வடக்கில் முஸ்லிம்கள்
குடியேறுங்கள்
என த.தே.கூ. பேச்சளவில்
மட்டும்
கூறுகிறது
- றிசாத்
வடக்கில் வந்து முஸ்லிம்கள்
குடியேறுங்கள்
என்று பேச்சளவில்
மட்டும் கூறும் தமிழ் தேசிய
கூட்டமைப்பு
அந்த மக்கள்
மீள்குடியேற
வரும் போது கூட்டமைப்பின்
சில ஆயுதக்
குழுக்களில்
இருந்த பாராளுமன்ற
உறுப்பினர்களும்,
மதம் சார்ந்தவர்களும்
அதனை தடுக்கும்
பணியினை செய்கின்றனர்
என்று அகில இலங்கை
முஸ்லிம்
காங்கிரஸின்
தேசிய தலைவரும்,அமைச்சருமான
றிசாத் பதியுதீன்
தெரிவித்தார்
வேர் அறுதலின்
வலி என்னும்
கவிதை தொகுப்பின்
வெளியீடு
இன்று கொழும்பு முஸ்லிம் மாதர் நிலைய
கேட்போர்
கூடத்தில்
இடம் பெற்ற
போது, பிரதம
அதிதியாக
கலந்து கொண்டு உரையாற்றும்
போது அமைச்சர்
றிசாத் பதியுதீன்
இதனை கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம்
மீடியா போரத்தின்
தலைவர் என்.எம்.அமீன்
தலைமையில்
இடம் பெற்ற
இந்த நிகழ்வில்
மேலும் அமைச்சர் பேசுகையில்
கூறியதாவது
–
புலிகளினால் பலவந்தமாக
வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்கள்
இன்னும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில்
அகதிகளாக
இருக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள
சாதாரண சூழலில் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு
வருகின்ற
போது, அங்கு
வேறு மாவட்ட
மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அவர்கள் அமர்ந்தால்
பரவாயில்லை,
அருகிலுள்ள
காணிகளில்
முஸ்லிம்கள்
தமது வீடுகளை
அமைத்து வாழ வழி
செய்ய நடவடிக்கைகள்
எடுத்த போது, அதனை
தடுத்து நிறுத்தும்
பணியினை சில தமிழ்
கூட்டமைப்பின்
வன்னி பாராளுமன்ற
உறுப்பினர்கள்
செய்கின்றனர்.
அதற்கு ஆயர் அவர்களும்
துணையிருப்பது
கவலையளிக்கின்றது.
அன்று புலிகளை
வளர்ப்பதில்
மிகமுக்கிய
பங்குகளை
வகித்தவர்கள்,
அன்று புலிகள் எதனை செய்தார்களேர்,
அதனை போன்று
சில அரச
அதிகாரிகளும்,
மத தலைவர்கள்
சிலரும் செய்கின்றனர்.
இந்த நிலையில்
முஸ்லிம்களின்
மீள்குடியேற்றத்தின்
நிலையினை
எண்ணிபார்க்க
வேண்டியுள்ளது.
மீள்குடியேற்ற விடயங்களில்
ஏற்படுத்தப்படும்
தடைகள் குறித்தும்,
அதனை செய்பவர்கள்
குறித்தும்
பாராளுமன்றத்தில்
எடுத்துரைத்த
போது, அதனை
திரிவுபடுத்தி,
நான் ஒரு
மதவாதி என்றும், கத்தோலிக்க
சமூகத்திறகு
எதிரானவர்
என்றும் பிரசாரம் செய்யும் பாராளுமன்ற
உறுப்பினர்கள்,
அவர்களுக்கு
துணையாக பல தமிழ்
ஊடகங்கள்
அவற்றை ஊதி பெருதிபடுத்தி
பிரசுரிக்கின்றனர்.
எனது சமூகத்தின்
விமோசனத்திற்காக
நான் பேசினால்
என்னை ஒரு தீவிர
மதவாதியாக,
கத்Nhலிக்க
மத்தியில்
அடையாளப்படுத்த
முயற்சிக்கின்றனர். உண்மையினை ஆதார பூர்வமாக நான் எடுத்துரைத்தமைக்கு
மன்னிப்பு
கோர வேண்டும
என்று சில் கூவித்
திரிகின்றனர்.
