|
||||
|
வடக்கின் உண்மை
நிலையை தெளிவுபடுத்தும்
தொகை மதீப்பீட்டு
அறிக்கை
ஜெனீவாவில்
இறுதிக் கட்ட
யுத்தத்தின்போது
40 ஆயிரம் பொதுமக்கள்
கொல்லப்பட்டதாக
கூறப்படும்
குற்றச்சாட்டு
தொடர்பிலான
உண்மை நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக
வடக்கில்
மேற்கொள்ளப்பட்ட
முக்கிய தொகை மதிப்பீட்டு
அறிக்கையை
ஜெனீவாவில்
அங்கத்துவ
நாடுகளிடையே
பகிர்ந்தளித்து
அறிவூட்ட
நடவடிக்கை
எடுத்துள்ளோம்
என பதில்
ஊடகத்துறை
அமைச்சர்
லக்ஷ்மன்
யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அங்கத்துவ நாடுகளில்
மனமாற்றம்
ஏற்பட்டு
அவை இலங்கைக்கு
ஆதரவாக வெளிப்படையாக
கருத்துக்
கூறி வருவதாக
கூறிய அவர், இலங்கையில்
மனித உரிமை
மீறல், ஆட்கடத்தல்
போன்ற நிலைமை கிடையாது என பிரித்தானியா
நற்சான்றிதழ்
வழங்கியுள்ளது
வரவேற்கத்தக்கது
என்று குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும்
ஊடகவியலாளர்
மாநாட்டில்
ஊடகவியலாளர்கள்
எழுப்பிய
கேள்விக்குப்
பதிலளித்த
அவர் மேலும்
கூறியதாவது;
இலங்கை தொடர்பான தவறான குற்றச்சாட்டுகள்,
தெளிவின்மை
என்பவற்றுக்கு
தனித்தனியாகவும்
கூட்டாகவும்
எமது தூதுக்குழு
அறிவூட்டி
வருகிறது. வடக்கு, கிழக்கின்
தற்போதைய
நிலைமை தொடர்பில்
அங்கு சுயாதீனமாக
தகவல்கள்
திரட்டப்பட்டு
அறிக்கை தயாரிக்கப்பட்டது.
1981
ன் பின்
நடந்த இந்த புள்ளி
விபரங்களின்
மூலம் காணாமல் போனதாகவும்
கொல்லப்பட்டதாகவும்
கடத்தப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படும்
குற்றச்சாட்டுகளுக்கு
பதில் வழங்கப்பட்டுள்ளது.
40 ஆயிரம்
பேர் இறுதிக்
கட்ட யுத்தத்தில்
இறந்ததாக
குற்றஞ்சாட்டப்பட்டாலும்
2009 ஜனவரி முதல் மே
மாதம் வரை சுகவீனம்,
முதுமை உட்பட பல்வேறு
காரணங்களினால்
8998 பேரே இறந்துள்ளனர்.
இப்பகுதியில் 90 சதவீதத்திற்கு
மேல் கல்வி
நடவடிக்கை
நடைபெறுகிறது. 481 குடும்பங்கள்
மட்டுமே மீள்குடியேற்றப்பட
வேண்டியுள்ளது.
இந்த விடயங்கள்
குறித்து
ஜெனீவாவில்
ஏனைய நாடுகளை
அறிவூட்டி
வருகிறோம்.
பிரித்தானிய ஆதரவு
52
இலங்கையரை
நாடு கடத்த
எடுத்த நடவடிக்கையினூடாக
பிரித்தானியா
சிறந்த செய்தியொன்றை
கூறியுள்ளது. இலங்கையில் சுமுகமான
சூழ்நிலை
உள்ளதால்
இலங்கைக்குத்
திரும்ப அங்குள்ள இலங்கையருக்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக
நீதிமன்றம்
சென்றவர்களில்
52 பேரே இலங்கைக்கு
திருப்பி
அனுப்பப்பட்டனர்.
இலங்கை மீது கூறப்படும்
குற்றச்சாட்டுகளை
பிரித்தானியா
மறுத்திருப்பது
தற்போதைய
சூழ்நிலையில்
இலங்கைக்கு
கிடைத்த சிறந்த நற் சான்றிதழாகும்.
இது தவிர அவுஸ்திரேலிய
எம்.பி. க்களும் இலங்கைக்கு
ஆதரவாக கருத்துக்
கூறியுள்ளனர்.
அவுஸ்திரேலிய- இலங்கை
பாராளுமன்ற
குழு கூட்டத்தில்
வடக்கின்
உண்மை நிலை குறித்து
விளக்கப்பட்டது.
வட பகுதிக்கு
நேரில் வந்து உண்மை
நிலைமைகளை
அறிந்த கிரிஸ் ஹெயாஸ் வடக்கு நிலைமை குறித்து பாராட் டிப் பேசியுள்ளார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு
எதிராக கொண்டுவர உள்ள பிரேரணையை
தோற்கடிக்க
நாம் முழு
முயற்சி செய்து வருகிறோம்.
