Contact us at: sooddram@gmail.com

 

ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் -சோனியா காந்தி அறிவிப்பு

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய முற் போக்கு கூட்டணியின் வேட்பாள ராக மத்திய நிதியமைச்சர் பிர ணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். இதுதொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பை, தில்லியில் வெள்ளியன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி களின் ஆலோசனைக் கூட்டத்திற் குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்துக் கட்சி களுக்கும் வேண்டுகோள் விடுத் துள்ள சோனியா காந்தி, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி பிர ணாப் முகர்ஜியை குடியரசுத் தலை வராக தேர்ந்தெடுக்க ஒத்தக்கருத் தை எட்ட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 19ந் தேதி நடைபெறவுள் ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கடந்த ஒருமாத காலமாக பரபரப்பான அரசியல் ஆலோசனைகள் நடந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் குறிப்பாக, கடந்த இரண்டு நாட்க ளாக ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் கட்சியின் தலைவியும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தரப் பில் பிரணாப் முகர்ஜியை நிறுத்த திட்டமிட்டிருப்பதாக சோனியா காந்தி தெரிவித்தும், தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் புக்கு எதிராக கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கினார். அரசி யல் நாகரிகம் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பிரதமர் மன் மோகன் சிங் பெயரையும், முன் னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரையும் சோம்நாத் சட் டர்ஜியின் பெயரையும் முன் மொழிந்தார். சமாஜ்வாதி கட்சி யையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.

ஆனால், அடுத்த நாளே காட் சிகள் மாறின.

மம்தாவின் அரசியல் அநாகரி கத்தை காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்துக்கட்சிகளும் நிராகரித் தன.
இதனால் ஆத்திரமடைந்த மம்தா, காங்கிரஸ் தரப்பில் பிர ணாப் அறிவிக்கப்பட்டால் நான் அப்துல் கலாமை நிறுத்துவேன் என்று பேட்டியளித்தார்.

இந்நிலையில், தேசிய அரசியல் அரங்கில் மம்தாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தால் தானும் தனிமைப்படுவது உறுதி என்பதை உணர்ந்துகொண்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், தனது முடிவை மாற்றிக் கொண்டு காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவித்தார்.

காங்கிரஸ் முதலில் வேட்பா ளரை அறிவிக்கட்டும் என்று இட துசாரிக் கட்சிகளும் கூறியிருந்தன.

பிரணாப் முகர்ஜி

ஆளும் கூட்டணியிலுள்ள திமுக உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற பல கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற பின்னணியில் வெள்ளியன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஐக் கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சுமார் ஒருமணிநேரம் நடை பெற்ற இந்தக்கூட்டத்தில், குடியர சுத்தலைவர் பதவிக்கான வேட்பா ளராக பிரணாப் முகர்ஜியை நிறுத் தலாம் என்று தமது கட்சி தீர்மா னித்திருப்பதாக ஆலோசனையை அவர் முன்மொழிந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்வின் பெருமிதங்கள் குறித்து சோனியா காந்தி இக்கூட்டத்தில் ஒரு அறிக் கையை வாசித்தார். நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு இருக் கிறது என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கரவோசை எழுப்பி பிரணாப் முகர்ஜியை ஏக மனதாக ஏற்றுக்கொள்வதாக தெரி வித்தனர்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்ப ரம், திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் வேட்பா ளர் பிரணாப் முகர்ஜிக்கும், பிரத மர் மன்மோகன் சிங்கிற்கும், சோனியா காந்திக்கும் பொன்னா டை போர்த்தி தங்களது வாழ்த்துக் களைத் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பிரதமர் மன் மோகன் சிங், தேசியவாத காங்கி ரஸ் தலைவர்கள் சரத்பவார், பிரபுல் படேல், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித் சிங், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசிய மாநாட் டுக்கட்சித் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சருமான உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, பவன்குமார் பன்சால், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டணியின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், கூட்டத்தை புறக்கணித்தது என் பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கூட்டத்திற்குப்பின்னர், காங் கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி செய்தியா ளர்களைச் சந்தித்தார்.
அப்போது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்ற சோனியா காந்தியின் அறிவிப்பை அவர் வெளியிட்டார். பிரணாப் முகர்ஜியை அனைத்துக்கட்சிக ளும் ஆதரிக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். சமாஜ்வாதி கட்சி தனது ஆதரவை ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாகக் கூறிய அவர், பிரணாப்பை மம்தா பானர்ஜி நிராகரிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

77 வயதான பிரணாப் முகர்ஜி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந் தவர் நீண்ட கால நாடாளுமன்ற வாதியான அவர், நீண்டகாலமா கவே காங்கிரஸ் கட்சியில்நம்பர் 2’ என்ற இடத்தை வகித்து வருகிறார். கடந்த
8 ஆண்டுகாலமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிர தமருக்கு அடுத்தபடியாக முக்கியப் பொறுப்புகளை ஆற்றி வருகிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com