|
||||
|
கூட்டமைப்பு தெரிவுக்குழுவை
பகிஷ்கரிப்பது தமிழ்
மக்களுக்கு
இழைக்கும்
மிகப்பெரிய
துரோகம்
- அமைச்சர் வாசுதேவ
நாணயக்கார
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை
பகிஷ்கரிக்க
கூட்டமைப்பு
எடுத்த தீர்மானம்
அவர்களை நம்பி வாக்களித்த
தமிழ் மக்களுக்கு
இழைக்கும்
மிகப் பெரிய துரோகமாகுமென
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு
அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார
தெரிவித்தார்.
தெரிவுக்குழுவுக்கு சமுகமளிக்காமை
மூலம் பாராளுமன்ற
உறுப்பினர்கள்
தமது பொறுப்புகளிலிருந்து
விலகி நடப்பதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழு
பாராளுமன்ற
விதிமுறைகளுக்குட்பட்ட
தொன்றே தவிர அரசாங்கத்தின்
செயற்பாடல்ல
என்பதனை கூட்டமைப்பின்
எம். பிக்கள் புரிந்துகொள்ள
தவறியி ருப்பதாகவும்
அமைச்சர்
வாசுதேவ சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை
மறுக்கும்
இவர்கள் எதற்காக பாராளு மன்றத்திற்கு
மட்டும் சமுகமளிக்க
வேண்டுமெனவும்
அமைச்சர்
கேள்வியெழுப்பியுள்ளார்.
இருப்பினும்,
அரசாங்கம்
என்ற வகையில்
நாம் தொடர்ந்தும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன்
இது குறித்து
பேச்சு நடத்தி அவர்களை பாராளுமன்றத்
தெரிவுக்
குழுவில்
அங்கம் வகிப்பதற்காகத்
தொடர்ந்தும்
தூண்டுதல்களை
விடுத்து
கொண்டேயிருப்
போமெனத் தெரிவித்த
அமைச்சர்,
இறுதித் தறுவாயிலாயினும்
கூட்டமைப்பின்
பிரதிநிதிகள்
தெரிவுக்குழுவுக்கு
சமுக மளிப்பதே
சிறப்பானதாக
அமையுமெனவும்
குறிப்பிட்டார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு
அமைச்சில்
நேற்று நடைபெற்ற செய்தியாளர்
மாநாட்டில்
ஊடகவியலாளர்களின்
கேள்விகளுக்கு
பதிலளிக்குகையிலேயே
அமைச்சர்
மேற்கண்ட
விளக்கத்தையளித்தார். கூட்டமைப்பு
எம். பி.
க்கள் தெரிவுக்
குழுவுக்கு
சமுகமளிக்காவிடினும்
அதன் செயற்பாடுகள்
தொடர்ந்தும்
முன்னெடுக்
கப்படுமென்பதில்
ஜயமில்லை.
இருந் தாலும்,
கூட்டமைப்பினர்
தமது கருத்துக்களை
முன்வைக்க
கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை
வீணாக தவறவிடு கின்றனர் என்றே கூற
வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளால்
பாராளுமன்றத்தின்
பிரதிநிதிகளாகத்
தெரிவு செய்யப்பட்டுள்ள
கூட்டமைப்பு
எம் பிக்கள்
பாராளுமன்றத்தின்
அனைத்துச்
செயற்பாடுகள்
மற்றும் ஒழுங்குவிதி
முறைகளுக்கும்
கட்டுப்பட்டவர்கள்.
அரசியலமைப்பு
மறுசீரமைப்பு
தொடர்பில்
ஆராய்வதற்காகவே
சபாநாயகரினால்
தெரிவுக்குழு
நியமிக்கப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற
நடைமுறைகளுக்
குட்பட்டதொரு
செயற்பாடே
தவிர அரசாங்கத்தின்
செயற்பாடல்ல
என்பதனை அவர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்.