ஒரு மனிதனுக்கு
இன்னொரு மனிதன் தவறு செய்தால்
அதனை பாதிக்க்ப்பட்டவர்
மன்னிக்காத
வரை இறைவன்
அவனை மன்னிக்கமாட்டான்
என்பதை நாம்தெளிவாக
ஏற்றுள்ளோம்.
ஒட்டு மொத்த
வடமாகாண முஸ்லிம்களுக்கு
எதிராக எடுக்கப்படும்
எந்த நடவடிக்கையாக
இருந்தாலும்
அதனை தட்டிக்கேட்க
வேண்டியது
எனது பொறுப்பாகுமம். அது அரசியல் உயர் மட்டமாக
இருந்தால்
என்ன, ஏனையவர்களாக
இருந்தால்
என்ன என
தெரிவித்
அமைச்சர்
நான் எதற்காக
எவரிடம் மன்னிப்புக்
கோரவேண்டும்...மன்னிப்பு
கோர மாட்டேன்
என்பதை தெரிவித்துக்
கொள்ளவிரும்புகின்றேன்.
இந்த நாட்டில்
ஆயுத ரீதியாக
போராட்டங்களை
நம்பி தம்மையும்
அழித்து தமது தமிழ்
சமூகத்தின்
எத்தனையோ
உயிர்களையும்,
உடமைகளையும்
இல்லாமல்
ஆக்கி அந்த எதிர்பாரப்புகiளை
அடையமுடியாமல்
போன வரலாறு
இன்று இருக்கின்றது.
ஆயுத போராட்டத்தில்
இருந்த புலிகளுக்கு
எதிராக வடக்கு முஸ்லிம்கள்
எந்த காட்டிக்
கொடுப்புகளையும்
செய்யவில்லை.
அவர்களின் கட்டுப்பாட்டில்
இருந்த போது வடக்கில்
விரும்பியோ,
விரும்பாமலோ
சில விடயங்களை
செய்தாக வேண்டியிருந்தது.
அப்படிப்பட்ட முஸ்லிம்
சமூகத்தைக்
கூட வெளியேற்றிய
வரலாறு உள்ளது.
இன்று அந்த
நிலை மாற்றப்பட்டு
தமிழர்கள்,
முஸ்லிம்கள்
அவர்களது
பிரதேசங்களில்
வாழக்கூடிய
நிலையேற்பட்டுள்ளது. இருந்த
போதும், முஸ்லிம்கள்
மீள்குடியேற
செல்லும்
போது, மன்னார்
ஆயர் அவ்ரகள்
ஜனாதிபதிக்கு
கடிதம் எழுதி எமது
மீள்குடியேற்றத்தை
தடுக்கும்
வேலையினை
செய்வது என்ன நியாயத்தில்
உள்ளது. தமிழ் சகோதரி
ஒருவர், தமது காணியினை
முஸ்லிம்
சகோதரருக்கு
விற்பனை செய்வதற்கு
தயாரான போது, அந்த
பெண்ணை அழைத்து நீ காணியினை
முஸ்லிம்களுக்கு
விற்றால்
உனக்கு சாபம் இடுவேன்
என மன்னார்
ஆயர் கூறியதை
கண்ணீருடன்
அந்த பெண்
எம்மிடம்
கூறினார்.
என்னை பொறுத்த
வரையில் என்னில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம்
இல்லை, பதவிகள், பணங்களையும்
தருபவன் அல்லாஹ், அவன் நாடினாலன்றி
எதுவும் இடம் பெறாது
என்ற அசையாத
நம்பிக்கை
கொண்டவர்கள்
நாங்கள். இந்த உலகை விட்டு பிரியும் போது நாம்
வெறும் கபன் துணியுடன்
தான் செல்வோம்
என்பதை தெளிவாக ஏற்றுக் கொண்ட சமூகத்தை
சாரந்தவன்
நான். அந்த வகையில்
எனது வடமாகாண
முஸ்லிம்கள்
அகதி முகாம்களில்
சில பிரதேசங்களில்
யாசகம் கேட்டு தங்களுடைய
வாழ்க்ழகையை
கொண்டும்
எனது மாகாண
முஸ்லிம்களை
கானுகின்ற
போது மனம்
வெதும்பி
வேதனைப்படுகின்றேன்.