அணிசேரா நாடுகள்
உட்பட பல நாடுகள்
இலங்கைக்கு
ஆதரவு தெரிவித்துள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை
அமுல்படுத்துவது
குறித்து
சர்வதேச சமூகம் எமக்கு அழுத்தம் தர தேவையில்லை. நாம் அதிலுள்ள சிபார்சுகளை
அமுல்படுத்தி
வருகிறோம்.
நாட்டின் நிர்வாகக்
கட்டமைப்பினூடாக
அதனை செயற்படுத்த
ஆவன செய்து
வரும் அதேவேளை தேவை ஏற்படின்
பாராளுமன்றத்திற்கும்
எடுத்துச்
செல்வோம்.
இதற்கு கால அவகாசம் தேவை.
நாட்டு மக்கள் அரசை மாற்றக்
கோரவில்லை. இங்கு
உள்ளக பிரச்சினை
கிடையாது.
எனவே, அரசை கவிழ்க்க மேலைத்தேய
நாடுகளுக்கு
இடமளிக்க
முடியாது.
நாட்டிற்காக மக்கள்
ஒன்றுபட்டுள்ளனர்.
செனல்-4
அலைவரிசை
மற்றொரு வீடியோவை வெளியீட்டாலும்
அதனால் எமக்கு பாதிப்பு ஏற்படாது. அந்த நிறுவனம் போலியான வீடியோக்களையே
வெளியிடுகிறது
என்பதை நிரூபித்துள்ளதால்
அதன் நம்பகத்தன்மை
குறைந்துள்ளது.
ஜெனீவாவில் எமக்கு
வெற்றி கிடைக்கும்
என நம்புகிறோம்
என்றார்.
பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்:
இலங்கைக்கு எதிரான
அமெரிக்காவின்
பிரேரணையை
தோற்கடிப்பதற்கு
பூரண ஒத்துழைப்பு
வழங்குவதாக
கிரிகிஸ்தான்,
கியூபா, ஈக்குவடோர்,
ரஷ்யா மற்றும் அணிசேரா நாட்டு அமைப்பு என்பன உறுதியளித்துள்ளன.
இதேவேளை கற்றுக்கொண்ட
பாடங்கள்
மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
விதந்துரைகளை
செயற்படுத்துவது
தொடர்பாகவும்
அரசாங்கம்
முன்னெடுக்க
திட்டமிட்டுள்ள
மனித உரிமை
மற்றும் நல்லிணக்கம்
தொடர்பான
செயற்திட்டங்கள்
குறித்தும்
இலங்கைத்
தூதுக்குழு
நேற்று முக்கிய கூட்டமொன்றை
ஜெனீவாவில்
ஒழுங்கு செய்திருந்ததாக
பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ் தினகரனுக்கு
கூறினார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டின்
ஆரம்ப அமர்வுகள்
கடந்த மாதம் 27ம் திகதி ஆரம்பமாகி
நேற்றுடன்
நிறைவடைந்தன.
இங்கு உரையாற்ற
பல நாடுகளுக்கு
அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கியூபா மற்றும்
கிர்கிஸ்தான்
வெளிவிவகார
அமைச்சர்களும்
ரஷ்ய பிரதி
வெளிவிவகார
அமைச்சரும்
மனித உரிமை
பேரவைக் கூட்டத்தில்
இலங்கைக்கு
ஆதரவாக உரையாற்றினர்.
இதேவேளை நேற்று முன்தினம்
அணிசேரா நாடுகளின்
கூட்டமொன்று
எகிப்தின்
தலைமையில்
இடம்பெற்றது. இங்கு
இலங்கைத்
தூதுக்குழுவின்
கற்றுக்கொண்ட
பாடங்கள்
மற்றும் நல்லிணக்க
செயற்பாடுகள்
குறித்து
விளக்கினர்.
அமெரிக்காவின் முயற்சியை
அணிசேரா நாடுகள் தோற்கடிக்க
வேண்டும்
என இங்கு
கியூபா யோசனையொன்றை
முன்வைத்தது.
இதனை ஈக்குவடோர்
ஆமோதித்தது.
மேற்படி தீர்மானம்
ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும்
பிரதி அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில்
அணி சேரா
நாடுகளின்
அமைப்பு நேற்று அறிக்கையொன்றை
வெளியிட திட்டமிட்டிருந்தது.
மனித உரிமை
பேரவையில்
அங்கம் வகிக்கும்
நாடுகளையும்
ஏனைய நாடுகளையும்
அறிவூட்டும்
கூட்டத்தின்
போது புகைப்படங்கள்,
வீடியோக்கள்
என்பவற்றை
காட்சிப்படுத்தவும்
நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
நாடுகளுக்கு தமது சந்தேகங்களை
தீர்த்துக்கொள்ளவும்
சந்தர்ப்பம்
வழங்கப்பட்டதாக
அறிவிக்கப்படுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின்
சிபார்சுகளை
செயற்படுத்த
கால அவகாசம்
தேவை எனவும்
அதனை அமுல்படுத்த
6 அமைச்சர்கள்
கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். எனவும் சக நாடுகளுக்கு
இலங்கை அறிவூட்டியது.
இலங்கைக்குழு இன்று நாடு
திரும்ப உள்ளதோடு இம்மாத நடுப்பகுதியில்
அது மீண்டும்
ஜெனீவா செல்ல உள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |