Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த்தேசியத்தை வைத்து பிழைப்பவர்கள் புலிகளின் முற்றுகையில்

தங்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தங்களைப் புறக்கணித்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன்னால் போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளது என ஜனநாயகப் போராளிகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயகப் போராளிகளின் முக்கியஸ்தரான துளசியின் ஒருங்கிணைப்பில் இன்று மாலை ஒன்று கூடிய விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் முக்கியஸ்தர்கள் ஜனநாயகப் போராளிகளின் இணைப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தியாதரன் அவர்களின் இடத்தில் இருந்து ஊடகத்திற்கு பேட்டி வழங்கியுள்ளனர்.

இன்னொரு ஜனநாயகப் போராளியான முன்னாள் போராளி வேந்தன் கூறும் போது ‘எங்களுடைய தலைவரால் உருவாக்கப்பட்டு எங்களால் வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்புலாக நின்றது நாங்களே. எங்களால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்சியை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கும் அதனைப் பலம் பொருந்திய ஒரு கட்சியாக அமைப்பதற்குமே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அத்துடன் ஜனநாயகப் பாதைக்கு வந்த நாம் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கூட்டமைப்புடன் சேர்ந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் நினைத்திருந்தோம். இந்த நோக்குடன் நாம் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனை் ஐயாவையும் ஏனைய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்தித்து மிகவும் ‘எங்களையும் கூட்டமைப்புக்குள் உள்வாங்குங்கள். நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம், எங்களில் ஓரிருவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கும் சந்தர்ப்பம் தாருங்கள் என மிகவும் பணிவாகவும் மன்றாட்டமாகவும் அவர்களிடம் கேட்டோம்.

ஆனால் அதற்கு சம்மந்தன் சொன்ன பதில் என்னவெனின் ‘உங்களை நாங்கள் இணைத்துக் கொண்டால் வெளிநாடுகள் எல்லாம் எங்களை பயங்கரவாதிகள் என்ற நோக்கில் பார்க்கும். நீங்கள் அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள்‘ என்று மிகவும் கேவலப்படுத்தி கதைத்தார்.
நீங்கள் இராணுவப் புலனாய்வாளர்களின் பின்னால் நின்று கொண்டு வருகின்றீர்கள் என மிகக் கேவலமாகத் தெரிவித்தார். அப்போது நான் ‘ஐயா, நாங்கள் புலனாய்வாளர்களாக இருந்திருந்தால் உங்களுக்கு முன்னாள் வந்து எங்களையும் சேர்ந்துக் கொள்ளங்கள் என கேட்டிருக்கமாட்டோம்.

தனித்து நின்று சுயேட்சையாகப் போட்டியிட்டு உங்களின் வாக்குகளைப் பிரிக்கும் நடவடிக்கையை எடுத்திருப்போம். இது எங்களுடைய கட்சி, நாங்கள் உருவாக்கிய கட்சி, நாங்கள் 2004ம் ஆண்டு சைக்கிளில் வீடுவீடாக பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்கு கேட்ட கட்சி. யாழ்ப்பாணத்தில் இருந்து முகமாலை வரை சைக்கிள்களில் சென்று பிரச்சாரம் செய்து இந்தக் கட்சியை வளர்த்துள்ளோம். வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மிகுந்த சிரமத்தில் பரப்புரை செய்தோம். ஆகவே இந்தக் கட்சியை நாம் உடைக்க நினைக்கவில்லை.
எங்கள் போராளிகள் ஜனநாயகப் பாதைக்கு வருவதற்கு நீங்கள் சந்தர்ப்பம் தரவேண்டும். எங்களின் பின்னால் புலனாய்வாளர்கள் இல்லை. எங்களின் பின்னால் மக்களே இருக்கின்றார்கள். மக்களின் சக்தியை நம்பியே நாம் ஜனநாயக வழிக்கு வந்துள்ளோம். எங்களை மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.

நான் பல வருடங்கள் போராளியாக வாழ்ந்துள்ளேன். எனது தங்கையைப் போராட்டத்தில் இழந்துள்ளேன். எனக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினராகிய உங்களிம் வந்து கதைப்பதற்கு உரிமையிருக்கின்றது என கூறினேன். கூட்டமைப்பில் இருக்கும் யாராவது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இந்த மக்களுக்காகவும் மண்ணிற்காகவும் தங்கள் பிள்ளைகளை அர்ப்பணிப்பார்களா?? விடுதலைப் புலிகளையும் எமது மக்களையும் வைத்து கேவலமான பிழைப்பு நடாத்துகின்றார்கள். சொகுசு வாகனங்களில் திரிகின்றார்கள். தேர்தல் வரும் வேளைகளில் புலிகளை இழுத்து தமிழ்த்தேசியம் கதைக்கின்றார்கள். மாவீரன் பிரபாகரன்.
மாவீரர்கள் போற்றப்படக்கூடியவர்கள். தேர்தல் முடிந்தபின் புலிகளின் கொள்கைகள் வேறு, எமது கொள்கைகள் வேறு என கூறுகின்றார்கள்.

ஆகவே மக்களே நீங்கள் இதைப் புரிந்து கொள்ளுங்கள். மக்களே!! நாங்கள் கதைத்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல. நாங்கள் செய்து காட்டுபவர்கள். எனவே இதனை உணர்ந்து நீங்கள் எமக்குப் பலத்தைத் தர வேண்டும் என முன்னாள் போராளி வேந்தன் தெரிவித்தார்.
இதே வேளை விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த கங்கைஅழகன் கருத்துத் தெரிவிக்கையில் ”கூட்டமைப்பினர் சரியான முறையில் மக்களுக்கான சேவையை ஆற்றியிருந்தால் நாங்கள் தேர்தலில் குதிக்க வேண்டிய சந்தர்ப்பம் இருக்காது. நான் வடமராட்சி பிரதேசத்திலும் கடற்புலிகளின் மேலாளாராகக் கடமையாற்றியுள்ளேன்.
நாங்கள் மக்களுக்காக சேவையாற்றிய போது மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களிடமே தண்ணீர் வாங்கிக் குடித்து அவர்களுடைய பிரச்சனைகளைக் கேட்டுத் தீர்த்துக் கொண்டிருந்தோம்.

கூட்டமைப்பைப் போல மேசைகளில் இருந்து அரசியல் செய்யவில்லை என கூட்டமைப்பின் இயலாமையை தெட்டத் தெளிவாகத் தெரிவித்தார். கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த காமினி, ராதாவான் தாக்குதல் பிரிவு கதிர், மற்றும் சாள்ஸ் ஆகியோரும் எம்மால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு எம்மைக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கின்றது என்ற கருத்த்துடன் கூடிய பல தகவலகள்களை தெரிவித்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com