Contact us at: sooddram@gmail.com

 

ஒரு மாத காலத்தில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் வாய்ப்பு

ஒரு மாத காலத்துக்குள் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அபிவிருத்தி, மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், 20 அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 300 பேர் நேரடி கள பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட விரிவாக்கல் செயற்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் ஒரு மாத காலத்திற்குள் கிழக்கு மாகாண சபை கலைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை தேர்தல் விடயத்தில் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருப்பதை போன்று தமிழ் மக்க ளும் விழிப்பாக இருக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபையை கலை த்து விரைவாக கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டு மென ஜனாதிபதி உறுதியாக முடிவெடுத்துள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் நிச்சயமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பே ஆட்சியமைக்கும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ் லிம் காங்கிரஸ் அனைத்து கட்சிக ளையும் சேர்த்து போட்டியிட வேண்டுமென நாங்கள் தீர்மானித்து ள்ளோம்.

இந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் விடயத்தில் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருப் பதை போன்று தமிழ் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக என்றுமில்லாத வாறு பாரிய அபிவிருத்தி மக்கள் நலன் சார் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

அந்த வகையில் நாளை 15ம் திகதி 20 அரசாங்க அமைச்சர்கள், அர சாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பணியாளர்களுமாக மொத்தம் 300 பேர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

மட்டக்களப்புக்கு வருகை தரும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறு ப்பினர்கள் மட்டக்களப்பு மற்றும் கல்குடா தொகுதிகளில் நாளை 16ம் திகதியும் மறுநாள் 17ம் திகதியும் நேரடியாக கிராமங்களுக்கு கால் நடையாக சென்று மக்களின் பிரச்சி னைகள் கடந்த கால செயற்பாடுகள் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர் பாக கேட்டறிந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வேலைத்திட்டங்கள் தொடர் பான ஒரு ஆய்வை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலை மையில் இவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைப்பா ளராக விளையாட்டுத்துறை அமை ச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எமது கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு இணைப்பாளர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத் திய குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ் வொருவரையும் நாங்கள் மாவட்ட இணைப்பாளர்களாக நியமித்திருக் கின்றோம்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மகிந்தானந்த அளுத் கமகே இணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவரின் தலைமையில் மாவட்டத் தில் பல்வேறு பகுதிக ளுக்கும் அமை ச்சர்கள் பாராளு மன்ற உறுப்பினர்கள் சென்று வேலைத்திட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

சனிக்கிழமை காலை மட்டக்க ளப்பு மாவட்டத்தில் இவர்கள் 500 பாடசாலை மாணவர்களுக்கு துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைக்க வுள்ளனர். தேசத்திற்கு மகுடம்கண்காட்சி இவ்வாண்டு கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திகளுக்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு வெபர் மைதானம் தேசிய மைதான மாக புனரமைக்கப்படவுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அந்த வேலைகளும் ஓரிரு மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியாக விரிவாக்கல் செய் யும் திட்டம் தொடர்ந்து எமது கட்சி யினால் முன்னெடுக்கப்பட்டு வரு கின்றது எனவும் அவர் மேலும் தெரி வித்தார். இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் பிரிவு அமைப்பாளர் ருத்மலர் ஞான பாஸ்கரன், பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com