Contact us at: sooddram@gmail.com

 

தயாநிதி மாறன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகிறார்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த ஊழலில் வலு வாக சிக்கியுள்ள தற்போதைய மத்திய ஜவுளித்துறை அமைச்சரும் முன் னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சருமான தயாநிதிமாறனின் பெயர் குற்றப்பட்டியலில் இடம் பெறக்கூடும் என்ற சூழலில், மத்திய அமைச்சரவையிலிருந்து அவர் நீக்கப்படுவார் என்று தில்லியில் பர பரப்புச் செய்திகள் எழுந்துள்ளன.

ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு சூறையாடப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாம் ஆட்சிக் காலத்தில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த திமுகவின் தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத் தை மலேசிய கார்ப்பரேட் நிறுவன மான மேக்ஸிஸ் குழுமத்திற்கு கை மாற்றிவிட்ட பேரத்தில் ஈடுபட்ட தும், இதற்காக ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி யதும், மேக்ஸிஸ் குழுமத்திற்கு கைமா றிய பின்னர் ஏர்செல் கம்பெனிக்கு புதிய தொலைத்தொடர்பு அலைக்கற் றை உரிமங்களை உடனடியாக வழங் கியதும், இதற்கு கைமாறாக மேக்ஸிஸ் குழுமம், தயாநிதி மாறன் - அவரது சகோதரர் கலாநிதி மாறன் குடும்பத் திற்குச் சொந்தமான சன் டி.வி. குழுமத் தில் ரூ.800 கோடி அளவிற்கு லஞ்சப் பணத்தை முதலீடாக செய்ததும் என அமைச்சர் தயாநிதி மாறன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தயாநிதி மாறனும் கலாநிதிமாற னும் தனக்கு மிரட்டல் விடுத்தனர் என்று ஏர்செல் நிறுவனத்தின் முன் னாள் உரிமையாளர் சிவசங்கரன் பகி ரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மத்திய குற்றப்புல னாய்வுக் கழகத்திடம் (சிபிஐ) அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமின்றி, சென்னையில் சன் டிவிக்காக தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைப்புகளைப் பெற்று 323 இணைப்புகள் கொண்ட ஒரு இணைப்பகத்தையே தனது வீட்டின் மூலம் முறைகேடாக உருவாக்கி, பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறு வனத்தின் வருமானத்தைக் கோடிக் கணக்கில் கொள்ளையடித்தார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு ஏராளமான ஆதாரங்களுடன் செய்திகள் வெளி யிட்டுள்ளது. இந்தச் செய்திகள் பொய் யானவை என்று அமைச்சர் தயாநிதி மாறன் மறுத்தபோதிலும், மீண்டும் பிஎஸ்என்எல் சென்னை அலுவலக ஆவணங்களுடன் கூடிய ஆதாரங் களுடன் இந்த முறைகேடுகள் அம் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப்பின்னணியில் தயாநிதி மாறன் மீதான ஊழல் - முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தயாராகி வருகிறது. ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தயாநிதி மாறன் மீது புகார் பதிவு செய்து விசா ரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள் ளது. அவர் ஒரு மத்திய அமைச்சராக இருப்பதால், 1998 ஊழல் தடுப்புச்சட் டத்தின் கீழ் வரும் மேற்கண்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தில்லி சிறப்பு காவல்படைச் சட்டம் பிரிவு 6(ஏ) கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசின் அனுமதியை சிபிஐ நாடியிருக்கிறது. இதற்கான நடைமுறைகள் முழுமையடைய சுமார் 3 வார காலம் ஆகும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் தயாநிதி மாறன் மீது புகார் பதிவு செய்யப்பட்டால், அதைத்தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழலின் 3வது குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம்பெறும் என்று சிபிஐ வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் தயாநிதி மாறன் மீதான மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீக்கப்படுகிறார்?

இந்தப்பின்னணியில், மத்திய அமைச்சரவையை விரிவாக்கும் தனது யோசனையை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்திவைத்திருப்பதாக தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மக்க ளின் உணர்வலை கொதித்து எழுந்து வரும் நிலையில், மிகக்கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளா கியுள்ள அமைச்சர்களை, குறிப்பாக தயாநிதி மாறனை நீக்க வேண்டிய கட்டாயமும் மன்மோகன் சிங்கிற்கு எழுந்துள்ளது.

தயாநிதி மாறனின் பிரச்சனையை அவரே சமாளித்துக்கொள்வார் என்றும் சிபிஐ விசாரணையை அவரே எதிர்கொள்வார் என்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரு மான கருணாநிதி கூறியுள்ள பின்ன ணியில், மாறனுக்கு எதிராக நடவடிக் கை மேற்கொள்ள பிரதமருக்கு எவ் விதத் தடையும் இல்லாத சூழல் ஏற் பட்டுள்ளது.

மேலும், ஆ.ராசா கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் கபில் சிபலிடம் கூடுதலாக ஒப்படைக்கப் பட்டது. இதேபோல வேறு சில துறைகளை ஒரு அமைச்சரே கவ னித்து வரும் நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலும் பிரதமர் இருக்கிறார். எனினும் வரலாறு காணாத ஊழல்களால் கறைபடிந் துள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போதைக்கு அமைச் சரவை மாற்றத்தை மேற்கொள்ளா மல், தயாநிதி மாறனை மட்டும் பதவி யிலிருந்து நீக்கி தனது பெயரை காப் பாற்றிக்கொள்ள முயற்சிப்பதாக தெரி கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com