|
||||
|
நாட்டைவிட்டு வெளியேற
கிளர்ச்சியாளர்கள் கடாபிக்கு
72 மணிநேர கெடு
முஅம்மர் கடாபி மேலும்
72 மணி நேரத்திற்குள்
நாட்டைவிட்டு
வெளியேறினால்
தாக்குதலை
நிறுத்துவதாக
கிளர்ச்சியாளர்கள்
நேற்று அறிவித்துள்ளனர். இதன்படி
முஅம்மர்
கடாபி தமது பதவியை
உடனடியாக
ராஜினாமா
செய்து மேலும் 72 மணித்தியாலத்திற்குள்
நாட்டைவிட்டு
வெளியேறினால்
தாக்குதலை
நிறுத்திக்கொள்வதோடு,
கடாபி மீது எந்த
நடவடிக்கையையும்
எடுக்கப்பட
மாட்டாது
என கிளர்ச்சியாளர்களின்
தேசிய கெளன்ஸில்
தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு
அல் ஜீரா
தொலைக்காட்சி
சேவையில்
ஒளிபரப்பப்பட்டது.
இது குறித்து எதிர்ப்பாளர்களின்
தேசிய கெளன்ஸில்
தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீல், அல்-
ஜீராவுக்கு
அளித்த பேட்டியில்
எமது நாட்டின்
மீது நாம்
அன்பு கொண்டுள்ளோம். இதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இதன்படி கடாபி ஆதரவுப்படை
முதலில் தமது தாக்குதல்கள்
அனைத்தையும்
நிறுத்த வேண்டும்.
இரண்டாவது மேலும் 72 மணி நேரத்திற்குள்
கடாபி நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மூன்றாவது எமக்கு
அரச நிர்வாகம்
ஒன்றை அமைக்க வழிவிட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளுக்கு
கடாபி ஆதரவுப்படை
எவ்வாறு பதில் அளிக்கப்போகின்றது
என்று நாம் பொறுத்திருந்து
பார்ப்போம்.
எனினும் இந்த 72 மணி
நேர கால
அபகாசம் எக்காரணத்திற்காகவும்
நீடிக்கப்படமாட்டாது
என்றார்.
எனினும் லிபிய அரச
தொலைக்காட்சி,
கடாபி கிளர்ச்சியாளர்களுடன்
பேச்சுவார்த்தை
நடத்தியதாகக்
கூறப்படும்
தகவலை முற்றாக மறுத்தது. இது குறித்து லிபிய வெளியுறவு
அமைச்சர்
கூறும் போது, இந்த
செய்தி உண்மையிலே
முட்டாள்தனமானது
என்றார்.
எவ்வாறாயினும் கடந்த
ஞாயிற்று
க்கிழமை இரவு பெங்காசி
நகருக்கு
கடாபி தூதுக்குழு
சென்றதாகவும்
அவர்கள் கிளர்ச்சியாளர்களுடன்
பேச்சுவார்த்தை
நடத்தியதாகவும்
அல்ஜkரா செய்தி வெளியிட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இதனிடையே லிபியாவில்
தொடர்ந்து
போராட்டங்கள்
தீவிரமடைந்துள்ளன. எண்ணெய் நகரமான
ராஸ்லனூபாவை
கைப்பற்ற
கடாபி ஆதரவுப் படை நேற்று
முன் தினமும்
தொடர்ச்சியாக
வான்வழி தாக்குதலை
நடத்தியது.
இதில் பலர் கொல்லப்பட்டதோடு,
பலருக்கு
காயம் ஏற்பட்டது.
லிபியாவில் இதுவரை இடம்பெற்ற
மோதல்களால்
1000க்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
2 இலட்சத்திற்கும்
அதிகமானோர்
அண்டய நாடுகளுக்கு
இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே பிரிட்டன்
மற்றும் பிரான்ஸ் நாடுகள் லிபியா மீது போர்
விமானங்கள்
பறக்கத் தடை செய்யத்
தீர்மானம்
ஒன்றை தயாரித்துள்ளன. இத்தீர்மானம் இன்று ஐ.
நா. வில் விவாதத்திற்கு
வரும் எனத் தெரிகிறது.
அமெரிக்க எம். பி. க்கள் சிலர் லிபியாவில்
அமெரிக்க
இராணுவம்
நேரடியாகத்
தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி
வருகின்றனர்.
