|
||||
|
உத்தரகாண்ட்
5000 பேர்
மரணம்?
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட
உத்தரகண்ட்
மாநிலத்தில்
சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம்
என்று அஞ்சப்படுவதாக
மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்
கடந்த ஒரு வாரத்துக்கு
முன்பு பெய்த கன
மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டு
சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கி
ஆயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள்
இறந்திருக்கலாம்
என்று கருதப்பட்டது.
இது குறித்து
உத்தரகண்ட்
மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் யஷ்பால் ஆர்யா, டேராடூனில்
ஞாயிற்றுக்கிழமை
செய்தியாளர்களிடம்
கூறியது.
பிரளயம் போன்ற இந்தப் பேரழிவால்
மிகப்பெரிய
சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கேதாரநாத்
பள்ளத்தாக்கு
மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும்
நிலச்சரிவால்,
குறைந்தது
5,000 பேர் இறந்திருக்கலாம்
என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்
குவிந்திருக்கும்
இடிபாடுகளுக்கு
அடியில் உள்ள உடல்களை
மீட்கும்
பணி இன்னும்
தொடங்கப்பட
வில்லை. அந்தப் பணி தொடங்க சிறிது காலம் பிடிக்கும்
என்றார் யஷ்பால் ஆர்யா. எனினும் உயிரிழந்தோர்
எண்ணிக்கை
குறித்த சரியான எண்ணிக்கையை
அவரால் வழங்க இயலவில்லை.
இதனிடையே, கேதாரநாத்,
பத்ரிநாத்,
கங்கோத்ரி
மற்றும் யமுனோத்ரி
ஆகிய புனிதத்
தலங்கள் அமைந்துள்ள
பகுதிகளில்
ஏராளமான யாத்ரிகர்கள்
வெள்ளத்துக்கு
நடுவே சிக்கியுள்ளனர். இராணுவம், துணை இராணுவப் படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள்,
40 ஹெலிகொப்டர்களுடன்
மீட்புப்
பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 80 ஆயிரம்
யாத்ரிகர்கள்
மீட்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் லேசாக மழை
பெய்ததால்
மீட்புப்
பணி பாதிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்குப்
பிறகு மழை நின்றதால்
மீட்புப்
பணி தொடர்ந்து
நடைபெற்றதில்
3 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர்
மீட்கப்பட்டதாக
அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இது குறித்து
இந்திய திபெத் எல்லைப்புற
காவல் படை டிஐஜி
அமித் பிரசாத் செய்தியாளர்களிடம்
கூறுகையில்,
"திங்கட்
கிழமை மீண்டும் மழை பெய்ய
வாய்ப்புள்ளதால்
ஹெலிகொப்டர்
மூலம் யாத்திரிகர்களை
மீட்கும்
பணி பாதிக்கப்பட
வாய்ப்பு
உள்ளது. எனவே, மாற்று
ஏற்பாடாக
பத்ரிநாத்
பகுதியில்
200 வீரர்கள்
நடைபாதை அமைக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளனர்
என்றார்.
கேதாரநாத் பகுதியில்
சிக்கியவர்களை
மீட்கும்
பணி முடிந்து
விட்டது. பத்ரிநாத்
உட்பட மூன்று பகுதிகளில்
சுமார் 19,000 பேர் சிக்கி
உள்ளதாகவும்,
அவர்களை மீட்கும் பணி முடுக்கி
விடப்பட்டுள்ளதாகவும்
பேரிடர் மேலாண்மை அமைப்பின்
அதிகாரிகள்
தெரிவித்தனர்.
விமானப்படை அதிகாரி
ராஜேஷ் இஸர் கூறியது:
உத்தரகண்ட்
மாநிலத்தில்
வெள்ளத்தில்
சிக்கியவர்களை
மீட்கும்
பணியில் விமானப்படைக்குச்
சொந்தமான
30 ஹெலிகொப்டர்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விமானப்படை வரலாற்றில்,
ஹெலிகொப்டர்
மூலம் மேற்கொள்ளப்பட்ட
மிகப்பெரிய
மீட்புப்
பணி இதுதான்.
மீட்புப் பணி முடிய இன்னும்
ஒரு வாரம்
ஆகும் என்றார்.
நிவாரண நிதிக்கு
பிரணாப் ஒரு மாத
சம்பளம்: உத்தரகண்ட்
மாநிலத்தில்
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்
களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக
தமது ஒரு
மாத ஊதியத்தை
(ரூ. 1.5 இலட்சம்)
வழங்குவதாக
குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
பகுதியில்
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக
ரூ.
1 கோடி
வழங்கப்படும்
என அசாம்
மாநில முதல்வர் தருண் கோகோய்
உத்தரகண்ட்
முதல்வர்
விஜய் பகுகுணாவிடம்
கூறியுள்ளார்.
நிவாரணப் பணிகளுக்காக
ரூ.
3 இலட்சம்
நிதியுதவி
வழங்குவதாக
மத்திய திபெத் நிர்வாகம்
வெளியிட்டுள்ள
அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
உத்தரகண்ட்
மாநிலத்தில்
நீண்டகால
அடிப்படையில்
மறுசீரமைப்புப்
பணிகளை மேற்கொள்வது
தொடர்பாக
அரசு ஆலோசித்து
வருவதாக காங்கிரஸ்
கட்சியின்
பொதுச் செயலாளர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
முன்னதாக வெள்ளம்
பாதித்த பகுதிகளை சோனி பார்வையிட்டார்.
அவருடன் கட்சியின்
பொருளாளர்
மோதிலால்
வோராவும்,
ஹரியாணா முதல்வர் பூபிந்தர்
சிங் ஹ¥டாவும்
சென்றிருந்தனர்.
மீட்புப் பணிகள்
முடிய இரு
வாரங்களாகும்
மாநில முதல்வர் விஜய் பகுகுணா
கூறுகையில்,
"சாலைகள்
மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால்
வெள்ளத்தில்
சிக்கியவர்கள்
அனைவரையும்
மீட்பதற்கு
இன்னும் 15 நாட்கள் ஆகும்.
அதேநேரம், ஆங்காங்கே
சிக்கி உள்ளவர்களுக்குத்
தேவையான உணவு மற்றும்
குடிநீர்
வழங்கப்பட்டு
வருவதால்
அவர்களது
உயிருக்கு
ஆபத்து இல்லை. வெள்ளத்தில் சிக்கி
ஏராளமானோர்
உயிரிழந்தது
வருத்தமளிக்கிறது.
புனிதத் தலமான கேதாரநாத்
கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த
2 ஆண்டுகளுக்கு
கேதாரநாத்
கோவில் மூடப்பட்டிருக்கும்.
மாநிலம் முழுவதும்
உட்கட்டமைப்பு
வசதிகளை மீண்டும் புதுப்பிப்பதற்கு
நீண்ட காலம் ஆகும்"
என்றார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பின்னர்
மாநில முதல்வர் பகுகுணாவை
சந்தித்துப்
பேசினார். அப்போது, மறுசீரமைப்புப்
பணிகளுக்குத்
தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகத்
தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |