Contact us at: sooddram@gmail.com

 

ராஜீவ், ஷாருக்கான் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்று இந்தியாவை விமர்சிப்பது வேடிக்கை

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்புப் போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கை அமைச்சர்களுக்கு, இந்திய-தமிழக அரசுகள் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், தமிழக கட்சிகளை வன்முறையாளர்கள் என்றும் குறை கூறி ஜாதிக ஹெல உறுமய உட்பட சில இலங்கைக் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பொங்கி எழுந்துள்ளார்கள். ஹெல உறுமய, தேசப்பற்று தேசிய இயக்கம் மற்றும் விமல் வீரவன்ச கட்சி ஆகியவை, தாம் ஏதோ நாகரிகம் மிக்க கண்ணியமான அரசியல் செய்கின்ற கட்சிகள் போல் கருத்துகள் தெரிவிப்பதைப் பார்த்து உலகமே கைகொட்டிச் சிரிக்கின்றது.

இந்த வரிசையில் இப்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற கொரடா ஜோன் அமரதுங்கவும் சேர்ந்துள்ளார். இதன்மூலம், இன்று ஆளுகின்ற அரசு சார்பு அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தில் கிடைக்கும் மரியாதை, எதிர்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசியல்வாதிகளுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மரியாதை வழங்கி வருவது சம்பந்தமான இவர்களது கருத்துகளை, வரலாற்றுடன் ஒப்பிட்டு பார்த்தால், சாத்தான் ஓதும் வேதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜனாதிபதி ஜயவர்தன முன்னிலையிலேயே இராணுவ அணிவகுப்பின்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்து அவரைக் கொலை செய்ய முயற்சி கொழும்பில் நடந்தது. தனது கெட்டிக்கார மெய்பாதுகாவலரின் புண்ணியத்தால் ராஜீவ் அன்று தப்பினார். பின்னாளில் புலிகளால் ராஜீவ் கொலை செய்யபட்டதால் இந்த சம்பவம் இன்று மறக்கடிக்கபட்டாலும், அது இங்கே கொழும்பில் நடந்தது என்ற உண்மை ஒருபோதும் மறைக்கப்பட முடியாதது.

அதேபோல், இந்திய-இலங்கை நாடுகளில் பிரபலம் பெற்றுள்ள நடிகர் ஷாருக் கான், இலங்கை வந்தபோது அவரது வருகைக்கு எதிராக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம் செய்தது. அந்த ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்து, ஷாருக் கானின் கலை நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் ஐந்து அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஷாருக் கான் ஓடியே போய் விட்டார். இனிமேல் கோடி. கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் அவர், இலங்கை வருவார் என நான் நம்பவில்லை.

இலங்கை வந்த மேற்குலக நாடுகளின் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் விமல் வீரவன்ச கட்சியினர் பல்வேறு தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது அனைவருக்கும் தெரியும்.

இவர்கள் எவரையும் எதுவும் செய்யலாம். ஆனால் இவர்களுக்கு எதிராக எவரும், எதுவும் செய்யவும், சொல்லவும் கூடாது. இந்த கோமாளிக் கருத்தை தமிழகமும், இந்தியாவும், உலகமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

உண்மையில் இந்தியா செல்லும் இலங்கை அமைச்சர்களுக்கு, அந்நாட்டு காவல்துறை முழுமையான பாதுகாப்பு வழங்கி வருகிறது. சமீபத்தில் அங்கு போய் மரியாதை வாங்கி வந்த, பிரதி அமைச்சர் ரெஜினோல்ட் குரே இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இலங்கையுடன் ஒப்பிட்டால் இந்தியா ஊடக சுதந்திரம்கொண்ட ஒரு ஜனநாயக நாடு. எனவே, இந்தியாவில் அந்நாட்டு ஜனநாயக வரையறைகளுக்கு உட்பட்ட ஆர்ப்பாட்டங்களை அந்நாட்டு அரசுகளால் நிறுத்த முடியும் என நான் நம்பவில்லை.

இலங்கை இனப்பிரச்சினை இன்று இலங்கைக் கரைகளை கடந்து ரொம்ப நாளாகி விட்டது. இதை இந்த இனவாத முட்டாள்கள் உணர வேண்டும். உண்மையில், இவர்கள் இங்கே தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தினால், அங்கே அவை தானாகவே நின்று போய் விடும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com