ஆனால் அது சாத்தியமில்லை
என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை
அமைச்சர்
ரொபர்ட் கேட்ஸ் திட்டவட்டமாகத்
தெரிவித்துவிட்டார்.
லிபியாவின் மீதான இராணுவ
நடவடிக்கை
அல்லது போர் விமானம்
பறக்கத் தடை உள்ளிட்டவற்றுக்கு
ரஷ்யா கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைகள், லிபியா
மீதான அந்நிய படையெடுப்புக்குச்
சமம் என்றும்
அது கருதுகிறது.
ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில்
ரஷ்யாவுக்கு
‘வீட்டோ’ அதிகாரம் உள்ளதால் இதுபோன்ற தீர்மானங்களை
நிறைவேற்றவிடாமல்
அதனால் தடுத்து விட முடியும்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ. நா. வைத் தொடர்ந்து
ஜப்பானும்,
தன் நாட்டில்
உள்ள கடாபி
சொத்துக்களை
முடக்கி, லிபியா மீது பொருளாதாரத்
தடைகளை விதித்துள்ளது.
இதேவேளை லிபிய வான்வெளி
மீதான 24 மணி நேர
வான்வெளி
எச்சரிக்கை
மற்றும் கட்டுப்பாடு
(அவாக்ஸ்) முறையை ‘நேட்டோ’ அமைப்பு அமுல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நேட்டோ
கண்காணிப்பு
விமானங்கள்
லிபிய வான்வெளியில்
24 மணி நேரமும்
பறக்கும்
விமானங்களை
அடையாளம்
கண்டறியும்.
லிபிய எதிர்த்தரப்புக்கு
உதவும் பல்வேறு முடிவுகளில்
அவர்களுக்கு
ஆயுதம் வழங்கும் திட்டம் பற்றியும்
அமெரிக்கா
ஆலோசித்து
வருகிறது. ஆனால்
அமெரிக்க
வெளியுறவு
செய்தித்
தொடர்பாளர்
பி. ஜே. க்ரவுலி இதுபற்றிக்
கூறுகையில்,
‘அது ஐ. நா.
பாதுகாப்பு கவுன்சில்
லிபியா மீது விதித்துள்ள
ஆயுதப் பரிமாற்றத்
தடைக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்
ஜே. கார்னே வெளியிட்ட
அறிக்கையில்,
‘கடாபி ஆதரவாளர்கள்
அவரை விட்டு
விலகி விட வேண்டும்.
அவ்வாறு செய்யவில்லை
என்றால் அதற்கான விளைவுகளை
எதிர்கொள்ள
நேரிடும்’
என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு
லிபியாவில்
செயல்பட்டு
வந்த எண்ணெய்
சுத்திகரிப்பு
நிறுவனங்கள்
இழுத்து மூடப்பட்டதால்,
பெங்காசி
உள்ளிட்ட
பகுதிகளில்
விரைவில்
பெட்ரோலுக்கு
கடும் தட்டுப்பாடு
நேரும்.
அதனால் இடைக்கால அரசு இத்தாலியில்
இருந்து பெட்ரோலை இறக்குமதி
செய்வது குறித்து ஆலோசித்து
வருகிறது.
இதேவேளை, லிபிய ஜனாதிபதி
முஅம்மர்
கடாபி நேற்று மீண்டும் ஒருமுறை அரச ஊடகத்தில்
தோன்றினார். இதன் போது அவர்,
லிபியாவில்
மூக்கை நுழைக்கும்
வெளிநாட்டு
சக்திகளுக்கு
எச்சரிக்கை
விடுத்தார்.
அத்துடன்
லிபியாவில்
மோதலில் ஈடுபடுவது
அல்கைதா தீவிரவாதிகள்
என்றும், ஆப்கானிஸ்,
பாகிஸ்தான்,
அல்ஜீரியா,
எகிப்து போன்ற நாடுகளைச்
சேர்ந்த பல தீவிரவாதிகளை
தமது பாதுகாப்புப்
படையினர்
கைது செய்துள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
தவிர, தமது நாட்டினை
எண்ணெய் வளத்தை கைப்பற்றவே
அமெரிக்கா,
பிரான்ஸ்
போன்ற நாடுகள் முயற்சித்து
வருவதாகவும்
இந்த பேட்டியில்
அவர் குறிப்பிட்டார்.
கிளர்ச்சியாளர்கள் 72 மணி நேர
கெடுவிதித்ததை
தொடர்ந்தே
கடாபி தொலைக்காட்சியில்
தோன்றி இதனைத் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |