|
||||
|
லிபியாவில் தொடர்ந்தும்
மோதல் அல்பிரேகா
எதிர்ப்பாளர்கள்
வசம்
லிபிய
ஜனாதிபதி
முஅம்மர்
கடாபி ஆதரவு இராணுவத்தினருக்கும்
எதிர்ப்பாளர்களுக்கும்
இடையில் தொடர்ந்து
தீவிரமான
மோதல் இடம்பெற்று
வருகின்றது. இதில் கடாபி இராணுவத்தின்
கட்டுப்பாட்டிலுள்ள
சிர்திக்கு
அருகாமை நகரமான அல்பிரேகாவில்
எதிர்ப்பு
படையினர்
தமது கட்டுப்பாட்டை
உறுதி செய்து கொண்டனர்.
அல்பிரேகாவில்
கடாபி இராணுவத்தினர்
நிலைகொண்டிருந்த
போதும் நேற்று முன்தினம்
எதிர்ப்பாளர்கள்
அவர்களை பின்வாங்கச்
செய்து அந்தப் பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்துள்ளனர்.
இதன் போது அல் பிரேகா
பல்கலைக்கழகத்தை
அண்டிய பகுதியில்
கடுமையான
மோதல் ஏற்பட்டதாக
அங்கிருக்கும்
வெளிநாட்டு
ஊடகவியலாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
எனினும்
அந்த பகுதியில்
இருந்து பின்வாங்கிய
கடாபி ஆதரவு படை,
விமானம் மூலம் குண்டுகளை
எறிந்து தாக்குதல்
நடத்தியுள்ளன. இதனால் பலர் கொல்லப்பட்டிருக்கலாம்
என அஞ்சப்படுகிறது.
குறிப்பாக
அல்- பிரேகாவிலுள்ள
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு விநியோக
நிலையத்திற்கு
விமானம் மூலம் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில்
பெரும் புகைமண்டலம்
காணப்பட்டதாக
அங்கிருக்கும்
சி.என்.என்.
செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலை அல்-பிரேகா
பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்த எதிர்ப்பாளர்கள்
வானத்தை நோக்கி துப்பாக்கியால்
சுட்டு அதனை கொண்டாடியதாக
சி.என்.என்
செய்தியாளர்
குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய
தினம்வரை
முக்கிய நகரங்களான
பெங்காசி,
டொப்ரூக்,
அக்தாபியா,
சாவிய, மிஸ்திரா ஆகிய பகுதிகள்
எதிர்ப்பாளர்களின்
கட்டுப்பாட்டுக்குள்
காணப்படுகிறது. தலைநகரான திரிபோலி
மற்றும் கடாபியின்
பிறந்த நகரமான சிர்தி ஆகிய இரண்டு
நகரங்களிலும்
அரசு தமது
கட்டுப்பாட்டை
தக்க வைத்துக்
கொண்டுள்ளது.
இதில்
திரிபோலிக்கு
அண்மையிலுள்ள
ஜான்சவு, சுவாரா பகுதிகளில்
தொடர்ந்து
மோதல்கள்
இடம்பெற்று
வருவதாக தெரியவருகிறது. கடாபி பிடிவாதம் இதனிடையே
கடைசி ஆண், பெண்ணின்
உயிர் இருக்கும்
வரை போராடுவதாக
லிபிய ஜனாதிபதி கடாபி தெரிவித்துள்ளார். மீண்டும் ஒருமுறை நேற்று தொலைக்காட்சியில்
தோன்றி பொது மக்களிடம்
உரையாற்றிய
கடாபி, தாம் பதவியில்
இருந்து விலகப் போவதில்லை
என்றும் அமெரிக்க, நேடோ இராணுவங்கள்
இங்கு தலையிட்டால்
பல்லாயிரக்கணக்கான
உயிர்கள்
பலியாகும்
என எச்சரித்தார்.
சாவெஸ்-கடாபி பேச்சு இந்நிலை
வெனிசுலா
ஜனாதிபதி
ஹுகோ சாவெஸ்
கடாபியுடன்
நேற்று இரண்டரை மணி நேரம்
தொலைபேசியில்
கலந்துரையாடியுள்ளார். இதன் போது லிபியாவில்
ஏற்பட்டுள்ள
மோதல் நிலையை கண்காணிக்க
சர்வதேச அமைதி காக்கும்
குழுவொன்றை
அனுப்புவது
குறித்து
ஆலோசிக்கப்படதாக
வெனிசுலா
அரசு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில்
வழக்கு இதேவேளை நெதர்லாந்தின்
ஹோக் நகரினை
தலைமையிடமாகக்
கொண்டு செயல்படும்
சர்வதேச நீதிமன்றத்தில்
லிபிய ஜனாதிபதி கடாபி மீது
போர் குற்ற
வழக்கு தொடரப்படும்
என வழக்கறிஞர்
லூயிஸ் மொரினோ ஒகாம்பே தெரிவித்துள்ளார்.
இது குறித்து
அவர் கூறுகையில்,
கடாபி மீது போர்குற்ற
வழக்கு தொடர போதுமான
ஆதாரங்கள்
உள்ளன. இது
தொடர்பாக
முதல்கட்ட
விசாரணை அறிக்கை சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம்
சமர்ப்பிக்கப்படும். இதில் கடாபிக்கு
நிச்சயம்
தண்டனை கிடைக்கும்.
இது தொடர்பாக
சர்வதேச பொலிஸ் முகவரான இன்டர்போலின்
உதவியும்
கோரப்படும்.
இதுவரை
சர்வதேச நீதிமன்றத்தில்
போர் குற்ற
வழக்கு தொடர்பாக ஐந்து ஆபிரிக்க
நாடுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது வட ஆபிரிக்க
நாடான லிபியா மீது போர்
குற்ற வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க செனட் தீர்மானம் இந்நிலையில்
ஜனாதிபதி
முஅம்மர்
கடாபிக்கு
எதிராக அமெரிக்க பாராளுமன்ற
மேலவையில்
(செனட்) தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது. லிபியாவில் இராணுவ
விமானங்கள்
மூலம் மக்கள் மீது குண்டுகளை
வீசி அவர்களை
கடாபி கொலை செய்து
வருவதாகவும்,
இதனை வன்மையாக
கண்டிப்பதாகவும்
தீர்மானத்தில்
கூறப்பட்டுள்ளது.
லிபியாவில்
விமானங்கள்
பறப்பதற்கு
ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதிக்க
வேண்டும்
எனவும் அமெரிக்க செனட்டில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் எச்சரிக்கை இதேவேளை அமெரிக்கா
உள்ளிட்ட
நாடுகள் லிபியா மீது தாக்குதல்
நடத்தினால்
அவர்கள் மோசமான எதிர்விளைவுகளைச்
சந்திக்க
வேண்டியிருக்கும்
என்று ஈரான் ஜனாதிபதி
மெஹ்மூத்
அகமதி நிஜாத் கூறியுள்ளார்.
முன்பு
அமெரிக்க
ஜனாதிபதியாக
இருந்த ஜோர்ஜ் புஷ், ஈராக்
மீதும் ஆப்கானிஸ்தான்
மீது தாக்குதல்
நடத்தினார். அப்போது இருந்த
சூழ்நிலை
இப்போது இல்லை. இப்போது லிபியா
மீது தாக்குதல்
நடத்தினால்
அது, அவர்களுக்கு
அவர்களே மரணக் குழியை
தோண்டிக்
கொள்வதற்கு
சமமாக இருக்கும்
என்று அவர் கூறியுள்ளார்.
இரண்டாயிரம்
வீரர்களைக்
கொண்ட இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள்
லிபியாவை
நோக்கி அனுப்பப்பட்டுள்ளமை
ழிறிப்பிடத்தக்கது. எதிர்பாளர்கள் உதவி இதனிடையே
கடாபிக்கு
எதிராக போராடும் எதிர்ப்பாளர்கள்
சர்வதேச உதவியை வேண்டியுள்ளனர். எனினும் இந்த எதிர்ப்பாளர்களுக்கு
யார் தலைமை
தாங்குகிறார்கள்
என்பது தெரியாததாக
அமெரிக்கா
உட்பட சர்வதேச நாடுகள் சிக்கல்களுக்கு
முகம் கொடுத்து வருவதாக தெரிகிறது.
இதுவரை
நடந்த மோதல்களால்
1000க்கும் மேற்பட்டோர்
கொள் ளப்பட்டிருக்கலாம்
என அஞ்சப்படு
கிறது. அத்துடன்
150000 பேரளவில்
அண்டிய நாடுகளுக்கு
இடம்பெய ர்ந்துள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |