Contact us at: sooddram@gmail.com

 

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு மின் இணைப்பு

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தின் மூன்றாவது அணு உலையில் மீண்டும் வெள்ளை புகை கக்கியதால் நேற்று நண்பகல் பணியா ளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட னர். எனினும் இந்தப் புகை எங்கிருந்து வெளியேறுகின்றது என்பதை கணிக்க முடியாதுள்ளதாக டோக்கியோ மின் சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினத்திலும் இங்கு அதிகப் புகை கக்கியதைத் தொடர்ந்து பணியாளர் இரண்டுமுறை வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் புகுஷிமா அணு மின் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாய்ச்சி அணு மின் நிலையத்திலுள்ள அணு உலைகள் அனைத்தும் செயலிழந்து அவைகளில் இருந்து அணுக் கதிர் வீச்சு வெளியாகிவரும் நிலையில், அவைகள், மேலும் வெப்பமடைந்து வெடித்துவிடாமல் தடுக்க, குளிரூட்டிகளை இயக்க மின் இணைப்பு கொடுக்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்றுவந்தது.

தற்போது அணு மின் நிலையத்திற்கு முழுமையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், 3வது அணு மின் உலை இருக்குமிடத்தில் விளக்குகள் எரிவதாகவும் இந்த அணு மின் நிலையத்தை இயக்கும் டோக்கியோ மின்சார நிறுவனம் கூறியுள்ளது.

மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதால், குளிரூட்டிகளை இயங்க வைக்கும் சாத்தியக் கூறு பிறந்துள்ளது என்றும், குறிப்பாக 3வது அணு உலையின் குளிரூட்டியை இயக்க தங்களது பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் டோக்கியோ மின்சார நிறுவனம் கூறியுள்ளது.

ஆயினும், குளிரூட்டிகளை இயக்கத் தொடங்குவதற்கு முன்னர், பாதிப்பிற்குள்ளாகியுள்ள இயந்திரங்களின் நிலையை நன்கு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும், மின் இணைப்பு கொடுக்கப்பட்டவுடன் அவைகள் வெடித்துவிடும் அபாயமும் உள்ளதென்றும் கூறப்பட்டுள்ளது.

மின் இணைப்பு கொடுத்து எல்லா அணு உலைகளையும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டுவர பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் வைக்கப்பட்டிருந்த குட்டைகளில் இருந்து அணுக் கதிர் வீச்சு பெருமளவிற்கு வெளியேறிவிடாமல் தடுக்கும் பணியில் ஊழியர்கள் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

டாய்ச்சி அணு உலைகளில் இருந்து பெருமளவிற்கு அணுக் கதிர் வீச்சு வெளியேறுவதை உறுதிசெய்தாலும், அணு உலைகளின் எந்தப் பகுதியில் இருந்து அது வெளிவருகிறது என்பதை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்று அங்கு வந்துள்ள பன்னாட்டு அணு சக்தி முகமை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை புகுஷிமா அணு மின் நிலையத்திற்கு 240 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தலைநகர் டோக்கியோவில் குடியிருப்போருக்கு குழாய் நீரை அருந்தவேண்டாம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக ஒரு வயதை தாண்டாத சிறு குழந்தைகளுக்கு இந்த நீரை கொடுக்க வேண்டாம் என்று ஜப்பான் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

டோக்கியோ பகுதியில் குழாய் நீரில் கதிரியக்க அயடின் அளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட இரண்டு மடங்காக இருந்ததைத் தொடர்ந்தே ஜப்பான் அரசு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதேபோன்று புகுஷிமாவை அண்டிய பகுதிகளில் உள்ள 11 மரக்கறி வகைகளில் அதிக அளவு கதிர்வீச்சு படிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மரக்கறி வகைகள் உட்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் புகுஷிமா, இப்ராகி, டொசிகி மற்றும் குன்மான் பகுதிகளில் இருந்து இறக்குமதியாகும் பால், பழவகைகள் மற்றும் மரக்கறிகளை உடனடியாக தடைசெய்யுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே சீனா, தாய்வான் மற்றும் தென்கொரிய நாடுகள் ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் உணவு வகைகளை கதிர்வீச்சு சோதனைக் உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சுனாமி அனர்த்தத்தினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 9,408 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. அதேபோன்று 14.700 பேர் காணாமல்போயுள்ளதாக நேற்றைய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 3 இலட்சம் பேர் அளவில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜப்பானை மீளக்கட்டியெழுப்ப 309 பில்லியன் டொலர்கள் அளவும் தேவைப்படும் என ஜப்பான் அரசு கூறியுள்ளது.

பிரான்ஸ் வரை பரவிய ஜப்பானிய கதிர்வீச்சு

ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு பிரான்ஸ் வரை பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கதிர்வீச்சு மனித உயிருக்கு அபாயம் இல்லாதது என பிரெஞ்சு அணு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. இருப்பினும் இந்தக் கருத்தை அனைவரும் ஏற்கவில்லை. ஜப்பானில் கடந்த 11ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான் வடக்குப் பகுதியில் உள்ள புகுஷிமா அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது.

இந்தக் கதிர் வீச்சு நேற்று அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளைக் கடந்தது. இந்தக் கதிர்வீச்சு மேகம் ஐரோப்பாவை நோக்கி நகர்ந்தது. இன்னும் இரு தினங்களில் மேற்கு ஐரோப்பிய பகுதிகளை இவை தாக்கக்கூடும்.

இந்தக் கதிர்வீச்சால் மனித உயிர்களுக்கு எவ்வித கேடும் ஏற்படாது என பிரெஞ்சு தேசிய பாதுகாப்பு ஆணையத் தலைவர் ஆண்ட்ரி கிளாடே தெரிவித்தார். செர்னோபில் அணு மின் நிலையத்தில் கசிந்த கதிர் வீச்சு அளவை விட ஆயிரம் முதல் பத்து ஆயிரம் மடங்கு குறைவானதாக இந்தக் கதிர்வீச்சு உள்ளது என ஆண்ட்ரி கூறினார்.

கதிர்வீச்சு நீண்ட தூரத்தில் உள்ளது. அது பாரிசை நெருங்கும் போது மேலும் வலுவிழந்து விடும் என யானிக்ரவ்சலட் கூறினார்.

ஜப்பானில் மீண்டும் தொடர் நிலநடுக்கம்

ஜப்பானில் மீண்டும் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தினால் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது. சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், சுனாமி மற்றும் தொடர் பூமி அதிர்வுகளால் ஜப்பானில் அதிக அளவிலான உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஜப்பானில் நேற்று மீண்டும் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியான ஹோன்சு பகுதியை குலுங்க வைத்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com