Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் கப்பல் கப்டன் ரவிஷங்கர் பிடிக்க இன்டர்போல் உதவியை நாடுகிறது இலங்கை

புலிகளுக்கு மூன்று ஆயுதக் கப்பல்களை கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கனகராஜா ரவிஷங்கர் என்பவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போலின்) உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்தது. கனடாவில் தற்போது வசித்து வரும் இவரை கைது செய்வதற்கு ‘Red Alert’ அறிவித்தலும் பொலிஸ் தலை மையகம் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவி த்தார்.

1373 ஆவது ஐ.நா. உடன்படிக்கையின் படி பயங்கரவாதிகள் பட்டியலிலும் ரவி ஷங்கரின் பெயர் உட்படுத்தப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய வங்கி தாக்குதல் தொடர்பான வழக்கில் சந்தேக நபர் இல்லாமலேயே பிரபாகரன் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது போன்று சந்தேக நபர் கனடாவில் இருக்கும் நிலையில் அவருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் கடற்புலி பிரிவில் இணைந்துகொண்ட இவர் புலிகளின் கப்பல் கப்டனாக செயலாற்றியுள்ளார். 1971 ஆம் ஆண்டு யாழ். வல்வெட்டித் துறையில் பிறந்தவர். 1992 இல் புலிகள் இயக்கத்தில் இணைந்து வெளிநாட்டில் பயிற்சிகள் பெற்றார். விசேடமாக கப்பலில் கப்டனாக கடமையாற்றுவது தொடர்பில் இவர் வெளிநாட்டில் விசேட பயிற்சி பெற்றுள்ளார்.

1996 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் வடகொரியாவிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் எறிகணைகள் அடங்கிய ஆயுதக் கப்பலொன்றை கொண்டு வந்துள்ளார். இந்தக் கப்பல் கிழக்கு பகுதியில் இறக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் எறிகணைகள். ஆயுதங்கள் அடங்கிய மூன்றாவது கப்பலையும் கொண்டு வந்துள்ளார்.

1996, 97, 99 காலப் பகுதியில் மூன்று ஆயுதக் கப்பலை கொண்டுவந்த இவர் புலிகள் சார்பில் சர்வதேச கப்பல் வலையமைப்புக்குள் தன்னை உட்புகுத்திக் கொண்டார்.2005 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்குத் தப்பிச் சென்றுள்ள இவருக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இதற்கமையவே இவருக்கு மூன்று வழக்குகளுக்கும் தலா 10 வருடம் வீதம் 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் இன்றைய நிலையில் அதனை குழப்புவதற்கு அல்லது மீண்டும் பயங்கரவாதத்தை கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையில் இருந்து செயற்பட்டாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் தண்டனைக்கு உட்படுத்தப்படு வார்கள்.

மீண்டும் புலிகள் இயக்கத்தை உருவாக்க கடந்த காலங்களில் கோபி, அப்பன் போன்றோர் செயற்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாம் இதுவரை 5 பெண்கள் உட்பட 51 நபர்கள் கைதாகியிருக்கின்றனர். மார்ச் 8 ஆம் திகதிக்கு பின்னரே இவர்கள் இவ்வாறு கைதானார்கள். மார்ச் 8 ஆம் திகதிக்கு முன்னதாக சுமார் 110 சந்தேக நபர்கள் கைதுசெய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

தற்போது கனடாவில் வதியும் கனகராஜா ரவிஷங்கரை கைதுசெய்ய இன்டர்போலின் உதவி பெறப்பட்டுள்ளதுடன் விரைவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்படுவார்.இதேபோன்று பயங்கரவாதத்தை மீண்டும் தோற்றுவித்து நாட்டை குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.

இந்த வகையில் ஹொரன ரைகம் தோட்டத்தில் சுப்பிரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.2004 ஆம் ஆண்டு முதல் ரைகம் தோட் டத்தில் வதிபவராக தன்னை அடையாளப் படுத்துவதற்காக கிராம சேவருக்கு 500 ரூபா லஞ்சம் கொடுத்து ஆவணங்களை தயாரித்துள்ளார். தற்போது அந்த கிராமசேவகர் தலைமறைவாகியுள்ளார். ஓய்வுபெற்றுள்ள அவரை பொலிஸார் விரைவில் கைது செய்வார்கள்.

மேலும் புலிகளின் கடற்புலிகள் பிரிவில் புலிகளின் கடற்படையின் படகுகளை புதுப்பிக்கும் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றிய திருநாவுக்கரசு பிரதீபன் என்பவரும் கடந்த 19 ஆம் திகதி விமான நிலையத்தில் கைதானார் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com