அந்த மக்கள்
வாழ்ந்த பூமியில் அவர்களை வாழ்விட்டிருந்தால்
இந்த நிலை
தோன்றியிருக்காது.
வேளை
தமிழரசுக்கட்சியின்;
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
குறிப்பாக
மாவை சேனாதி
ராஜா போன்றவர்கள்
முஸ்லிம்களை
மீள்குடியேற
வருமாறு அழைப்புவிடுத்துள்ளார். அதற்கு நான் நன்றி கூற
கடமைப்பட்டுள்ளேன்.
உங்களைப் போன்ற நல்லவர்கள்
இருப்பதை
எண்ணி மகிழ்ச்சி
அடைகின்றேன்.
ஆனால் துரதிஷ்டம்
வடமாகாண முஸ்லிம்கள்
அவர்களது
தாயக பூமியில்
மீள்குடியேற
வந்தால், அதனை வித்தியாசமாக
சித்தரித்து
முஸ்லிம்கள்
காணிகளை அபகரிக்கின்றனர்
என்று முறைப்பாடு
செய்வதை கானுகின்றோம்.
இலங்கை முஸ்லிம்களுக்கான
தனியான ஊடகமொன்றில்லை.
இருந்திருந்தால் எமது தரப்பு நியாயங்களை
நாம் வெளிப்படுத்த
முடியும்.
வடக்கு முஸ்லிம்களின
மீள்குடியேற்றுவது
தொடர்பாகவும்,
எமக்கு எதிராக முன்னெடுக்கப்டுகின்ற
சதி திட்டங்களை
ஊடகங்களுக்கு
தெரியப்படுத்தினால்
சில தமிழ்
ஊடகங்கள்
அதனை கவனத்தில்
எடுக்காது
பிழையான செய்திகளை
முக்கியப்படுத்தி
வெளியிடும்
கலாசாரத்ததை
தான் காண
முடிகின்றது.
இப்படிப்பட்ட ஊடகங்களில்
பணியாற்றும்
முஸ்லிம்கள்
நிறுவனத்தின்
கட்டுப்பாட்டுக்குள்
இருக்க வேண்டிய நிலை இல்லாதவிடத்து
அங்கிருந்து
அவர்கள் வெளியேற்றப்படுவர்.
எனவே மனதில்
நேர்மையான
சிந்தனையினை
கொண்டிருந்தாலும்,
அவர்களால்
எதுவும் செய்ய முடியாத
நிiலையினையே
காணுகின்றோம்.
வடக்கில் முஸ்லிம்களின்
மீள்குடியேற்றம்
முழுமையாக
நடை பெறாதபட்சத்தில்
இந்த நாட்டில்
எந்த ஒரு
நிலையான தீர்வை எவராலும் பெற்றுக் கொள்ள முடியாது
என்பதை நாம் சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம்.
தமிழ் மக்களின்
பிரச்சினை
தீர்கக்ப்பட்டு
அவர்களுக்கா
தீர்வு வழங்கப்பட
வேண்டும்.
அந்;த
தீர்வினை
பெற்றுக்
கொடுக்கும்
ஜனநாயக போரட்டத்திற்கு
முஸ்லிம்கள
உறுதுனையாக
இருப்பார்கள்.
அதே போன்று
அல்லலுறும்
தமிழ் தலைமைகள் இதய சுத்தியுடன்
செயற்பட முன்வரவேண்டும். இன்று வடக்கில் பெரும்பான்மை
மக்களின்
குடியேற்றம்
இடம் பெறுவதாகவும்,
பாதுகாப்பு
வலயங்கள்
மற்றும் இரானுவத்தின
அதிகரித்த
பிரசன்னம்
குறித்து
பேசுபவர்கள்,
அதற்கு எதிராக செயற்பட முஸ்லிம்களைம்
அழைக்கின்றனர்.
முஸ்லிம்கள் மீள்குடியேற
செல்லும்
போது அரசியல்
தலைமைகளும்,
இனவாத சிந்தனைக்
கொண்ட அரச அதிகாரிகள்
சிலரும், மத தலைவர்கள்
சிலரும் செயற்படும்
போது தமிழ்
பேசும் மக்களாகிய
முஸ்லிம்கள்
எவ்வாறு நம்பிக்கை
கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை
தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில்
இடம் பெயரந்த
மக்கள் தமது தேவைகளை
பெறுகின்ற
போது அதிலும்
பிளவுகளை
தோற்றுவிக்க
அரச சார்பற்ற
நிறுவனங்களும்,
யூஎன்எச்சீஆர்
அமைப்பும்
செயற்பட்டது. புதிய, பழைய அகதிகள் என்று பிரித்து
வருகின்ற
உதவிகளை புதிதாக இடம் பெயர்ந்தவர்களுககும்,
1990 ஆம் ஆண்டு
இடம் பெயர்ந்த
மக்களுக்கு
எதையும் வழங்காத நிலை உருவாக்கப்பட்டது.
இது அப்பட்டமான
மனித உரிமை
மீறலாகும். இது குறித்து
ஜெனீவாவில்
உள்ள யூஎன்எச்சீஆர்
தலைமையகத்துக்கு
முறைப்பாடு
செய்தேன்.
அதே போல்
அமைச்சரவையில்
இது குறித்து
எனது கடுமாயன
எதிர்ப்பை
தெரிவித்ததுடன்,
இதனை நடை
முறைப்டுத்தினால்
எமது மக்களின்
உரிமையை நீதிமன்றின்
மூலம் உறுதி செய்ய
வேண்டியேற்படும்
என்பதை தெளிவாக உரியவர்களுக்கு
சொல்லியிருக்கின்றேன்.
இநத அரசாங்கம்
வடமாகாண முஸ்லிம்களின்
மீள்குடிறே;றம் தொடர்பில்
காட்டும்
அக்கறை குறித்து மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்
இந்த நிலை
இவ்வாறு தொட முடியாது.
அரசாங்கம் இது குறித்து அவசரமான சில செயற்பாடுகளை
வேகமாக செய்ய வேண்டும்.
இவ்வாறு இதனது செய்றபாடுகள்
மந்த கதியில்
இருக்குமெனில்
எமது கட்சி
சில அவசர
தீர்மானங்களை
எடுக்க நேரிடும் என்பதை சுட்டிக்காட்ட
விரும்புகின்றேன்.
தம்புள்ள பள்ளிவாசல்
விடயத்தில்
இலங்கை வாழ் முஸ்லிம்கள்
எமது தலைமைத்துவமான
ஜம்மியத்துல்
உலமாவின்
தீர்மானங்களுக்கு
செவிசாய்த்து
செயற்பட்டது. இதன் மூலம் நாம் எமது
செயற்பாடுகளை
நல்ல முறையில்
முன்னெடுக்க
முடிந்தது.
அதே போன்று
ஜமிய்யத்துல்
உலமா, வடமாகாண
முஸ்லிம்களின்
மீள்குடியேற்றத்தில்
காத்திரமான
தமது பங்கை
அளிக்க வேண்டும் என்ற கௌரவமான
வேண்டுகோளையும்
முன்வைக்க
விரும்புகின்றேன்.
இந்த நூல் தொகுப்பு மிகவும் முக்கியமானது,
எமது சமூகத்தின்
வேதனைகள்,
சோதனைகள்
வெளிக் கொண்டுவருகின்ற
போது தான்
அதனது பெறுமானத்தை
கண்டு கொள்ளலாம்
என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
கூறினார்.
இந்த நிகழ்வில்
தமிழரசுக்கட்சியின்
பாராளுமன்ற
உறுப்பினரும்,
பொதுச் செயலாளருமான
மாவை சேனாதி
ராஜா, உட்பட
பலரும் கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியினை
அமைச்சர்
றிசாத் பதியுதீனிடத்தில்
இருந்து புரவலர் ஹாசிம் ஒமர் பெற்றுக்
கொண்டார்.
மூத்த இலக்கிய
படைப்பாளிகளுக்கு
விருதுகள்
வழங்கி கொளரவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.