Contact us at: sooddram@gmail.com

 

கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை தடுக்க ஈராக் அரச படை தாக்குதல்

ஈராக்கில் கடந்த ஒரு வாரத்திற் குள் பாரிய முன்னேற்றம் கண்டுவ ரும் சுன்னி இஸ்லாமிய கிளர்ச்சியா ளர்கள் மீது அரச படை பெரும் மோதலில் ஈடுபட்டுள்ளது.  எனினும் தலைநகர் பக்தாதில் இருந்து 60 கிலோமீற்றர் (37 மைல்) தொலைவில் இருக்கும் பகுபா நகரின் ஒரு பகுதியை கிளர்ச்சியாள ர்கள் கைப்பற்றி இருப்பதாக அங்கி ருந்து வரும் செய்திகள் குறிப்பிடு கின்றன. பக்தாதில் இருக்கும் மிகப் பொரிய அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பி ற்காக 275 இராணுவத்தினரை அமெ ரிக்கா அங்கு அனுப்பியுள்ளது. ஈராக்கின் குர்திஷ் சுயாட்சி பிரா ந்திய பிரதமரான நசிர்வான் பர் சானி, "ஈராக் ஒன்றிணைந்த தேச மாக தொடர்ந்தும் இருக்காது என நான் நினைக்கிறேன்" என்று குறிப் பிட்டுள்ளார். வடக்கு நகரான மொசூல், டிக்ரித் ஆகியற்றில் மிகவேகமாக முன்னேற்றம் கண்டு திங்கட்கிழமை டெல் அபார் வரை முன்னேறிய ஈராக் இஸ்லாமிய தேசம் எனும் சுன்னி ஆயுததாரிகள் முன்னிலை யில் ஈராக் மீண்டும் வழமைக்கு திரு ம்புவது மிக கடினமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் பக்தாத்தில் இருந்து வட திசையில் இருக்கும் தியாலா மாகாணத்தின் பகுபா நகரின் பெரும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்ப ற்றியுள்ளனர். நகரின் பிரதான பொலிஸ் நிலையத்தை ஆக்கிரமித் திருக்கும் ஆயுததாரிகள் அங்கிருக் கும் ஆயுதங்களையும் கைப்பற்றியு ள்ளனர்.

எனினும் நகரம் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக ஈராக் பாதுகாப்பு படையினர் குறி ப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாமிய ஆயுத தாரிகளால் கைப்பற்றப்பட்ட யுத்த ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த டெல் அபார் நகரை மீட்பதற்கு அரசபடை அங்கு தாக்குதல்களை ஆரம்பித்து ள்ளது. அங்கு படைகள் குவிக்கப் பட்டு வரும் நிலையில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக ஈராக் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

சுன்னி மற்றும் 'pயா முஸ்லிம் கள் கலந்து வாழும் 200,000 மக் கள் தொகை கொண்ட டெல் அபார் நகரம் சிரிய நாட்டு எல் லைக்கும் மொசூல் நகருக்கும் இடையில் அமைந்துள்ளது.

மேற்கு பக்தாத்தின் அன்பார் மாகாணத்தில் சுன்னி ஆயுததாரி கள் பலூஜh நகருக்கு அருகில் வைத்து இராணுவ ஹெலிகொப் டர் ஒன்றை சுட்டுவீழ்த்தியுள்ளனர். பல யுத்த டாங்கிகளும் தாக்கி அழிக்கப்பட்டதாக ஆயுததாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் மாகாண தலைநகரான ரமடியில் இருக்கும் பல முகாம்களில் இருந்து இராணுவ வீரர்கள் தப்பி ஓடி வருவதாக குறி ப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் புரட்சிப்படையின் உயரடு க்கு தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமான் தற்போது பக்தாதில் இரு ந்து ஈராக் இராணுவம் மற்றும் 'pயா ஆயுததாரிகளின் சுன்னி கிளர்ச்சியா ளர்கள் மீதான தாக்குதலுக்கு ஓருங்கிணைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஈரானின் அணு சக்தி விவகாரமாக பேசுவதற்கு வியன்னா நகரில் ஒன்று கூடி இருக்கும் அமெரிக்க மற்றும் ஈரான் பிரதிநிதிகள் ஈராக் விவகாரம் குறித்து அதிக கவனம் செலுத்தியுள் ளனர். எனினும் ஈராக்கில் இரு தரப் பும் கூட்டு இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது குறித்த செய்திக்கு அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு தெரி வித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் கொங்கிரஸ் அவை க்கு எழுதி இருக்கும் கடிதத்தில், பக்தாத் தூதரகம் மற்றும் அமெரிக்க பிரiஜகளை பாதுகாக்க ஈராக்கிற்கு 275 இராணுவத்தினர் அனுப்பப்பட்டு ள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஈராக் கில் பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை இந்த வீரர்கள் அங்கு நிலை கொண்டிருப்பார்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈராக் அனுப்பப்பட்டிருக்கும் வீரர் கள் தெற்கு நகரான பஸ்ரா மற்றும் வடக்கில்; இர்பில் ஆகிய பகுதிகளில் இருக்கும் அமெரிக்க துணைத்தூத ரக பணியாளர்களை இடம்மாற்று வது மற்றும் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டிரு க்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.

