அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்திய
தயாநிதிமாறன் தெஹல்கா
ஏடு படப்பிடிப்பு
தொலைத்தொடர்புத்
துறையில் தோண்டத்
தோண்ட ஊழல்கள் சன் டி.வி.க்கு
வந்த ரூ.700 கோடி
2ஜி
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக
ஸ்வான் டெலிகாம்
நிறுவனத்திடமிருந்து
முன்னாள் தொலைத்
தொடர்புத் துறை
அமைச்சர் ஆ.ராசா
மூலம் கலைஞர் டி.வி.க்கு
முறைகேடான வழிகளில்
ரூ.200 கோடி லஞ்சப்
பணம் வந்ததாக எழுந்த
குற்றச்சாட்டைவிட,
மிகப் பெரு மளவில்
இதே போன்ற தொலைத்
தொடர்பு அலைக்கற்றை
ஒதுக்கீட்டிற்
காக ஏர்செல் நிறுவனத்தை
நடத்தி வரும் மேக்ஸிஸ்
குழுமத்திடமிருந்து
முறைகேடான வழிகளில்,
சன் டி.வி. குழுமத்தை
நடத்தி வரும் மாறன்
சகோ தரர்கள் லஞ்சமாக
பெற்றார்கள் என்பதற்
கான ஆதாரங்கள்
வலுத்துள்ளன.
மேக்ஸிஸ் குழுமத்திடமிருந்து
முறை கேடான வழிகளில்
ரூ.700 கோடி அள விற்கு
சன் டி.வி. குழுமத்திற்கு
வந்து சேர்ந்துள்ளது
என்று ஏராளமான
விபரங் களை மேற்கோள்
காட்டி தெஹல்கா
ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த
தகவல்கள் தவறா
னவை என்று மத்திய
ஜவுளித் துறை அமைச்சர்
தயாநிதி மாறன்
மறுத்துள்ளார்.
ரூ.1 லட்சத்து 76 ஆயிரம்
கோடி சூறை யா டப்பட்ட
2ஜி ஸ்பெக்ட்ரம்
(இரண்டாம் தலைமுறை
அலைக்கற்றை) ஒதுக்
கீட்டு ஊழலில்
மத்திய குற்றப்புலனாய்
வுக் கழகமும்
(சிபிஐ), அமலாக்கப்பிரிவும்
உச்சநீதிமன்றத்தின்
தீவிர கண்காணிப்
பின் கீழ் விசாரணை
நடத்தி வருகின்
றன. இதில் தனது
பதவியை தவறாக பயன்படுத்தி,
மத்திய அமைச்சரவைக்
குழுவின் கண்ணில்
மண்ணை தூவி விட்டு,
முதலில் வந்தோருக்கு
முன்னு ரிமை என்ற
தவறான வர்த்தகக்
கோட் பாட்டை முன்வைத்து,
மத்திய தொலைத்
தொடர்புத் துறை
அமைச்சராக இருந்த
ஆ.ராசா, தனக்கு
வேண்டிய நிறுவனங்
களுக்கு முறைகேடான
வழிகளில் அலைக்கற்றை
உரிமங்களை ஒதுக்கீடு
செய்தார்; இதன்
மூலம் அரசின் கருவூ
லத்திற்கு வரலாறு
காணாத இழப்பை ஏற்படுத்தினார்
என்பது உள்ளிட்ட
குற் றச்சாட்டுகளின்
பேரில் கைது செய்யப்
பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் குறிப்பாக,
முறைகேடாக உரிமம்
ஒதுக்கீடு செய்யப்பட்ட
சாகித் உஸ்மான்
பால்வாவின் ஸ்வான்
டெலிகாம் நிறு
வனத்திடமிருந்து,
ஒதுக்கீட்டிற்கு
கை மாறாக ரூ.200 கோடியை
முறையற்ற வழி களில்
முன்னாள் முதலமைச்சர்
கரு ணாநிதியின்
குடும்பத்திற்கு
சொந்தமான கலைஞர்
டி.வி.க்கு கொண்டு
வந்து சேர்த்ததில்
ராசாவுக்கும்,
திமுக எம்.பி. கனிமொழிக்கும்
பங்கு உள்ளது என்ற
குற்றச்சாட்டின்
அடிப்படையில்
கனி மொழியும் கைது
செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஊழலில்
மேலும் பல பெரும்
நிறுவனங்களின்
முக்கிய அதிகாரிகளும்
கைது செய்யப்பட்
டுள்ளனர்.
ராசா அமைச்சராக
இருந்தபோது ஒதுக்கீடு
செய்தது இரண்டாம்
தலை முறை அலைவரிசைக்கற்றை
எனப் படும் 2ஜி
ஸ்பெக்ட்ரம் உரிமங்கள்
ஆகும்.
