினர். அவர்கள் தத்தமது விளக்கங் களை பதில் மனுவாகத் தாக்கல் செய் தனர்.

தமிழக அரசுக்கு எச்சரிக்கை

விசாரணையின் போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ் ணனிடம் தலைமை நீதிபதி எம்.ஒய்.
இக்பால் பல்வேறு கிடுக்கிப்பிடி உத் தரவுகளைப் பிறப்பித்தார்.

தலைமை நீதிபதி தனது உத்தர வின்போது கூறுகையில், செய்தித் தாள்களில் சில நாட்களில் இந்த செய்தி அப்படியே மறைந்து போய் விடும். மக்களும் கூட மறந்து விட்டு அடுத்த வேலைக்குப் போய் விடு வார்கள். ஆனால் நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். தொடர்ந்து இந்த வழக்கை நேரடியாக கண்காணிக்கப் போகிறோம். இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் அர சின் நடவடிக்கைகள், கல்வித்துறை யின் நடவடிக்கைகள் இருக்க வேண் டும். அதை நாங்கள் கண்காணித்து வருவோம் என்று கூறினார்.

பின்னர் அரசு தலைமை வழக்கறி ஞரிடம், பள்ளிக்கூடத்தை மூடுவது குறித்து கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதே, அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு பள்ளித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,இப்போது ஸ்ருதி படித்த பள்ளிக்கூடத்தை மூடி னால், மற்ற மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

இதையடுத்து இன்னும் 2 வாரத் திற்கு பள்ளியை மூடுவது தொடர் பான முடிவை எடுக்கத் தேவை யில்லை. அதுகுறித்து பின்னர் பார்த் துக் கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

கொலை வழக்காக ஏன் மாற்றக் கூடாது?

மேலும், விசாரணையின் போது மாணவி ஸ்ருதி சென்ற வாகனம் குறைபாடானதாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட பேருந்தை சரிபார்க் காமல் சான்றிதழ் வழங்கப்பட்டுள் ளது. இதனால் ஸ்ருதியின் மரணத்தை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய் யக் கூடாத ? என்று தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பினார்.

மேலும் பள்ளிப் பேருந்துகளின் பாதுகாப்பு பற்றிய புதிய விதிகளை ஒருவாரத்தில் வகுக்கவும் தமிழக அர சுக்கு அவர் உத்தரவிட்டார். அப் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, 2 வார கால அவகாசம் கேட்டார். இதனை நிராகரித்த தலைமை நீதிபதி, அவசர அவசியம் கருதி ஒருவார காலத்துக்குள் புதிய பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் உத்தரவிட் டார். அத் துடன் அதிகாரிகள் மீதான நடவ டிக்கை என்பது வெறும் கண்துடைப் பாக இருந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார். குறிப்பாக தவறு செய் யும் மோட்டார் வாகன அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யும் வகையில் தமிழக அரசின் புதிய விதிகள் இருக்க வேண் டும் என்றும் நீதிபதி கூறினார்.

உயிரிழந்த சிறுமி ஸ்ருதியின் பெற் றோருக்கு சீயோன் பள்ளி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி இக்பால் தமது உத்தரவில் கூறி யுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com