Contact us at: sooddram@gmail.com

 

பின்லாடனின் தலைமறைவு வாழ்க்கையை அம்பலப்படுத்தும் பாக். அரச அறிக்கை கசிவு

பாகிஸ்தான் உளவுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அலட்சியப் போக்கால் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் கடந்த ஒரு தசாப்தமாக வாழ முடிந்திருப்பதாக வெளியுலகுக்கு கசிந்த அந்நாட்டு அரச அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2002 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஊடுருவியுள்ள ஒசாமா பின்லாடன் 2011 ல் அமெரிக்க வீரர்களால் கொல்லப்படும் வரையில் பாகிஸ்தானில் இருந்துள்ளார்.  பின்லாடன் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசினால் அமைக்கப்பட்ட அபோதாபாத் ஆணைக்குழுவின் அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அபோதாபாத் அறிக்கை தொடர்பில் பாக். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த அறிக்கையை கட்டாரை மையமாகக் கொண்டு செயற்படும் அல் ஜுரா தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில் பாக். அரசு, உளவுப் பிரிவுப் பாதுகாப்புத் தரப்புகளின் உயர் அதிகாரிகளிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதோடு, பின்லாடனின் மூன்று மனைவிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒசாமா பின்லாடனின் தலைமறைவு வாழ்க்கை குறித்த பல ரகசியங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடந்த 2001 ம் ஆண்டு டிசம்பரில் ஆப்கானின் தோரா போரா மோதலின் போது அமெரிக்கப் படையிடம் சிக்குவதில் இருந்து மயிரிழையில் தப்பிய ஒசாமா பின்லாடன் 2002 நடுப்பகுதியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் மற்றும் பஜவ்ர் பழங்குடியின பகுதியில் தங்கியிருந்த பின்லாடன் பின்னர் வடக்கு சவாத் பள்ளத்தாக்கில் தனது மெய்ப்பாதுகாவலர்களான இப் ராஹிம் மற்றும் அப்ரார் அல் குவைட்டியுடன் பல மாதங்கள் தங்கி இருந்துள்ளார்.

அவர் சவாத்தில் தங்கியிருந்த போது செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காலித் ஷெய் முஹம்மத்தை சந்தித்துள்ளார்.

காலித் ஷெய்க் 2003ல் அமெரிக்க படையிடம் சிக்கினார். சவாத் பகுதியில் இருந்து வெளியேறிய பின்லாடன் வடக்கு பாகிஸ்தானின் ஹரிபுர் நகரில் வாடகை வீடொன்றில் தனது மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு நடுப்பகுதிய பின்லாடன் அபோதாபாத் கட்டடத்திற்கு குடியேறியுள்ளார். அமெரிக்க வீரர்களால் கொல்லப்படும் வரை ஆறு ஆண்டுகள் அந்த கட்டடத்திலேயே தங்கி இருந்துள்ளார்.மனிதர்களின் நடமாட்டம் இல்லாத மர்மமான அந்த பிரமாண்ட கட்டடம் குறித்து அயலில் உள்ளவர்கள், உள்ளூர் அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவினர் எப்படி கவனக் குறைவாக இருந்தார்கள்என மேற்படி அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்தபோது பின்லாடன் ஒரு தருணத்தில் பொலிஸாரிடம் சிக்குவதில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். ஒசாமா பின்லாடனின் நம்பிக்கைக்குரிய உதவியாளரின் மனைவியானமரியான்என்பவர் ஆணைக்குழுவுக்கு அளித்த வாக்குமூலத்தில் பின்லாடன் சென்ற கார் சவாத் பிராந்தியத்தில் பொலிஸார் இடைமறித்து சோதனையிட்ட போதும் தனது கணவர் பொலிஸாரிடம் பேசி விவகாரத்தை முடித்துக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

இதில் அபோதாபாத் கட்டடத்தில் தங்கியிருந்த போது பின்லாடன் வானத்தை மறைக்கும் வகையில், கவ்போய் தொப்பி அணிந்தே உலாவியதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்திருக்கிறார். அவருக்கு சுகயீனம் ஏற்பட்டால் அராபிய சம்பிரதாய மருத்துவ முறையில் தனக்கு மருத்துவம் செய்து கொள்வார்.

அவர் சுறுசுறுப்பில்லாமல் இருந்தால் சொக்கலெட் மற்றும் ஆப்பிள் பழம் சாப்பிடுவார்என பின்லாடன் மனைவி கூறியுள்ளார். இதில் பின்லாடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிக எளிமையாக கடும் சிக்கனமாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் பொது இடங்களில் தோன்றியதில்லை என அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆணைக் குழுவின் அறிக்கையின்படி பாகிஸ்தான் உளவுப் பிரிவு பின்லாடனை தேடும் நடவடிக்கையை 2005ம் ஆண்டிலேயே நிறுத்திக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பின்லாடனை கொன்ற அமெரிக்காவின் நடவடிக்கையை, ஒரு குற்றவாளி கும்பலின் செயல்போல் அமைந்திருந்ததாக நீதிபதிகளைக் கொண்ட ஆணைக்குழு விபரித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com