Contact us at: sooddram@gmail.com

 

மகளின் சாவுக்கு நீதி வேண்டும்

கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்

எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 14ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதவான் மீண்டும் வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார். இன்றைய விசாரணையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மன்றில் சாட்சியமளித்திருந்தார்.

வழக்கு விசாரணைகளின் பின்னர் கொன்சலிற்றாவின் பெற்றோர்களிடம் இன்றைய வழக்கு விசாரணை தொடர்பாக கேட்ட போது, இன்று எங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை பொலிசாரே சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளில் எமக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என தற்போது எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எமது மகளின் மறைவுக்கு பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது தானாக முன்வந்த யாழில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவர் தான் இந்த வழக்கில் ஆஜராகி உங்களுக்கு நீதியை பெற்று தருவேன் என்று கூறினார். அதனை நாங்கள் நம்பி அவரை ஏற்றுகொண்டோம். அதன் பின்னர் அவர் கடந்த இரண்டு தவணைகளுக்கும் மன்றுக்கு சமூகமளிக்க வில்லை. நாம் அவரை தொடர்பு கொண்டபோது தனக்கு வேறு வழக்கு இருபதாகவும் தான் இந்த வழக்குக்கு சட்ட தரணியையும் ஒழுங்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரால் ஒழுங்கு செய்யப்பட சட்டதரணியே கடந்த தவணைகளில் எமக்காக மன்றில் ஆஜராகியிருன்தனர். குறித்த சட்டத்தரணி எமக்காக வாதாடுவது தொடர்பில் எமக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த தவணையின் போது வழக்கு விசாரணை முடிந்த பின்னர் எம்மை அழைத்த அவர் ஊடகங்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக எதனையும் தெரிவிக்க வேண்டாம் என மிரட்டும் பாணியில் எமக்கு கூறி இருந்தார். அது மட்டுமின்றி நீங்கள் இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும் அதன் பின்னர் எதிராளிகள் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்ய கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

அதனை நம்பி நாம் கடந்த தவணை விசாரணைகள் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் நீதிமன்றின் மற்றைய வாசலால் வெளியேறி சென்றோம். அதன் பின்னர் நேற்று இன்றைய தினம் வழக்கு இருக்கிறது நீங்கள் நாளை நீதிமன்றில் எமக்காக ஆஜராகுவீர்கள் தானே என குறித்த பிரபல சட்டத்தரணியுடன் தொடர்பு கொண்டபோது தனக்கு வழக்கு இருபதாகவும் தான் முதலில் ஒழுங்கு செய்த சட்டத்தரணி இன்றும் உங்களுக்காக ஆஜர் ஆவார் எனவும் தெரிவித்தார்.

அவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி மீது எமக்கு நம்பிக்கை இல்லாதா காரணத்தால் நாம் வேறு ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்திருந்தோம். அதனை அடுத்து அவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி ஏன் வேறு ஒருவரை ஒழுங்கு செய்தீர்கள் என எம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் எமக்கு அவர் மீது இன்னும் அதிகமாக நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த தவணை வழக்கு விசாரணைகளின்போது கொன்சலிற்றாவின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாக அறிக்கை சமர்பிக்கும் படி பொலிசாருக்கு நீதவான் உத்தரவு இட்டு இருந்தார். அதன் பிரகாகரம் இன்றைய தினம் பொலிசாரால் கொன்சலிற்றாவின் இறப்புக்கு முன்னரான ஒரு மாத கால தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அது தொடர்பில் கொன்சலிற்றாவின் பெற்றோரால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி கொன்சலிற்றாவின் இறப்புக்கு முன்னரான 3 மாத கால தொலைபேசி அழைப்பு தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்பிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏனெனில் கொன்சலிற்றாவின் இறப்புக்கு ஒரு மாத காலத்திற்கு முதலே கொன்சலிற்றாவின் பெற்றோரால் அவருடைய தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. அதன் பிறகு அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வரவில்லை என கூறியதை ஏற்றுக்கொண்ட நீதவான் கடந்த 3 மாத கால தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவு இட்டார். கொன்சலிற்றாவின் இறப்புக்கு யாழ். ஆயர் இல்லத்தை சேர்ந்த இரு பாதிரிமார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(அத தெரண - நிருபர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com