Contact us at: sooddram@gmail.com

 

ஈராக் இஸ்லாமிய ஆயுததாரிகள் பக்தாத் வரை முன்னேற முயற்சி

ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூல் ஈராக் இஸ்லாமிய தேசம் ஆயுதக் குழுவிடம் வீழ்ந்த நிலையில் நாட்டின் தலைநகர் பக்தாத் உட்பட மேலும் பல நகர்கள் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. "எமது சீற்றம் தொடரும் நாம் மேலும் முன்னேறுவோம்" என்று இசிஸ் என்று அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையின் பேச்சாளர் அபு+ முஹம்மத் அல் அத்னனி அந்த குழுவின் இணையதளம் ஊடே குறிப்பிட்டுள்ளார். "இந்த படை யெடுப்பு பக்தாத் மற்றும் கர்பலா வரை செல்லும். அதற்கு தயாராகவே இருக்கி றோம்" என்றார்.எனினும் 17 நிமிடங்கள் நீடிக்கும் ஒலி நாடா செய்தி குறித்து சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. நீங்கள் விடுதலை செய்த நிலத்தின் ஒரு கை அகல இடைவெளியைக் கூட விட்டுக்கொடுக்க வேண்டாம்" என்று அந்த ஒலிநாடா செய்தியில் இசிஸ் போராளி களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஈராக் முன்னாள் தலைவர் சதாம் ஹ{ஸைனின் சொந்த ஊரான திக்ரிட் நகரும் இஸ்லாமிய ஆயுததாரி களிடம் வீழ்ந்துவிட்டதாக அந்நாட்டு அரச ஊடகமான ஈராக்கியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய ஆயுததாரிகளின் முன்னேற்றம் பிராந்தித் தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உள்நாட்டில் நிலவும் 'pயா, சுன்னி மதப் பிரிவினை வன்முறைகள் மற்றும் அயல் நாடான சிரியாவில் தொடரும் உள்நாட்டு யுத்தம் ஆகியன ஈராக்கின் தற்போதைய பதற்றத்திற்கு முக்கிய காரணம் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் அமெரிக்க பயிற்சியில் உருவாக் கப்பட்ட ஈராக் பாதுகாப்பு பிரிவினரை ஆயுதக்குழுவினர் இலகுவாக பின்வாங்கச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்லாமிய ஆயுததாரி களுக்கு எதிராக வான்தாக்குதலை நடத்த ஈராக் அரசு அமெரிக்காவிடம் உதவி நாடியுள்ளது. அமெரிக்கா ஈராக்கிற்கு பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் உபகரணகள் என்று 15 பில்லியன் டொலருக்கு பாதுகாப்பு உதவி களை வழங்கியுள்ளது.

எனினும் தற்போதைய நிலைமை மோச மடைந்திருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. ஈராக்கிற்கு மேலும் உதவிகளை வழங்குவது குறித்து அது ஆலோசித்து வருகிறது.

ஈராக் இஸ்லாமிய தேசம் படையினர் வடக்கு நகரங்களான மொசூல் மற்றும் திக்ரிட் மீது தாக்குதலை ஆரம்பித்தபோது அங்கிருந்த இராணுவத்தினர் ஆயுதத்தையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது ஈராக் படையினரின் பலவீனத்தை காட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மொசூல் நகர் இசிஸ் படை யினரின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 1.6 மில்லியம் மக்கள் தொகை கொண்ட சொசூல் நகர் சுன்னி முஸ்லிம்களை பெரும் பான்மையாகக் கொண்ட பகுதியாகும். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நகர் இசிஸின் கட்டுப்பாட்டுக்கு வந்த பின் அங்குள்ள பல பொலிஸ் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு நகர சிறையில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தவிர நகரின் சர்வதேச விமானநிலையமும் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

இதனையடுத்து நகரில் இருக்கும் இராணு வத்தினர் உடைகளை மாற்றிக்கொண்டு ஆயுதம் மற்றும் உபகரணங்களை கை விட்டுவிட்டு நகரை விட்டு தப்பிச் சென் றுள்ளனர்.

மோதலை அடுத்து மொசூல் நகரில் இருந்து அரை மில்லியன் மக்கள் வெளி யேறியிருப்பதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு கடந்த புதன்கிழமை குறிப்பிட்டிருந்தது. உடைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு நகரைவிட்டு வெளியேறி இருக்கும் மக்களுக்கான அடிப்படை உத விகள் கோரப்பட்டுள்ளன.

இதனிடையே மொசூல் நகரின் துருக்கி துணைத்தூதரகத்தை சுற்றி வளைத்திருக்கும் இசிஸ் படையினர் இராஜதந்திரிகள் உட்பட 48 பேரை பிடித்து வைத்துள்ளனர். "எமது பிரiஜகள் மீது ஏதாவது செய்தால் அதற்கு பதில் கூறாமல் விடமாட்டோம்" என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் அஹமத் டொவுக்லு எச்சரித்துள்ளார். "எவரும் துருக்கியை சோதிக்க முயற்சிக்கக் கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈராக்கின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்திருக்கும் சிறு நகரான பெய்ஜpயின் ஒரு பகுதியையும் ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் மொசூலை மீட்பதற்கு ஈராக் அரச படை பலப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பெய்ஜp நகரில் இருந்து ஆயுத தாரிகளை முறியடிப்பது தவிர்க்க முடியாத தாகியுள்ளது. ஆயுததாரிகள் பெய்ஜp நகர் முழுவதையும் கைப்பற்றினால் அவர்களின் பலம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதனிடையே ஈராக்கின் வடக்கு எண் ணெய் நகரான கிர்குக்கை குர்திஷ் படையினர் கைப்பற்றியுள்ளனர். "முழு கிர்குக் நகரும் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது" என்று குர்திஷ் பேச்சாளர் ஜப்பார் யவர் ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார். "கிர்குக்கில் ஈராக் இராணுவத்தினர் எவரும் இல்லை" என்று அவர் கூறினார்.

எனினும் குர்திஷ் போராளிகள் சுன்னி முஸ்லிம் ஆயுததாரிகளுக்கு எதிரான அரணாக செயற்பட்டு வருகின்றனர். இதில் கிர்குக் மற்றும் அதனை சூழவிருக்கும் தமீம் மாகாணத்தின் பகுதிகள் ஈராக் அரபிகளுக் கும் குர்திஷ்களுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார மோதலின் பிரதான அங்கங்களாக இருந்து வருகின்றன.

இசிஸ் படையினர் பக்தாத் வரை சென்று 'pயா அரசுக்கு சவால் விடுக்க எதிர்பார்த் திருக்கும் சூழலில் மொசூல் நகர எல்லை களில் இருக்கும் குர்திஷ் போராளிகளை தவிர்க்கும் சூழலுக்கு முகம் கொடுத் துள்ளனர். எனினும் பக்தாத்திலிருந்து 69 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக் கும் பலூஜh நகர் ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கிருந்து பக்தாத் மீதான எதிர்ப்பு கிளம்பும் வாய்ப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்த பிரதமர் மலிக்கி பாராளுமன்ற விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பக்தாதில் இருந்து வடக்காக 110 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் சமர்ரா நகரை நோக்கி முன்னேறும் ஆயுத தாரிகளை இராணுவத்தினர் நேற்றுமுன்தினம் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com