எனினும் ஈராக் துருப்புகளுடன் இணைந்து தரைவழியாக யுத்தத் தில் ஈடுபட படைகளை அனுப்பப் போவதில்லை என்று ஜனாதிபதி ஒபாமா ஏற்கனவே அறிவித்துள் ளார். எனினும் ஈராக் மீது அமெ ரிக்கா வான் தாக்குதல்களை நட த்தும் சாத்தியம் உள்ளது.

அமெரிக்காவின் விமானதாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் எச்.எஸ். புஷ் மேலும் பல யுத்த கப்பல்களுடன் இணைந்து வளை குடாவில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் ஈராக் இஸ்லாமிய தேசம் படை பல்வேறு மரணதண்டனைகளையும் நிறைவே ற்றி இருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டு ள்ளது.

வடக்கு ஈராக்கில் இடம்பெறும் இந்த திட்டமிட்ட கொலைகள் "உறு தியான போர் குற்றங்களாகும்" என்று ஐ.நா. மனித உரிமை ஆணை யாளர் நவி பிள்ளை குறிப்பிட்டுள் ளார்.

ஈராக் இஸ்லாமிய தேசம் படையி னர் ஈராக் இராணுவ வீரர்களை படு கொலை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டதையடுத்தே, பிள்ளை இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கிளர்ச்சியாளர்களால் வெளியிடப்ப ட்ட இந்த புகைப்படங்கள் உண்மை யானவை என்று ஈராக் இராணுவம் குறிப்பிட்ட போதும் அது குறித்து சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவி ல்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஈராக்கின் குர்திஷ் பிராந்திய பிரத மர் பர்சானி அளித்த பேட்டி ஒன்றில், 'pயா ஆதிக்கம் கொண்ட ஈராக் அரசை சுன்னி முஸ்லிம்கள் புறக் கணித்திருப்பதாக குறிப்பிட்டார். இத ற்கு அரசியல் தீர்வொன்றை எதிர் காலத்தில் எட்டுவதே ஒரே வழி யாகும் என்று வலியுறுத்தினார். இத ற்கு சுன்னி பிராந்தியத்திற்கு சுயா ட்சி வழங்குதே தீர்வாகும் என்றும் அவர் கூறினார்.

"நாம் சுன்னி பகுதிகளை அவர்க ளது கைகளில் விட்டுவிடுவதே ஒரே தீர்வாக இருக்கும்.

இதற்கு முதலில் அவர்கள் தம க்கு என்ன வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும்.

குர்திஷ் போன்று அவர்களுக்கும் தனியான சுன்னி பிராந்தியம் ஒன்றை உருவாக்குவதே எனது பார் வையில் இதற்கு சரியான தீர்வா கும்" என்றார்.

எனினும் தற்போதைய மோதல் களை குர்திஷ்கள் தமக்கு சாதக மாக பயன்படுத்தி வருவதாக அவ தானிகள் குறிப்பிடுகின்றனர்.

இதில் குர்திஷ்கள் வரலாற்று ரீதி யில் உரிமை கோரிவரும் ஒருசில பகுதிகளை இந்த மோதலை பயன் படுத்தி தமது நிலப்பரப்புக்குள் உள் வாங்கி வருகின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com