ராசாவுக்கு
முன்பு மத்திய
தொலைத் தொடர்புத்
துறை அமைச்சராக
இருந்த வர் திமுகவின்
தயாநிதி மாறன்
ஆவார். அவரது
காலத்தில் 2ஜி
ஸ்பெக்ட்ரம் வரிசைக்கு
முந்தைய யுஏஎஸ்எல்
எனப் படும் ‘ஒருங்கிணைந்த
தொலைத் தொடர்பு
சேவையை பெறுவதற்கான
உரிமங்கள்’, தனியார்
தொலைத்தொடர்பு
நிறுவனங் களுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த ஒதுக்கீடுகளை
தொடர்ந்து 2ஜி
ஸ்பெக்ட் ரம் உரிமங்களை
ஒதுக்கீடு செய்யும்
நடவடிக்கைகளும்
துவங்கின.
2ஜி ஸ்பெக்ட்ரம்
ஊழல் தொடர்பாக
சிபிஐ, அமலாக்கப்பிரிவு
ஆகிய விசா ரணை
அமைப்புகள் மட்டுமின்றி,
தற் போது நாடாளுமன்ற
கூட்டுக் குழுவும்
(ஜேபிசி) விசாரணையை
துவக்கியுள் ளது.
ஏற்கெனவே நாடாளுமன்ற
பொதுக் கணக்குக்
குழுவும் இதுதொடர்பாக
விசாரணை நடத்தி
அறிக்கையை தயா
ரித்துள்ளது.
இதனிடையே, 2001ம் ஆண்டு
முதல் தற்போது
வரை நடந் துள்ள
தொலைத் தொடர்பு
அலைக் கற்றை உரிமங்கள்
ஒதுக்கீடுகளில்
எத்தகைய நடைமுறைகள்
பின்பற்றப் பட்டுள்ளன;
என்னென்ன முறைகேடு
கள் நடந்துள்ளன
என்பது குறித்து
ஆய்வு செய்ய மத்திய
அரசு, ஓய்வு பெற்ற
நீதிபதி சிவராஜ்
பாட்டீல் தலைமையிலான
ஒரு நபர் குழுவை
நியமித்தது. நீதிபதி சிவ
ராஜ் பாட்டீலும்
தனது விசாரணை அறிக்
கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
நீதிபதி சிவராஜ்
பாட்டீலின் அறிக்
கையில், தயாநிதிமாறனின்
நடவடிக்கை கள்
குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,
அவர் மத்திய தொலைத்
தொடர்புத்துறை
அமைச்சராக பணியாற்றிய
2004 - 08 காலகட்டத்தில்
தொலைத் தொடர்புத்
துறையின் பல்வேறு
விதிமுறைகளை மீறி
தனக்கு வேண்டிய
நிறுவனங் களுக்கு
சாதகமாக செயல்பட்டதாக
குறிப்பிடப்பட்டிருப்பதாகவும்
தற்போது தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இந்த தகவல்களுடன்
ஏராளமான தகவல்களை
புலனாய்வு செய்து
மே 31ம்தேதி வெளியாகியுள்ள
தெஹல்கா ஏட்டில்
ஆஷிஸ் கேத்தன்
எனும் செய் தியாளர்
எழுதியுள்ள கட்டுரையில்,
தயா நிதி மாறன்
மத்திய தொலைத்
தொடர்புத் துறை
அமைச்சராக பதவியேற்ற
பின் னர், ஏர்செல்
நிறுவனம் கைமாறியதிலும்,
மிகச் சிறிய நிறுவனமாக
இருந்த ஏர் செல்,
நாடு தழுவிய செல்பேசி
சேவை யை வழங்கும்
அளவிற்கான மிகப்
பெரும் நிறுவனமாக
மாறியதிலும் நடந்துள்ள
திரைமறைவு பேரங்களை
அம்பலப் படுத்தியுள்ளார்.
2004 மே 24ம்தேதி, காங்கிரஸ்
தலை மையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்
டணி அரசின் தகவல்
தொழில்நுட்பம்
மற்றும் தொலைத்
தொடர்புத்துறை
அமைச்சராக தயாநிதிமாறன்
பொறுப் பேற்றார்.
அந்தக் காலகட்டத்தில்
சென்னை தொலைத்
தொடர்பு வட்டம்
உள்பட ஓரிரண்டு
பகுதிகளில் மட்டுமே
தொலைபேசி சேவையை
அளித்து வந்த ஏர்செல்
நிறுவனம், மேலும்
14 தொலைத் தொடர்பு
வட்டங்களில் தனது
சேவை யை விரிவுபடுத்துவதற்கான
உரிமங் கள் கேட்டு,
தொலைத் தொடர்புத்
துறை யிடம் விண்ணப்பம்
செய்திருந்தது.
அப் போது இந்த
நிறுவனம், ஸ்டெர்லிங்
இன் போடெக் குரூப்
என்ற நிறுவனத்திற்கு
சொந்தமானதாக இருந்தது.
பின்னர் சிவா
குரூப் என்று பெயர்
மாற்றம் செய் யப்பட்ட
இந்நிறுவனத்தின்
உரிமையாளர் சிவசங்கரன்
என்பவர் ஆவார்.
14 தொலைத் தொடர்பு
வட்டங்களில் சேவையை
விரிவுபடுத்துவதற்காக
உரிமங்கள் கேட்ட
ஏர்செல் நிறுவனத்
தின் விண்ணப்பங்கள்,
அமைச்சர் தயா நிதிமாறனின்
ஒப்புதலுக்காக
காத்துக் கொண்டே
இருந்தன. ஆனால்,
அவரது ஒப்புதல்
கிடைக்காமல் நீண்ட
நாட் களாக இழுத்தடிக்கப்பட்டது.
இதனி டையே, திடீரென்று
மலேசியாவைச் சேர்ந்த
பெரும் தொழிலதிபரான
டி. அனந்தகிருஷ்ணன்
என்பவருக்கு சொந்தமான
மேக்ஸிஸ் குரூப்
எனும் நிறுவனம்,
ஏர்செல் நிறுவனத்தை
விலைபேசியது.
இலங்கை தமிழ் வம்
சாவளியை சேர்ந்த
மலேசிய தொழில திபர்
அனந்தகிருஷ்ணன்,
ஏர்செல் நிறு வனத்தின்
உரிமையாளர் சிவசங்கரனி
டம் விடாப்பிடியாக
பேரம் நடத்தி விலை
பேசி முடித்தார்.
அதன் 74 சதவீத
பங்கு களை ரூ.3 ஆயிரத்து
390 கோடி விலை கொடுத்து
வாங்கினார். எஞ்சியுள்ள
26 சதவீத பங்குகளை,
அப்போலோ மருத்
துவமனையின் தலைவர்
பிரதாப் ரெட்டி
வாங்கினார். பிரதாப் ரெட்டி
வாங்கினா லும்,
அந்தப் பங்குகள்
மேக்ஸிஸ் குழு
மத்திற்காக வேறு
பெயரில் வாங்கப்பட்
டது என்பதே உண்மை.
இந்திய தொலைத்
தொடர்பு நிறுவனங்களில்
வெளிநாடு களைச்
சேர்ந்த நிறுவனங்கள்
74 சத வீதம் அளவிற்கு
பங்குகள் வைத்திருக்க
லாம் என்ற சட்ட
விதிகளின்படி
74 சத வீத பங்குகளை
மேக்ஸிஸ் குழுமமும்,
எஞ்சிய பங்குகளை
மேக்ஸிஸ் குழு
மத்திற்காக அப்போலோ
குழுமமும் வாங்
கியது தெரிகிறது.
2006 மார்ச் மாதம்
ஏர்செல் நிறுவ
னத்தை மேக்ஸிஸ்
குழுமம் விலைக்கு
வாங்கிய அடுத்த
6 மாதக் காலத்திற்குள்,
அந்நிறுவனத்திற்கு
14 புதிய தொலைத்
தொடர்பு வட்டங்களில்
சேவையை விரிவு
படுத்துவதற்கான
ஒருங்கிணைந்த
தொலைபேசிக் கற்றை
உரிமங்களை அமைச்சர்
தயாநிதிமாறனின்
உத்தரவின் பேரில்
மத்திய தொலைத்
தொடர்புத் துறை
வழங்கியது.
இந்த 14 தொலைத்
தொடர்பு வட்டங்
களும் மிகவும்
லாபம் கொழிக்கும்
வட் டங்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆ. ராசா அளித்த
2ஜி ஸ்பெக்ட்ரம்
உரிமங் களுக்கான
விலையின் அடிப்படையில்
மத்திய தலைமை கணக்கு
மற்றும் தணிக்கை
அதிகாரி மேற்கொண்ட
கணக்கீட்டின்
படி பார்த்தால்,
ஏர்செல்நிறுவனத்திற்கு
வழங்கப்பட்ட உரிமங்களின்
மதிப்பு சுமார்
ரூ.22 ஆயிரம் கோடியாகும்.
ஆனால், ஏர்செல்
நிறுவனம் வழங்கியதோ
வெறும் ரூ.1,399
கோடி மட்டுமே.
14 தொலைத் தொடர்பு
வட்டங்களுக் கான
உரிமங்களை பெற்றவுடன்
நாடு முழுவதும்
செல்பேசி சேவைகளை
வழங்குகிற மிகப்
பிரம்மாண்டமான
நிறு வனமாக ஏர்செல்
தன்னை முன்னி றுத்தி
விளம்பரப்படுத்தியது.