கூட்டமைப்பினரின்
நிலைப்பாட்டினை
பாராளுமன்ற
அமர்வுகளின்
போது நாட்டு
மக்களுக்காக
அறிவிக்க
முடியு மாகவிருந்தால்,
தெரிவுக்
குழுவில்
கலந்துகொண்டு
தமது நிலைப்பாட்டினை
அரசாங்கத்துக்கும்
நாட்டு மக்களுக்கும்
தெரிவிக்க
முடியுமே
எனவும் அமைச்சர் கூறினார். மேலும் பாராளுமன்றத்தின்
கணக்கு விவரம் குழுவுக்கு
சமுகமளிக்கும்
கூட்டமைப்பினர்
தெரிவுக்
குழுவுக்கு
சமுகமளிக்காமை
தங்களுக்குள்ள
பொறுப்புக்களிலிருந்து
விலகி நடப்பதாகவும்
அமைச்சர்
குறிப்பிட்டார். தெரிவுக்
குழுவில்
அங்கம் வகித்ததன்
பின்னர் கூட்டமைப்பினர்
தமது நிலைப்பாட்டினை
எவ்வகையிலாவது
வெளிப்படுத்த
முடியுமெனவும்
அமைச்சர்
இதன்போது
தெரிவித்தார். ஊடகவியலாளர் மாநாட்டில்
செய்தி யாளர்களின்
கேள்விகளுக்குத்
தொடர்ந்தும்
பதிலளிக்கையில்,
அமைச்சர்
வாசுதேவ, பாராளுமன்ற
தெரிவுக்
குழுவுக்கு
அமைச்சர்
திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
ஆகியோருக்கும்
அழைப்பு விடுத்திருக்கலாமென்பதே
தனது தனிப்பட்ட
கருத்தெனவும்
கூறினார்.
ஏகாதிபத்தியத்திற்கு
எதிர்ப்புத்
தெரிவிக்கும்
நான் ஒரு
ஜனநாயகவாதியெனக்
குறிப்பிட்ட
அமைச்சர்,
நாட்டில்
பிரிவினை
வாதம் தோன்றாமல்
இருப்பதற்கு
மாகாண சபைகள் முறைமை அவசிய மென்பதையும்
வலியுறுத்தினார். மேலும் மாகாண சபைகள்
முறைமை முற்றாக இல்லாதொழிப்பதனை
நான் ஏற்க
மறுக்கிறேன்
எனவும் கூறிய அமைச்சர்
அதிக மக்களை
பிரதிநிதித்
துவப்படுத்தும்
முக்கிய கட்சிகள் மாகாணசபை முறைமைக்கு
பாரிய எதிர்ப்பைத்
தெரிவித்திருக்கவில்லையெனவும்
குறிப்பிட்டார். அத்துடன்
அரசியலமைப்பின்
13வது திருத்தம்
குறித்து
இந்திய அரசாங்கத்திடம்
இருந்து எவ்வித அழுத்தங்களும்
இலங்கை அரசாங்கத்திற்கு
இல்லை. தமிழ் தேசியக்
கூட்டமைப்பினர்
சம்பந்தப்பட்டவர்களுடன்
உள்நாட்டில்
பேச்சு நடத்துவதனை
விடுத்து
இந்தியாவின்
மத்திய அரசாங்கத்
திடம் பேச்சு நடத்தி திரும்பியுள்ளனர்.
மோதல் காலத்தில்
இலங்கை அரசாங்கத்திற்கு
பூரணமான ஒத்துழைப்பை
வழங்கி பக்கபலமாகவிருந்த
இந்திய அரசாங்கம்,
உள்நாட்டு
விவகாரங்களை
ஏதேனுமொரு
வழியில் தீர்த்துக்
கொள்ளுங்கள்
என்றே கூட்டமைப்பினருக்கு
பதிலளித்துள்ளதே
தவிர இலங்கை
அரசாங்கத்துக்கு
எந்தவொரு
அழுத்தத்தையும்
முன்வைக்க
வில்லையெனவும்
தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |