Contact us at: sooddram@gmail.com

 

மேற்குலக கூட்டுப்படைக்குள் குழப்பம்

அடிபணியப் போவதில்லையென கடாபி அறிவிப்பு

லிபிய தலைநகர் திரிபோலியில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று முன்தினம் இரவும் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்களை நடத்தியது. இதன்போது திரிபோலி நகரில் பலமுறை வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிரு க்கும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதிகள் மற்றும் சேத விபரங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதில் நேற்று முன்தினம் மாலை தொடக்கம் திரிபோலி யின் முக்கிய நகரங்களில் தானியங்கி விமான எதிர்ப்பு கதிர்கள் செயற்பட ஆரம்பித்ததாகவும் அங்கு தொடர்ந்து சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் அல்ஜீரா ஊடகவியலாளர் அனிடா மக்னோட் தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த 12 மணி நேரத்திற்குள் அமெரிக்க இராணுவம் 20 டொமஹொக் ஏவுகணைகளை லிபியா மீது ஏவியதாக அமெரிக்க இராணுவப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான தாக்குதலில் இதவரை அமெரிக்க மற்றும் பிரிட்டன் இராணுவம் இணைந்து 162 டொமஹொக் ஏவு கணைகளை ஏவியுள்ளதாகவும் மேற்படி பேச்சாளர் குறிப்பிட்டார்.

அடிபணியேன் கடாபி

இதேவேளை லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலுக்கு இலக்கான பாப் அல் அசிசியா பகுதியில் நேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். மூன்று நிமிடங்கள் நீடித்த இந்த உரையை லிபிய அரச தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புச் செய்தது.

இந்த உரையில் அவர், ‘நாம் முடிவில் வெற்றி பெறுவோம்என அறிவித்தார். இதில் அவர் மேலும் கூறியதாவது:-

புதிய சிலுவை யுத்தம் சிலுவை நாடுகளால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அனைத்து முஸ்லிம்களும் ஒன்று திரண்டு இதற்கு எதிராகப் போராட வேண்டும்.

நாம் அடி பணியப் போவதில்லை. நாம் பயப்படப் போவதுமில்லை. ஏவுகணைகளும் யுத்த விமானங்களும் எம்மைத் தாண்டிப் போகும் போது எமக்கு சிரிப்புத்தான் வருகிறது. இது குறுகிய காலமாக இருந்தாலும் நாம் அவர்களை வீழ்த்துவோம். நீண்ட காலமாக நீடித்தாலும் நாம் வீழ்த்துவோம்.

மிகப் பாதுகாப்பான விமான பாதுகாப்பு அரண் மக்கள்தான். இந்த அரணுக்கு மத்தியில்தான் நான் இருக்கின்றேன் என்றார்.

இந்த உரையில் அவர் இறுதியாகக் கூறியதாவது:- நான் கீழ்வானத்தை அகற்ற முயலும் காற்றுக்குப் பயப்பட மாட்டேன். விமானங்கள் எறியும் கருப்பு பொருளுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன். எனது வீட்டில் நான் இருக்கி றேன். நான்தான் அதற்கு உரிமையாளன். நாளையை உருவாக்குபவன். நான் இங்கு இருப்பேன்! நான் இங்கு இருப்பேன்!! இங்கு இருப்பேன்! என்றார்.

பான் கீ மூன்

இதேவேளை முஅம்மர் கடாபி தமது மக்கள் மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்தும்வரை சர்வதேச தாக்குதல்கள் தொடரும் என ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். டூனீஷியாவுக்கு விஜயம் செய்துள்ள பான் கீ மூன் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

கடாபி தனது நடவடிக்கையை நிறுத்தும் வரை இந்த தாக்குதல் தொடரும் என நான் நினைக்கிறேன். எனவே இந்த தாக்குதலை நிறுத்துவது கடாபி கையில்தான் இருக்கிறது என்றார்.

தலைமையில் சிக்கல்

இந்நிலையில் லிபியா மீதான கூட்டுப்படை தாக்குதலை யார் முன்னின்று நடத்துவது என்ற சிக்கல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சர்கோசி ஆகியோர் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேட்டோவை கூட்டுப்படைத் தாக்குதலுக்கு தலைமை வகிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே மூன்று நாட்டு தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

நேட்டோ இந்தத் தாக்குதலுக்கு தலைமை வகிப்பதற்கு அந்த அமைப்பிலுள்ள சில அங்கத்துவ நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அதே போன்று நேட்டோ தலைமை வகிப்பதற்கு அரபு நாடுகள் விருப்பாது எனப் பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் நேட்டோவின் பங்கு இருக்கக் கூடாது என அந்த அமைப்பில் இருக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கி விரும்புகிறது.

இந்நிலையில் நேட்டோ மேற்பார்வை செய்யாவிட்டால் தமது படை கூட்டுப் படையில் இருந்து விலகி விடும் என இத்தாலி எச்சரித்துள்ளது. அதேபோன்று கட்டளை இடுவது யார் என்பது தெரியாமல் தமது படை கூட்டுப்படை தாக்குதலில் பங்கேற்காது என நோர்வே கூறியுள்ளது.

இது இவ்வாறு இருக்க இது சர்வதேச படையின் செயற்பாடு என்பதால் தமது தலைமையை எதிர்வரும் காலத்தில் கையளிக்கவுள்ளதாக எல்சல்வடோருக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஜெர்மனியில் இயங்கும் அமெரிக்காவின் ஆபிரிக்க மண்டலத்திற்கான கட்டளைத் தளமே தற்போதைய முன்னணி வகிக்கிறது.

இதனிடையே கூட்டுப்படை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைக் கொண்ட அமைப்பொன்றை இந்தத் தாக்குதல்களுக்கு முன்னிலைப்படுத்தலாம் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜுப் குறிப்பிட்டுள்ளார்

தொடர்ந்தும் மோதல்

இதேவேளை லிபியாவின் பல பகுதிகளிலும் கிளர்ச்சியாளர்களுக்கும் கடாபி ஆதரவுப் படைக்கும் இடையில் நேற்றைய தினத்திலும் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்றன. குறிப்பாக மிசுரடா, சின்டான் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான பெங்காஸிக்கு அண்டிய பகுதியான அஜபியா பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் இயந்திர கோளாறு காரணமாக நேற்று முன்தினம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லிபிய கிழக்குப் பகுதியில் விழுந்து வெடித்த அமெரிக்க தாக்குதல் விமானத்தின் இரண்டு அமெரிக்க விமானப்படை விமானிகளும் உயிருடன் காப்பாற்றப் பட்டுள்ளதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com