Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்க் கூட்டமைப்பு நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தைகளை தட்டிக் கழிப்பது தவறு

நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரம் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு பாராளுமன்றத்தின் மூலமே நிரந்தரமான இறுதித் தீர்வை காண முடியும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எல்.ரி.ரி.ஈயைப் போன்று சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் புதிய நிபந்தனைகளை விதித்து, பேச்சு வார்த்தைகளை தட்டிக் கழிப்பது தவறாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை.

எனவே, சகல அரசியல் கட்சிகளுக்கும் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக தீர்த்து வைக்கும் கடமையும், பொறுப்பும் இருக்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் செய்திப் பிரிவு பொறுப்பாசிரியர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்தார்.

வடபகுதியில் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, 2013ம் ஆண்டு ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறதென்று கூறினார்.இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் பல முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, கடந்த கால யுத்தத்தினால் தமிழர்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. முஸ்லிம் களும் சிங்களவர்களும் பாதிக்கப்பட் டுள்ளார்கள். நல்லிணக்க ஆணைக்குழு தனது சிபாரிசுகளில் வட பகுதியில் இடம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகியோரையும் மீள் குடியேற்ற வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.

நாம் அதனையும் செய்து முடித்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டிய கடப்பாட்டினை கொண்டுள்ளோம். 1981ம் ஆண்டின் வாக்காளர் அட்டவணை மாத்திரமே இப்போது வடபகுதியில் உத்தியோகபூர்வ ஆவணமாக இருக்கின்றது. இதனடிப்ப டையில் கடந்த காலத்தில் நடந்த தேர்தலின் போது வாக்காளர் இல்லாத காரணத்தினால் சிலர் 200 வாக்குகளுக்கும் குறைந்த வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் இடம்பெற்றன.

எனவே, மக்களுக்கு சுதந்திரமாக சென்று வாக்களிப்பதற்கான ஒரு சுமுகமான சூழ்நிலையை அடுத்தாண்டில் உருவாக்கியதற்கு பின்னரே வடபகுதி தேர்தலை நாம் நடத்துவோம். தற்போது வடபகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதனால் வடபகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 6 ஆக குறைந்திருக்கிறது.

அடுத்தாண்டு ஜூன் மாதம் பூர்த்தி செய்யப்படும் புதிய வாக்காளர் இடாப்பில் மக்கள் தொகையை ஒப்பிட்டு பார்த்த பின்னரே பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை கூட்டுவதா? இல்லையா? அல்லது இதே நிலையில் வைத்திருப்பதா என்று முடிவெடுக்கப்படும்.

நல்லிணக்க ஆணைக்குழுவை நான் தான் நியமித்தேன். அக்குழுவின் சிபாரிசுகளில் 50 சதவீதத்திற்கும் அதிக மானவை இப்போது நிறைவேற்றப்பட் டுள்ளது.

தென்னிந்தியாவில் கூடங்குளம் எனுமிடத்தில் அமைந்துள்ள அணு மின் உலையினால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படாது என்று இந்தியா உறுதிய ளித்திருக்கிறது.

இந்தியா எங்களுக்கு அரசியல் ரீதியில் தீங்கிழைத்து வருகிறதென்று உங்களில் சிலர் கூறுகின்றனர். நாம் எந்தவொரு நாட்டினால் எமது நாட்டின் பாதுகாப்பையும், இறைமையையும் விட்டுக்கொடுக்க உறுதியளிக்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார்.

நாம் இதனை பெரிதுபடுத்துவது நல்லதல்ல. ஜே.ஆர். ஜெயவர்தன, 1983ம் ஆண்டில் 6வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று தங்கள் அங்கத்துவத்தை இழந்து இந்தியாவுக்கு சென்று குடியேறினார்கள். அதனால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன.

அதே பிழையை நாம் செய்யத் தயாரில்லை. எங்காவது ஒரு புதிய ஹோட்டல் கட்டப்பட்டவுடன் அதனை நாமல், பசில் அல்லது கோத்தாபய கட்டுகிறார்கள் என்று எனக்கு புகார் கிடைக்கிறது. அந்த புகார்களில் எவ்வித உண்மையும் இல்லை. அதுபோல் கோடான கோடி ரூபா பெறுமதியான ஒரு வாகனத்தை நாமல் வாங்கினார் என்றும் ஒரு வதந்தி பரவியது. இந்த வாகனத்தை வாங்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் நாமல் என்ற பெயருடைய சகோதரர் என்பது பின்னர் புலனாகியது

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com