Contact us at: sooddram@gmail.com

 

சதாம் குசைனால்

அமெரிக்காவிற்கு மேலும் தலை இடி

ஈராக் மீண்டும் யுத்த பூமியாகிவிட்டது.. அமெரிக்காவால் வீழ்த்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனின் ஆதரவுப் படையினர் விஸ்வரூபமெடுத்து பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இதனால் பதட்டம் அடைந்த ஈரான் தனது படைகளை ஈராக்கின் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்துள்ளது. எல்லைகளில் ஈரான் ராணுவத்தை குவித்து வருகிறது. ஈராக்கில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் ஷியா முஸ்லிம்கள். அதற்கு அடுத்தது சன்னி முஸ்லிம்கள். ஈராக் ஜனாதிபதியாக இருந்த சதாம் உசேன் சன்னி பிரிவைச் சேர்ந்தவர். 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா யுத்தத்தைத் தொடுத்தது. அமெரிக்காவின் இந்த யுத்தத்துக்கு ஷியா பிரிவினர் ஆதரவு கொடுக்க சதாம் உசேனும் சன்னி பிரிவினரும் ஒடுக்கப்பட்டனர். 2006ஆம் ஆண்டு சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம் தொடங்கிய போதே ஏராளமான சதாம் உசேன் ஆதரவாளர்களான சன்னி பிரிவினர் அல்கைய்தா இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் 2010 ஆம் ஆண்டு அல்கொய்தாவின் ஈராக் அமைப்புக்கு அபு பக்கர் அல் பகதாதி தலைவரானார். அந்தக் குழுவே இன்று உலகம் பேசும் "The Islamic State of Iraq in Syria " அதாவது ஐ. எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பாக அதாவது சதாம் உசேன் ஆதரவுப் படையாக தனியே உருவெடுத்துள்ளது.

இந்த அமைப்பினர் ஏற்கெனவே சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தம் வசம் வைத்திருக்கின்றனர். இதன் பின்னர் படிப்படியாக ஈராக் நகரங்களை இலக்கு வைத்து கைப்பற்றத் தொடங்கினர். சிரியாவின் சில பகுதிகள் மற்றும் ஈராக்கை இணைத்து இஸ்லாமிய தேசம் ஒன்றை கட்டமைப்பதே சதாம் ஆதரவுப் படையினரின் இலக்கு.

2011ஆம் ஆண்டு ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கா படைகள் முழுமையாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் குறிப்பிட்ட அளவு அமெரிக்க ராணுவத்தினர் இன்னமும் இருப்பதாகவே கூறப்பட்டும் வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து சதாம் ஆதரவுப் படையினர், ஈராக் அரசு படைகள் மீது மெதுமெதுவாக தாக்குதல்களை தொடங்கினர்.

கடந்த ஒரு வார காலமாக மொசூல், சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரீத், நினிவே, சலாஹுதின், கிர்குக் என பல நகரங்களை கைப்பற்றிவிட்டனர்.

அத்துடன் ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துலுய்யா நகரை திடீரென தாக்குதல் நடத்தி நேற்றுக் காலை (12.06.14) கைப்பற்றினர். தற்போது தலைநகர் பாக்தாத் மற்றும் ஷியா பிரிவினரின் புனித தலமாகிய கர்பாலாவை கைப்பற்றும் வகையில் சதாம் ஆதரவுப் படை முன்னேறி வருகிறது.

இதேவேளை சதாம் ஆதரவுப் படையினர் அதிரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஈராக் அரச படைகள் தப்பி ஓடுவதால் எண்ணெய் வளம் அதிகம் உள்ள கிர்குக் நகரத்தை குர்து ராணுவம் கைப்பற்றிவிட்டது. அப்பகுதி சுயாட்சி பகுதியாக இருந்தாலும் தற்போதைய சூழலில் உக்ரைனின் கிரிமீயா போல தனிநாடாக தன்னை குர்திஸ்தான் பிரகடனம் செயய்வும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இப்படி ஈராக்கில் அடுத்தடுத்து சதாம் உசேன் ஆதரவு படைகள் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தை நெருங்கிவிட்ட நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் நிலைமைகளை கவனித்து வருகின்றன.

ஈராக் அரசுப் படைகள், சதாம் ஆதரவு படையினரை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடி வருகின்றனர். இதனால் ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்கள் என பலவும் சதாம் படை வசமாகி வலுவடைய வைத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் அமெரிக்காவிடம் சதாம் படையினர் மீது தாக்குதல் நடத்துமாறு ஈராக் வற்புறுத்திக் கொண்டிருக்கிறது.

எனினும் அமெரிக்காவோ இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாஹி கூறுகையில், “ஈராக்கில் தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஈராக் அரசு மற்றும் அந்நாட்டு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதேசமயம், ஈராக்குக்கு அமெரிக்க படையினரை திரும்பவும் அனுப்பும் திட்டமில்லை” எனக் கூறினார்.

இது போலவே இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக்கும், இங்கிலாந்து படையினரை ஈராக்குக்கு திரும்பவும் அனுப்பும் திட்டமில்லை' என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் ஈராக் அரசுக்கு உதவும் வகையில், சதாம் ஆதரவு படையினர் மீது விமானத் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்திகள் குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

இதனிடையே அமெரிக்கர்கள், ஈராக்குக்கு செல்ல வேண்டாம் என்று அந்நாடு அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையை விடுத்தது. இதனால் வடக்கு பாக்தாத் விமான படை தளத்தில் இருந்து ஏராளமான அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்க ராணுவத்துக்கான ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காத்திருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அண்டை நாடான ஈரான், ஈராக்கின் பாக்தாத்தில் ஏராளமான முதலீடுகளை செய்திருப்பதாலும் கர்பலா புனித நகரம் என்பதாலும் அவற்றைப் பாதுகாக்க தமது படைகளை ஈராக்குக்கு அனுப்பி வைத்திருக்கிறது. எல்லைகளிலும் ஈரான் படைகள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் சதாம் உசேன் ஆதரவுப் படையினர் விஸ்வரூபமெடுத்துள்ளதால் அவர்களை எதிர்கொள்ள இதுநாள் வரை பகை நாடுகளாக இருந்த அமெரிக்காவும் ஈரானும் இப்போது ஈராக்கில் கை கோர்த்து போரிட வேண்டிய நிலை வந்துள்ளது. இது பற்றியும் அமெரிக்கா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. எண்ணெய் வள பூமி எரிந்து கொண்டிருக்கிறது!!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com