லாபத்தை அள்ளிக்
குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த உரிமங்கள்
அளிக்கப்பட்ட
அடுத்த ஆண்டு,
2007 பிப்ரவரியில்,
மேற்படி மேக்ஸிஸ்
குழுமத்தின் உரிமை
யாளரான அனந்தகிருஷ்ணன்,
தனது குழுமத்தைச்
சேர்ந்த நிறுவனங்களில்
ஒன்றான சவுத் ஆசியா
எண்டர்டெய்ன்
மென்ட் ஹோல்டிங்
லிமிடெட் எனும்
கம்பெனியின் மூலமாக
கட்டம் கட்டமாக
ரூ.600 கோடியை சன்
டி.வி. நிறுவனத்
தில் முதலீடு செய்தார்.
அந்நிறுவனத்
தின் 20 சதவீத பங்குகளை
வாங்கிக் கொண்டார்.
சன் டி.வி குழுமம்,
அமைச் சர் தயாநிதி
மாறனின் சகோதரர்
கலாநிதி மாறன்
மற்றும் அவரது
மனைவி காவேரி மாறன்
ஆகியோரால் நடத்தப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பின் னர்
2008 பிப்ரவரிக்கும்,
2009 ஜூலைக் கும் இடையில்
மேலும் ரூ.100 கோடியை
மாறன் சகோதரர்கள்
குடும்பத்திற்கு
சொந்தமான சவுத்
ஆசியா எப்எம் லிமி
டெட் (சன் எப்எம்
ரேடியோ நெட்வொர்க்)
நிறுவனத்தில்
மேக்ஸிஸ் உரிமையாளர்
அனந்தகிருஷ்ணன்
முதலீடு செய்தார்.
இதைத் தொடர்ந்து
சன் டிடிஎச் மிகப்
பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.
மேற்கண்ட விபரங்களை
விரிவாக பட்டியலிட்டுள்ள
தெஹல்கா செய்தியா
ளர், ஏர்செல் - மேக்ஸிஸ்
- சன் டி.வி. குழுமம்
இடையே நடந்துள்ள
பேரங்கள்; அதற்கு
முன்பு டிஷ்நெட்
நிறுவனத்தை கைமாற்றியதில்
நடந்த பேரங்கள்
என பல திரைமறைவு
பேரங்களில், தனது
அமைச்சர் பதவியை
தயாநிதிமாறன்
எப் படியெல்லாம்
தவறாக பயன்படுத்தினார்
என்பதையும், தொலைத்
தொடர்பு அலைக்கற்றை
உரிமங்கள் வழங்கும்
விவகாரத்தை மத்திய
அமைச்சரவைக் குழுவின்
ஒப்புதலுக்கெல்லாம்
கொண்டு செல்ல வேண்டியதில்லை
என்று பிர தமர்
மன்மோகன்சிங்கிடம்
வாதிட்டு, அவரது
ஒப்புதலை பெற்று
தனது இஷ் டம் போல்
செயல்பட்டதையும்,
தயாநிதி மாறன்
உருவாக்கிய இந்த
நடைமுறை யை அவருக்கு
பின்னால் வந்த
ஆ.ராசா எப்படியெல்லாம்
தவறாக பயன்படுத்தி
னார் என்பதையும்,
இவை அனைத் தையும்
பிரதமர் மன்மோகன்
சிங் எப்படி கண்டுகொள்ளாமல்
விட்டார் என்பதை
யும் விரிவாக அலசியுள்ளார்.
தொலைத் தொடர்பு
அலைக்கற்றை ஊழலில்
தோண்ட தோண்ட ஏராளமான
அதிர்ச்சி தகவல்கள்
வெளியாகி வரும்
நிலையில், சன்
டி.வி. குழுமம்
தயாநிதி மாறனின்
அமைச்சர் பதவியை
பயன் படுத்தி முறைகேடான
வழிகளில் பணம்
சம்பாதித்தது
தொடர்பான விபரங்களும்
வெளியாக துவங்கியுள்ளன.
தயாநிதிமாறன்
நோட்டீஸ்
இந்நிலையில், தன்
மீது குற்றம் சாட்
டிய தெஹல்கா பத்திரிகைக்கு
மத்திய ஜவுளித்
துறை அமைச்சர்
தயாநிதி மாறன்
நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புல னாய்வு
என்ற பெயரில் இட்டுக்
கட்டப் பட்ட பொய்யை
அந்த இதழ் வெளியிட்
டுள்ளது என அவர்
தனது நோட்டீஸில்
குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தயாநிதிமாறனிடமிருந்து
இதுவரை தங்களுக்கு
நோட்டீஸ் எது வும்
வரவில்லை என தெஹல்கா
வெளி யிட்டுள்ள
செய்திக் குறிப்பில்
கூறப்பட் டுள்ளது.