Contact us at: sooddram@gmail.com

 

வெனிசுலா

நனவாகும்அனைவருக்கும் வீடுதிட்டம்

நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு குடியிருக்க வீடில்லாத நிலையில், ஹியூகோ சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக மிகவும் தேவையுள்ளவர்களுக்கு இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்தனர். அவர்கள் வீடு கோரி பதிவு செய்யவும் வாய்ப்பு தரப்பட்டது. லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் பதிவு செய்தனர். தற்போது அவர்களின் தேவையை சரிபார்த்து, தற்போதுள்ள வாழ்நிலையை ஆய்வு செய்யும் பணி துவங்குகிறது. ஒவ்வொரு பகுதியாக அந்தப் பணியைச் செய்யும் திட்டத்துடன், ஐந்து மாகாணங்களில் அந்தப் பணியை முதலில் துவக்குகிறார்கள்.

இந்தத்திட்டத்தில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதை நடைமுறைப்படுத்த 2 ஆயிரம் குழுக்கள் தயாராகியுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் நான்கு பேர் இடம் பெற்றிருக்கின்றனர். இதில் ஒருவர் செயற்கைக் கோள் உதவியுடன் இயங்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பக் கருவியை இயக்குவார். மற்ற மூவரும் மக்களின் நிலைமையை ஆய்வு செய்து தகவல்களைத் தருவார்கள்.இதன்படி, 8 ஆயிரம் தன்னார்வத் தொண்டர்கள், வீடு கோரிப் பதிவு செய்துள்ள 12 லட்சத்து 50 ஆயிரம் பேரை சந்திக்கப்போகிறார்கள்என்கிறார் வெனிசுலாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரிக்கார்டோ மெனென்டிஸ்.

பயனாளிகளின் குடும்பத்தலைவர் குறித்த விபரங்கள், குடும்பத்தினரின் எண்ணிக்கை, அவர்களின் தற்போதைய வாழ்நிலை மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை செயற்கைக்கோள் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பக்கருவி மூலமாகப் ஒரு தொண்டர் பதிவு செய்து கொள்வார். அவர்களின் தற்போதைய குடியிருப்பு இருக்கும் பகுதியையும் பதிவு செய்து கொள்ள செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உதவுகிறது. இந்தக்குழுவின் பணி இதோடு நிறைவு பெற்று விடாது. அவர்களை ஒரு அமைப்பு ரீதியாகத் திரட்டும் வேலையும் உள்ளது. இதுதான் அவர்கள் செய்யப்போகும் முக்கியமான பணி. இந்தத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போவதே மக்கள்தான். அதேவேளையில் புரட்சிகரமாக அரசின் தொழில்நுட்பம் மற்றும் சமூக-அரசியல் உதவி அவர்களுக்கு பெருமளவில் துணை நிற்கும்என்கிறார் வெனிசுலாவின் வீட்டுவசதித்துறை அமைச்சர் ரிக்கார்டோ மோலினா.

இந்தக்குழுக்களின் பணி காலை எட்டு மணிக்குத் துவங்கி மாலை நான்கு வரை நீடிக்கிறது. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிலும் இதே நேரத்தில் குழுக்களின் பணி நீடிக்கும். வார நாட்களில் சந்திக்க முடியாதவர்களை இந்த நாட்களில் சந்தித்துக் கொள்ளலாம் என்பதுதான் திட்டம். தங்கள் பணி குறித்து முதல் கட்டத்திலிருந்து பங்கேற்று வரும் மார்லெனிஸ் கொன்சால்வஸ் என்கிற தன்னார்வத் தொண்டர் கூறுகையில், இது மிகவும் கடினமான பணியாகும். ஆனால் அரசின் திட்டத்தின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தப் பதிவு மற்றும்சரி செய்யும் பணி ஆகிய இரண்டும் திட்டத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகும். யாருக்கு வீடு மிகவும் தேவையாக உள்ளது என்பதையும் நாம்உறுதி செய்து கொள்ள முடியும் என்கிறார்.

தலைநகர் காரகாஸ்அமைந்துள்ள மாகாணம், ஃபால்கான், மிராண்டா, வர்காஸ் மற்றும் ஜுலியா ஆகிய ஐந்து மாகாணங்களிலும் இந்த இரண்டாம் கட்டப் பணி நடைபெறுகிறது. இந்தப்பணி நிறைவு பெற இரண்டு மாதகாலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடில்லாதவர்கள் என்று மட்டுமல்ல, மோசமான வாழ்நிலையில் இருக்கக்கூடியவர்கள் தங்கள் இருப்பிடங்களைப் புனரமைத்துக் கொள்ளவும் இந்தத்திட்டம் உதவி செய்யும். மிகவும் சிறிய வீடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் புதிதாக ஓரிரு அறைகளைக் கட்டிக் கொள்ளலாம் என்கிறார் மோலினா.  அரசின் இந்தத் திட்டத்தைகுதூகலமாக வரவேற்கிறார் ஓஸ்வால்டோ கலண்ட்ரா. என்னுடைய பொருளாதார நிலையில், அரசின் உதவியில்லாமல் வீட்டைப் புதுப்பிக்க வேண்டுமென்றால், உணவைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்கிறார்.

எல்லாமே முதன்முறைதான்...மக்களுக்கான நலத்திட்டங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே முதன் முறையாகவே அமலாகின்றன. சாவேஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக, நாட்டின் எண்ணெய் வளம் மூலமாகக் கிடைக்கும் வருமானத்திற்கும், சுமார் 90 விழுக்காடு மக்களுக்கும் தொடர்பில்லாத நிலையே இருந்தது. பெரும் நிறுவனங்கள் எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதில் அதிக கவனம் செலுத்தின. அவர்களிடம் லஞ்சம் பெறுவதில் மும்முரமாக இருந்த ஆட்சியாளர்கள், மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. சாவேஸ் ஆட்சிக்கு வந்தபிறகுதான் பிரதான துறைகள் அனைத்தும் நாட்டு டைமையாக்கப்பட்டு, அதிலிருந்து வரும் வருமானம் கல்வி, சுகாதாரம், விவ சாயம், வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com