|
||||
|
புனர்வாழ்வு பெற்ற
900
பேர் நேற்று
உறவினரிடம்
ஒப்படைப்பு
எஞ்சிய மூவாயிரம்
பேர் இவ்வருட
இறுதியில் இறுதிக்கட்ட மோதல்களின்
போது சரணடைந்து
புனர்வாழ்வளிக்கப்பட்ட
முன்னாள்
புலி உறுப்பினர்கள்
900 பேர் நேற்று
விடுவிக்கப்பட்டனர். வவுனியா நகரசபை
கலாசார மண்டபத்தில்
நேற்று நடைபெற்ற நிகழ்வில்
இவர்கள் தமது குடும்பத்தினருடன்
இணைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு
மற்றும் புனர்வாழ்வு
அமைச்சர்
சந்திரசிறி
கஜதீர, இளைஞர்கள்
விவகாரம்
மற்றும் திறன் அபிவிருத்தி
அமைச்சர்
டளஸ் அழகப்பெரும,
ஹம்பாந்தோட்டை
பாராளுமன்ற
உறுப்பினர்
நாமல் ராஜபக்ஷ, புனர்வாழ்வு
ஆணையாளர்
நாயகம் பிரிகேடியர்
சுசந்த ரணசிங்க, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.
சாள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட
முன்னாள்
புலி உறுப்பினர்கள்
குடும்பத்தினருடன்
ஒப்படைக்கப்பட்டதுடன்,
விடுவிக்கப்பட்டவர்கள்
விவசாயம்
செய்வதற்கான
பொருட்களும்
கையளிக்கப்பட்டன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 900 பேரில்
குறிப்பிட்டவர்கள்
நேற்றையதினம்
விடுவிக்கப்பட்டதுடன்,
விடுவிப்பதற்கான
ஆவணங்கள்
பூர்த்திசெய்யப்படாத
எஞ்சியவர்கள்
இன்றும், நாளையும் விடுவிக்கப்படவுள்ளதாக
அமைச்சின்
அதிகாரியொருவர்
தெரிவித்தார்.
இவ்வருட இறுதிக்குள்
புனர்வாழ்வளிக்கப்பட்ட
எஞ்சிய 3000ற்கும்
அதிகமானவர்களை
விடுவிப்பதே
அமைச்சின்
பிரதான இலக்கு என மறுசீரமைப்பு
மற்றும் புனர்வாழ்வு
அமைச்சர்
சந்திரசிறி
கஜதீர நேற்றைய நிகழ்வில்
குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்டவர்கள் தமது சொந்த
இடங்களுக்குச்
செல்வதற்கான
விசேட போக்குவரத்து
ஏற்பாடுகளும்
செய்யப்பட்டிருந்தன. விடுவிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்
மகிழ்ச்சியை
வெளியிட்டிருந்தமையைக்
காணக்கூடியதாகவிருந்தது.
இதேவேளை, எதிர்வரும்
டிசம்பர்
முதலாம்திகதிக்கு
முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட
3,200 எல்.ரி.ரி.ஈ.
போராளிகள்
விடுவிக்கப்படுவார்கள்
என்று புனர்வாழ்வு
மற்றும் சிறைச்சாலை
சீர்திருத்த
அமைச்சர்
சந்திரசிரி
கஜதீர தெரிவித்துள்ளார்.
இவ்விதம் விடுவிக்கப்பட்ட
முன்னாள்
எல்.ரி.ரி.ஈ.
போராளிகள்
அனைவருக்கும்
வேலைவாய்ப்பை
பெற்றுக்கொடுப்பதுடன்
அவர்களுக்கு
விவசாயம்
செய்ய விருப்பம்
இருப்பின்
காணிகளையும்
வழங்க அரசாங்கம்
நடவடிக்கை
எடுக்கும்
என்றும் இவர்களுக்கு
புதிதாக நிர்மாணிக்கப்படும்
வீடுகளும்
அவர்களின்
தேவைக்கேற்ப
கொடுக்கப்படும்
என்றும் கூறினார்.
இவர்களுக்கு சுய
வேலைவாய்ப்புக்களை
ஆரம்பிப்பதற்கு
10 ஆண்டு காலத்தில்
மீளச் செலுத்தக்கூடிய
வகையில் மிகவும் குறைந்த வட்டியுடனான
கடனுதவியை
வழங்குவதற்கும்
அரசாங்கம்
நடவடிக்கை
எடுக்கும்
என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்விதம் புனர்வாழ்வு
பெற்ற எல்.ரி.ரி.ஈ.
போராளிகள்
மீண்டும்
பிரிவினைவாத
ஆயுதப் போராட்டங்களில்
ஈடுபடுவதை
தவிர்க்கும்
முகமாகவே
இத்தகைய சலுகைகளும்
வாழ்வாதாரங்களும்
அரசாங்கத்தினால்
பெற்றுக்கொடுக்கப்படுகின்றது
என்றும் அவர் தெரிவித்தார்.
அவசியம் ஏற்படின்
இவர்களுக்கு
சுய வேலைவாய்ப்புக்களை
ஆரம்பிப்பதற்கான
தொழிற் பயிற்சிகளும்
பெற்றுக்கொடுக்கப்படும்.
இவர்களைவிட கடந்த
சனிக்கிழமை
புனர்வாழ்வளிக்கப்பட்ட
906 முன்னாள்
எல்.ரி.ரி.ஈ
போராளிகளை
விடுவிப்பதற்கான
தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்த
அமைச்சர்
இவர்களுக்குரிய
விடுதலைப்
பத்திரங்கள்
இப்போது தயாரிக்கப்பட்டு
வருவதாகவும்
நாளை இந்த
906 பேரும் விடுவிக்கப்படுவார்கள்
என்றும் கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |